புதிய டாடா நெக்ஸான் காரில் இருக்கும் 5 முக்கிய அம்சங்கள்!

Written By:

காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் வர இருக்கும் புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஆவலைத் தூண்டி இருக்கிறது.

போட்டியாளர்களிடத்தில் இருந்து வேறுபட்ட டிசைன், நவீன தொழில்நுட்ப வசதிகள், சக்திவாய்ந்த எஞ்சின் ஆப்ஷன்களுடன் மிக சவாலான விலையில் வருகை தரும் என எதிர்பார்க்கப்படுவதும் ஆவல் அதிரித்து வருவதற்கு காரணம்.

புதிய டாடா நெக்ஸான் காரில் இருக்கும் 5 முக்கிய அம்சங்கள்!

காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் முதல்முறையாக பல புதிய அம்சங்களை புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி பெற்றிருக்கிறது.

அதில், குறிப்பிடத்தக்க 5 முக்கிய விஷயங்களை இந்த காரை வாங்க திட்டமிட்டிருப்பவர்களின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்காக வழங்குகிறோம்.

Recommended Video
2017 Mercedes-Benz GLC AMG 43 Coupe Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
 1. மல்டி டிரைவிங் ஆப்ஷன்

1. மல்டி டிரைவிங் ஆப்ஷன்

முதல்முறையாக மல்டி டிரைவ் ஆப்ஷனுடன் புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த காரில் ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என்ற மூன்று விதமான டிரைவிங் ஆப்ஷன்கள் இருக்கின்றன. எஞ்சின் செயல்திறனை விருப்பத்திற்கு ஏற்றவாறு, மாற்றிக் கொள்வதற்குஇந்த வசதி துணையாக இருக்கும். இதற்காக டயல் ஒன்று கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஈக்கோ என்ற ஆப்ஷன் அதிக எரிபொருள் சிக்கனத்தை பெற உதவும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் ஓட்டுவதற்கு சிட்டி என்கிற ஆப்ஷன் சிறப்பானதாக இருக்கும். ஸ்போர்ட் என்கிற ஆப்ஷன் மூலமாக அதிக செயல்திறனை பெற வழிவகுக்கும்.

 2. தொடுதிரை அமைப்பு

2. தொடுதிரை அமைப்பு

இந்த செக்மென்ட்டில் முதல்முறையாக ஃப்ளோட்டிங் தொடுதிரை அமைப்பு டாடா நெக்ஸான் காரில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 6.5 இன்ச் HD தொடுதிரை மிக துல்லியமானதாக இருக்கும். சொகுசு கார்களை போன்று, சென்டர் கன்சோல் மேல்புறத்தில் டேஷ்போர்டின் நடுநாயகமாக அமைக்கப்பட்டு இருப்பது சிறப்பு.

இந்த தொடுதிரையை ஓட்டுனர் எளிதாக கையாள முடியும் என்பதால், கவனக்குறைவை தவிர்க்க முடியும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவிக்கிறது.

3. சக்திவாய்ந்த எஞ்சின்கள்

3. சக்திவாய்ந்த எஞ்சின்கள்

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் ரெவோடார்க் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த இரண்டு எஞ்சின்களுமே அதிகபட்சமாக 108.5 பிஎச்பி பவரை அளிக்கும் திறன் வாய்ந்தது.

புதிய டாடா நெக்ஸான் காரில் இருக்கும் 5 முக்கிய அம்சங்கள்!

புதிய டாடா நெக்ஸான் கார் இந்த கார் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் வருகிறது. ஆட்டோமேட்டிக் மாடல் பின்னர் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4. ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

4. ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

ஹார்மன் நிறுவனம் தயாரித்து வழங்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் புதிய டாடா நெக்ஸான் காரில் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஹோம் தியேட்டர் போன்ற மிக உயர்தர ஒலி தரத்தை வழங்கும் 8 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேர்களை இந்த இன்ஃபோடெயின்மென்ட் சப்போர்ட் செய்யும்.

5. சென்டர் கன்சோல்

5. சென்டர் கன்சோல்

சொகுசு கார்களில் இருப்பது போன்ற உயர்தர அமைப்புடன் கூடிய சென்டர் கன்சோல் வடிவமைப்பு வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும். மேலும், கியர் லிவருக்கு பின்னால் மல்டி டிரைவ் ஆப்ஷனுக்கான டயலும், அதன் பின்புறத்தில் ஸ்டோரேஜ் வசதியும் இருக்கிறது. இந்த ஸ்டோரேஜ் பகுதியை ஸ்லைடிங் முறையில் திறந்து மூடும் அமைப்பும் சிறப்பானதாக கூற முடியும்.

புதிய டாடா நெக்ஸான் காரில் இருக்கும் 5 முக்கிய அம்சங்கள்!

வரும் பண்டிகை காலத்தில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், போட்டியாளர்களுக்கு சவால் தரும் விலையில் இந்த புதிய டாடா நெக்ஸான் கார வர இருப்பதும், இதன் டிசைனும் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Tata Motors Reveals Top Five Features of the Tata Nexon.
Please Wait while comments are loading...

Latest Photos