இந்த 7 விஷயங்களில் மாருதி பிரெஸ்ஸாவைவிட டாடா நெக்ஸான் சிறப்பானது!

Written By:

போட்டியாளர்களைவிட மிக குறைவான விலையில் அசத்தலான சிறப்பம்சங்களுடன் புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு நேர் போட்டியாளராக கருதப்படும் மாருதி பிரெஸ்ஸாதான் இப்போது மார்க்கெட் லீடர்.

இந்த நிலையில், மாருதி பிரெஸ்ஸாவைவிட பல முக்கிய அம்சங்களில் டாடா நெக்ஸான் முன்னிலை பெறுகிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டிசைன்

டிசைன்

டாடா நெக்ஸான் காரின் டிசைன் மிகச் சிறப்பானதாக வந்திருக்கிறது. இந்த மார்க்கெட்டில் ஒரு புதுமையான டிசைன் தாத்பரியங்களை கொண்ட காம்பேக்ட் எஸ்யூவி மாடலாக இருக்கிறது. சிறந்த முக லட்சணம் கொண்டிருப்பதோடு, ஒட்டுமொத்த டிசைனுமே கவர்வதாகவே இருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

மாருதி பிரெஸ்ஸா கார் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. ஆனால், டாடா நெக்ஸான் கார் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் 108 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.2 லிட்டர் எஞ்சினும், டீசல் மாடலில் 108 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.5 லிட்டர் எஞ்சினும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

Recommended Video - Watch Now!
Jeep Compass Full Details In Tamil - DriveSpark தமிழ்
இந்த 7 விஷயங்களில் மாருதி பிரெஸ்ஸாவைவிட டாடா நெக்ஸான் சிறப்பானது!

மற்றொரு போட்டியாளரான ஈக்கோஸ்போர்ட்டில் 98.6 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.5 லிட்டர் எஞ்சினும், பிரெஸ்ஸாவில் 89 பிஎச்பி பவரை வழங்கும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினும் இருக்கிறது. இந்த செக்மென்ட்டில் மிகவும் பவர்ஃபுல் மாடலாக இருப்பதும் இதன் சிறப்பு.

மல்டி டிரைவிங் மோடு

மல்டி டிரைவிங் மோடு

4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட எஸ்யூவி மார்க்கெட்டில் முதல்முறையாக மல்டி டிரைவ் மோடு எனப்படும் எஞ்சின் இயக்கத்தை மூன்று நிலைகளில் மாற்றிக் கொள்ளும் வசதியும் டாடா நெக்ஸான் காரில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று வித நிலைகளில் எஞ்சின் இயக்கத்தை ஓட்டுனர் மாற்றிக் கொள்ள முடியும்.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

போட்டியாளர்களைவிட சிறப்பம்சங்களிலும் சிறப்பான மாடலாக டாடா நெக்ஸான் இருக்கிறது. எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய சிக்னேச்சர் டெயில் லைட்டுகள் சிறப்பு. உட்புறத்தில் ப்ளோட்டிங் ஸ்க்ரீன் எனப்படும் சொகுசு கார்களில் இருப்பது போன்ற 6.5 அங்குல தொடுதிரை டேஷ்போர்டில் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும்.

மியூசிக் சிஸ்டம்

மியூசிக் சிஸ்டம்

மேலும், 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஹார்மன் மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. கைகடிகாரம் போல கட்டிக் கொள்ளும் ஸ்மார்ட் சாவியும் சிறப்பானது. இதன்மூலமாக, கையில் சாவி கொத்தை வைத்திருக்கும் அவசியம் இல்லை. காரை திறக்க, பூட்டுவதற்கும், புஷ் பட்டன் மூலமாக ஸ்டார்ட் செய்வதற்கும் இந்த சாவி பயன்படுகிறது.

ஸ்டோரேஜ் வசதி

ஸ்டோரேஜ் வசதி

டாடா நெக்ஸான் காரில் உட்புறத்தில் 31 ஸ்டோரேஜ் வசதிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. மாருதி பிரெஸ்ஸா காரில் போதுமான அளவு இருந்தாலும், நெக்ஸான் காரை ஒப்பிடும்போது குறைவான ஸ்டோரேஜ் வசதிகளே உள்ளன.

சவாலான விலை

சவாலான விலை

மாருதி பிரெஸ்ஸா கார் டீசல் மாடலில் மட்டுமே கிடைக்கிறது. எனவே, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் டாடா நெக்ஸான் காரின் ஆரம்ப விலைகளை ஒப்பிடும்போது, கிட்டத்தட்ட 1.3 லட்சம் வரை நெக்ஸான் காரின் விலை குறைவாக இருக்கிறது. மாருதி பிரெஸ்ஸா மற்றும் டாடா நெக்ஸான் காரின் டீசல் மாடல்களின் விலையை ஒப்பிடும்போது, ரூ.53,000 வரை குறைவாக இருக்கிறது.

 இந்த 7 விஷயங்களில் மாருதி பிரெஸ்ஸாவைவிட டாடா நெக்ஸான் சிறப்பானது!

மாருதி நிறுவனத்தின் வலுவான சர்வீஸ் நெட்வொர்க், விற்பனைக்கு பின் சிறந்த சேவை போன்றவையும், நம்பகமான மாடலாகவும் மாருதி பிரெஸ்ஸா கார ்மாறி இருக்கிறது. ஆனால், கூடுதல் சிறப்பம்சங்களுடன் டாடா நெக்ஸான் கார் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சாய்ஸாக இருக்கும் என்று கூறலாம்.

English summary
Tata Nexon better than Maruti Brezza? We compare Tata Nexon vs Maruti Brezza price, mileage, features, petrol & diesel variants.
Story first published: Monday, September 25, 2017, 8:58 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark