அசத்தல் டிசைனில் வரும் டாடா கைட்-5 செடான் காரின் நாமகரணம் வெளியீடு!

Written By:

4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் வடிவமைக்கப்பட்ட காம்பேக்ட் செடான் கார்களுக்கான வரவேற்பு அறிந்ததே. இந்த செக்மென்ட்டில் இப்போது எக்கச்சக்க மாடல்கள். இந்த நிலையில், இந்த செக்மென்ட்டில் புதிய மாடலை களமிறக்க உள்ளது டாடா மோட்டார்ஸ்.

டாடா கைட்-5 செடான் காருக்கு புதிய பெயர் சூட்டியது டாடா!

கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த கைட்-5 கான்செப்ட் மாடலின் அடிப்படையில் மேம்படுத்தப்பட்டு வரும் இந்த புதிய கார், மிக ஸ்டைலாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.

டாடா கைட்-5 செடான் காருக்கு புதிய பெயர் சூட்டியது டாடா!

அதாவது, போட்டியாளர்களிடத்தில் இருந்து சற்றே வேறுபடுத்தப்பட்ட கூரை மற்றும் பின்புற அமைப்புடன் வருகிறது. இதனால், இந்த காரை ஸ்டைல்பேக் என்ற ரக மாடலாக அறிமுகம் செய்கிறது டாடா மோட்டார்ஸ்.

டாடா கைட்-5 செடான் காருக்கு புதிய பெயர் சூட்டியது டாடா!

இதுவரை இந்த கார் டாடா கைட்-5 என்ற பெயரிலேயே குறிப்பிடப்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்த காரின் தயாரிப்பு நிலை மாடலுக்கு டிகோர் என்ற பெயரிட்டுள்ளது டாடா மோட்டார்ஸ். இதுகுறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், இதன் ஸ்டைலான பின்புற டிசைனை குறிக்கும் வகையில் ஸ்டைல்பேக் என்ற ரக மாடலாக அடையாளப்படுத்தி உள்ளது டாடா மோட்டார்ஸ்.

டாடா கைட்-5 செடான் காருக்கு புதிய பெயர் சூட்டியது டாடா!

இந்த கார் டாடா டியோகா ஹேட்ச்பேக் காரின் அடிப்படையிலான செடான் மாடலாக இருந்தாலும் கூட, மிகவும் சிறப்பான டிசைன் கொண்டதாக வேறுபடுத்தப்பட்டு இருக்கிறது. அதாவது, பிற மாடல்களை போன்று பூட் ரூம் பகுதியை தனியாக சேர்த்தது போல இல்லாமல் இருப்பதே சிறப்பு.

டாடா கைட்-5 செடான் காருக்கு புதிய பெயர் சூட்டியது டாடா!

டாடா டியாகோ காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.05 லிட்டர் டீசல் எஞ்சின் இந்த காரில் பயன்படுத்தப்பட உள்ளது. மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

டாடா கைட்-5 செடான் காருக்கு புதிய பெயர் சூட்டியது டாடா!

இந்த காரில் ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல விசேஷ சாதனங்கள் இடம்பெற உள்ளன. மேலும், மிக சவாலான விலையில் அறிமுகம் செய்யவும் டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டு இருக்கிறது.

டாடா கைட்-5 செடான் காருக்கு புதிய பெயர் சூட்டியது டாடா!

இதனால், இந்த காரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த கார் அடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய டாடா கைட்-5[டிகோர்] காரின் படங்கள்!

புதிய டாடா கைட்-5 செடான் காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
Tata Motors has revealed the name for its upcoming compact sedan based on the Kite 5 concept from the 2016 Auto Expo.
Story first published: Thursday, February 9, 2017, 13:25 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark