காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் கலக்க வரும் புதிய டாடா நெக்ஸான்!

Written By:

புதிய டாடா நெக்ஸான் காரை கொச்சியில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்து வருகிறோம். இதனிடையே, நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், இந்த காரின் முக்கிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், முக்கியமான சில தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் கலக்க வரும் புதிய டாடா நெக்ஸான்!

விலை விபரத்தை தவிர்த்து, புதிய டாடா நெக்ஸான் காரின் முக்கிய அம்சங்களின் விபரங்கள் அனைத்தும் கிடைத்துள்ளன. புதிய டாடா நெக்ஸான் கார் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் மாருதி பிரெஸ்ஸா மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய மாடல்களுடன் போட்டி போட இருக்கிறது.

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் கலக்க வரும் புதிய டாடா நெக்ஸான்!

புதிய டாடா நெக்ஸான் கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய இம்பேக்ட் டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.போட்டியாளர்களைவிட கவர்ச்சியான டிசைன் வாடிக்கையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் கலக்க வரும் புதிய டாடா நெக்ஸான்!

புதிய டாடா நெக்ஸான் கார் 3,994மிமீ நீளமும், 1,811 அகலமும், 1,607மமிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 2,498மிமீ வீல் பேஸ் கொண்டது.

Recommended Video
Tata Nexon: Tata's New SUV (Nexon) For India | First Look - DriveSpark
காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் கலக்க வரும் புதிய டாடா நெக்ஸான்!

புதிய டாடா நெக்ஸான் கார் 209மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக இருக்கிறது. இந்த காரில் 350 லிட்டர் கொள்திறன் கொண்ட பொருட்கள் வைப்பதற்கான பூட்ரூம் இடவசதி இருக்கிறது. இந்த காரில் 44லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் கலன் இருக்கிறது.

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் கலக்க வரும் புதிய டாடா நெக்ஸான்!

இந்த காரில் எலக்ட்ரிக் பவர் அசிஸ்ட் நுட்பத்தில் செயல்படும் ரேக் அண்ட் பினியன் ஸ்டீயரிங் வீல் பொருத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் டிஸ்க் பிரேக்குகள், பின்புறத்தில் டிரம் பிரேக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இபிடி., நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்று இருக்கிறது.

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் கலக்க வரும் புதிய டாடா நெக்ஸான்!

டியூவல் ஏர்பேக்குகள், டியூவல் பாத் சஸ்பென்ஷன் அமைப்பு, கார்னர் ஸ்டெபிளிட்டி தொழில்நுட்பம், ரிவர்ஸ் வியூ பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா போன்ற பாதுகாப்பு அம்சங்களும் விலை உயர்ந்த வேரியண்ட்டில் இடம்பெற்றிருக்கின்றன.

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் கலக்க வரும் புதிய டாடா நெக்ஸான்!

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், ரியர் டீஃபாகர், முன்புறம், பின்புறத்திற்கான பனி விளக்குகள் போன்றவையும் இடம்பெற்றிருக்கின்றன.

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் கலக்க வரும் புதிய டாடா நெக்ஸான்!

சொகுசு கார்களில் இருப்பதுபோன்று, 6.5 இன்ச் திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஹார்மன் மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேர்களை இந்த சிஸ்டம் சப்போர்ட் செய்யும்.

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் கலக்க வரும் புதிய டாடா நெக்ஸான்!

இந்த காரில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் இருப்பதுடன் பின்புற பயணிகளுக்கு தனியாக ஏசி வென்ட்டுகளும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் கலக்க வரும் புதிய டாடா நெக்ஸான்!

புதிய டாடா நெக்ஸான் கார் சக்திவாய்ந்த பெட்ரோல், டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வர இருக்கிறது. பெட்ரோல் மாடலில் 108.5பிஎச்பி பவரை அளிக்க வல்ல மூன்று சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் ரெவோட்ரான் டர்போசார்ஜ்டு எஞ்சினும், டீசல் மாடலில் 108.5பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சினும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் கலக்க வரும் புதிய டாடா நெக்ஸான்!

இந்த கார் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது. மேலும், ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என மூன்றுவிதமான செயல்திறனை வெளிப்படுத்தும் விதத்தில் எஞ்சின் இயக்கத்தை மாற்றிக் கொள்வதற்கான வசதியும் இடம்பெற்றிருக்கிறது.

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் கலக்க வரும் புதிய டாடா நெக்ஸான்!

புதிய டாடா நெக்ஸான் காரின் பெட்ரோல் மாடல் ரூ.6.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்தும், டீசல் மாடல் ரூ.7.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Features and Specification Details Of Tata Nexon Released.
Story first published: Friday, July 28, 2017, 8:30 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos