Subscribe to DriveSpark

”மாட்டோம்... மாட்டோம்... நேனோ காரை கைவிடமாட்டோம்” டாடா மோட்டார்ஸ் திட்டவட்டம்..!!

Written By:

டாடாவின் நானோ கார்களுக்கான தயாரிப்பு பணிகள் தொடர்ந்து நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டாடா கூறியுள்ள காரணம், சுவாரஸ்யமாக உள்ளது.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
நேனோ கார் உற்பத்தி பற்றி டாடா எடுத்த புதிய முடிவு..!

இதுவரை டாடா தயாரித்த கார்களில், அது உணர்வுபூர்வமான நெருக்கத்துடன் ஒரு காரை பார்க்கிறது என்றால் அது நேனோ மாடல் தான்.

அதனாலே நேனோ கார்கள் டாடாவிற்கான சிறப்பாக இந்திய ஆட்டோமொபைல் துறையில் அடையாளப்படுத்தப்படுகிறது.

நேனோ கார் உற்பத்தி பற்றி டாடா எடுத்த புதிய முடிவு..!

அனைத்து தரப்பு மக்களும் எளிதாக வாங்கக்கூடிய விலையில் தான் நேனோ காரில் மதிப்பு இந்தியாவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Recommended Video
Datsun rediGO Gold 1.0-Litre Launched In India | In Tamil- DriveSpark தமிழ்
நேனோ கார் உற்பத்தி பற்றி டாடா எடுத்த புதிய முடிவு..!

இத்தனை சிறப்புகள் இருந்தும் டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடாவால் உருவாக்கப்பட்ட மாடல் என்பதில் தான் மேற்கூறிய அனைத்து விஷயங்களுமே அடங்கி உள்ளது.

நேனோ கார் உற்பத்தி பற்றி டாடா எடுத்த புதிய முடிவு..!

கார்களை வாங்க விரும்புபவர்கள் பலரும் ஹேட்ச்பேக் மாடல்களை கடந்து தான் மற்ற மாடல்களை பார்ப்பார்கள்.

அப்படி டாடாவிற்கான ஹேட்ச்பேக் வரிசையில் இருக்கும் ஒரே மாடல் நேனோ கார் தான் என்பது இங்கு மிக முக்கியம்.

நேனோ கார் உற்பத்தி பற்றி டாடா எடுத்த புதிய முடிவு..!

இன்று இந்தியாவில் ஹேட்ச்பேக் சந்தை அதிகரித்து வருகிறது. அதனால் டாடாவும் நேனோவை விடுவதாக இல்லை என்று கூறுகிறார் டாடாவின் செய்தி தொடர்பார்களில் ஒருவர்.

நேனோ கார் உற்பத்தி பற்றி டாடா எடுத்த புதிய முடிவு..!

டாடா தயாரிக்கும் ஒரு பொருள், சந்தையில் எவ்வாறு மதிப்பிடப்படுகிறது என்பதை தொடர்ந்து ஆய்வு செய்யப்படும். அதை மாதந்தோறும் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நேனோ கார் உற்பத்தி பற்றி டாடா எடுத்த புதிய முடிவு..!

அதை வைத்துதான் தற்போது டாடா தனது ஹேட்ச்பேக் செக்மென்ட் விற்பனையில் நேனோ காரை தொடர்ந்து தயாரிக்க முடிவு செய்திருக்கிறது.

நேனோ கார் உற்பத்தி பற்றி டாடா எடுத்த புதிய முடிவு..!

இருந்தாலும் இந்தியாவில் நேனோ மாடலுக்கு எதிர்காலம் என்று உள்ளதா என்பது பல தரப்பினர் தொடர்ந்து எழுப்பி வரும் கேள்வி.

இதை கருத்தில் கொண்டு நேனோ காரை எதிர்கால தலைமுறையினருக்கான மாடலாக மாற்ற டாடா தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது.

நேனோ கார் உற்பத்தி பற்றி டாடா எடுத்த புதிய முடிவு..!

குறிப்பாக விரைவில் நேனோ மின்சார ஆற்றல் கொண்ட காராக களமிறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான சோதனை ஓட்டமும் தமிழகத்தின் கோவையில் நடைபெற்று வருகிறது.

நேனோ கார் உற்பத்தி பற்றி டாடா எடுத்த புதிய முடிவு..!

மின்சார நேனோ கார், தற்போது பயன்பாட்டில் உள்ள மாடலை போன்ற தோற்றத்தில் தான் உள்ளது. ஆனால் அதனுடைய முன்பக்க ஸ்டிக்கர் மின்சார ஆற்றல் கொண்ட காராக காட்டி விடுகிறது.

நேனோ கார் உற்பத்தி பற்றி டாடா எடுத்த புதிய முடிவு..!

சமீபத்தில் டாடா நெக்ஸான் கார் வெளியிடும் நிகழ்ச்சியில், டாடா பயணிகள் கார் பிரிவிற்கான தலைவர் மாயான்க் பாரீக் பேசும்போது,

நேனோ கார் உற்பத்தி பற்றி டாடா எடுத்த புதிய முடிவு..!

உள்நாட்டு உற்பத்தியில் முதல் மூன்று இடங்களை பிடிக்க, டாடா உத்வேகத்துடன் உழைத்து வருவதாக தெரிவித்தார்.

மேலும், இங்கிலாந்தில் டாடாவின் துணை நிறுவனமான டிஎம்இடிசி, டாடா டியாகோ மற்றும் போல்டு மாடல்களை மின்சார ஆற்றலில் தயாரித்துள்ளதாக கூறினார்.

நேனோ கார் உற்பத்தி பற்றி டாடா எடுத்த புதிய முடிவு..!

டாடாவின் பெருமைமிகு தயாரிப்பாக உள்ள நேனோ காரின் விற்பனை சமீப காலமாக சரிவை சந்தித்து வருகிறது. இதை வலுப்படுத்த பல்வேறு கட்ட முயற்சிகளையும் டாடா மேற்கொண்டு வருகிறது.

நேனோ கார் உற்பத்தி பற்றி டாடா எடுத்த புதிய முடிவு..!

அதில் முதற்கட்டமாக நடப்பது தான் நேனோவை மின்சார ஆற்றலுக்கு மாற்றும் முயற்சி. இந்த பணி டாடாவின் உணர்வுபூர்வமான நேனோ காருக்கு மீண்டும் இந்திய சந்தையில் சந்தை மதிப்பை பெற்று தருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

English summary
Read in Tamil: Indian automaker Tata Motors has stated that it will continue the production of its mini hatchback, the Nano. Click for Details...
Story first published: Wednesday, September 27, 2017, 14:14 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark