டாடா டியாகோ காருக்கு இமாலய புக்கிங்... வெற்றிக்கான காரணங்கள்!

Written By:

பொதுவாக மாருதி கார்கள்தான் புக்கிங்கில் பல சாதனைகளை படைத்து அசத்தும். அறிமுகம் செய்யப்பட்டபோது ஸ்விஃப்ட், டிசையர் உள்ளிட்ட கார்கள் லட்சத்தை தாண்டி புக்கிங்குகளை பெற்று அசத்தின. அடுத்து ரெனோ க்விட் இந்த சாதனையை படைத்தது.

 மாருதி புருவத்தை உயர்த்திய டாடா டியாகோ காரின் புக்கிங்... !!

இந்த நிலையில், டாடா டியாகோ காரும் இப்போது ஒரு லட்சம் முன்பதிவு க்ளப்பில் இணைந்துள்ளது. ஆம். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் தற்போது ஒரு லட்சம் முன்பதிவுகளுக்கு மேல் பெற்று அசத்தி இருக்கிறது.

 மாருதி புருவத்தை உயர்த்திய டாடா டியாகோ காரின் புக்கிங்... !!

மேலும், 65,000க்கும் அதிகமான டியாகோ கார்கள் டெலிவிரி கொடுக்கப்பட்டு இருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. டியாகோ காருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு நிச்சயம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு பெரும் உற்சாகத்தை அளித்து, வர்த்தகத்தையும் தூக்கி நிறுத்தி உள்ளது.

 மாருதி புருவத்தை உயர்த்திய டாடா டியாகோ காரின் புக்கிங்... !!

டாடா மோட்டார்ஸ் மீது பல மோசமான விஷயங்கள் வாடிக்கையாளர்கள் மனதில் பதிந்திருந்த நிலையில், அதனையெல்லாம் தகர்த்து கவுரவத்தை பெற்றுத் தந்துள்ளது டியாகா கார். டாடா டியாகோ கார் இந்தளவு வரவேற்பை பெற்றதற்கான சில முக்கிய காரணங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 மாருதி புருவத்தை உயர்த்திய டாடா டியாகோ காரின் புக்கிங்... !!

டாடா டியாகோ காரின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் அருமையான டிசைன். பட்ஜெட் கார் வாடிக்கையாளர்களை இதுதாண்டா நம்ம கார் என்று சொல்ல வைக்கும் வைக்கும் அளவுக்கு மிக நேர்த்தியான டிசைன் வெற்றிக்கு முக்கிய காரணம்.

 மாருதி புருவத்தை உயர்த்திய டாடா டியாகோ காரின் புக்கிங்... !!

டிசைன் மட்டும் போதாது என்பது டாடா மோட்டார்ஸ் தனது நீண்ட அனுபவத்தின் அடிப்படையில் உணர்ந்த விஷயம். அதற்காக, டாடா டியாகோ காரில் பல சிறப்பம்சங்களை சேர்ந்திருந்தது.

 மாருதி புருவத்தை உயர்த்திய டாடா டியாகோ காரின் புக்கிங்... !!

இரட்டை வண்ண இன்டீரியர் பயன்படுத்தப்பட்டுள்ளது. டேஷ்போர்டு அமைப்பும் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த காரில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மிக முக்கியமான சிறப்பம்சம். ஹார்மன் நிறுவனம் தயாரித்து வழங்கும் 8 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் நேவிகேஷன் வசதியும் உண்டு.

 மாருதி புருவத்தை உயர்த்திய டாடா டியாகோ காரின் புக்கிங்... !!

டாடா டியாகோ காரில் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 85 பிஎஸ் பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பெட்ரோல் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்களில் கிடைக்கிறது.

 மாருதி புருவத்தை உயர்த்திய டாடா டியாகோ காரின் புக்கிங்... !!

டாடா டியாகோ காரின் டீசல் மாடலில் 1.05 லிட்டர் ரெவோடார்க் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 70 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 மாருதி புருவத்தை உயர்த்திய டாடா டியாகோ காரின் புக்கிங்... !!

பெட்ரோல், டீசல் மாடல்களில் சிட்டி மற்றும் ஈக்கோ என்ற இரண்டு விதமான டிரைவிங் மோடுகள் இருக்கின்றன. இந்த செக்மென்ட்டில் இந்த வசதியுடன் கிடைக்கும் கார் மாடலும் இதுதான் என்பதும் வாடிக்கையாளர்களை ஈர்த்த விஷயமாக கூறலாம்.

 மாருதி புருவத்தை உயர்த்திய டாடா டியாகோ காரின் புக்கிங்... !!

டாடா டியாகோ காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 23.84 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 27.28 கிமீ மைலேஜையும் தருவதாக அராய் சான்றளித்துள்ளது. எனவே, மிகச் சிறந்த எரிபொருள் சிக்கனம் கொண்ட கார் மாடலாகவும் பெயர் பெற்றுள்ளது.

 மாருதி புருவத்தை உயர்த்திய டாடா டியாகோ காரின் புக்கிங்... !!

சிறப்பான டிசைன், வசதிகள், அதிக மைலேஜ், ஏஎம்டி கியர்பாக்ஸ் வசதி போன்றவை மட்டுமில்லாமல், பட்ஜெட் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் மிகச் சரியான விலையில் கிடைக்கிறது. டாடா டியாகோ காரின் பெட்ரோல் மாடல் சென்னையில் ரூ. 3.90 லட்சம் ஆன்ரோடு விலையில் இருந்தும், டீசல் மாடல் ரூ.5.35 லட்சம் ஆன்ரோடு விலையில் இருந்தும் கிடைக்கிறது.

English summary
Tata Tiago Is In High Demand — Achieves 1 Lakh Bookings.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark