டாடா டியாகோ ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

Written By:

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள டாடா டியாகோ காரின் ஏஎம்டி மாடலின் தொழில்நுட்ப விபரங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன. இதுகுறித்து கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா டியாகோ ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

டாடா டியாகோ காரின் ஏஎம்டி மாடல் எக்ஸ்டி மற்றும் எக்ஸ்இசட் என்ற இரு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. முதலில் டாடா டியாகோ காரின் பெட்ரோல் மாடலில் மட்டுமே ஏஎம்டி கியர்பாக்ஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பின்னர், டீசல் மாடலிலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும்.

டாடா டியாகோ ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

டாடா டியாகோ காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு கிடைக்க இருப்பது வாடிக்கையாளர்களிடம் ஆவலைத் தூண்டி உள்ளது. டாடா டியாகோ காரில் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட உள்ளது. இந்த கியர்பாக்ஸ் இத்தாலியை சேர்ந்த மேக்னெட்டி மரெல்லி நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படுகிறது.

டாடா டியாகோ ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

டாடா டியாகோ காரின் பெட்ரோல் மாடலில் 84 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் எஞ்சின் உள்ளது. மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 23.84 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், ஏஎம்டி மாடலும் இதேபோன்று மிகச் சிறப்பான மைலேஜை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

டாடா டியாகோ ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

புதிய டாடா டியோகா காரின் பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலைவிட, புதிய ஏஎம்டி மாடல் ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை கூடுதல் விலை கொண்டதாக இருக்கும்.

டாடா டியாகோ ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

ரெனோ க்விட் ஏஎம்டி மாடல், மாருதி செலிரியோ ஏஎம்டி மற்றும் மாருதி ஆல்ட்டோ கே10 ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்களுடன் புதிய டாடா டியாகோ காரின் ஏஎம்டி மாடல் போட்டி போடும். போட்டியாளர்களைவிட டிசைன், வசதிகள், மைலேஜ், விலை என அனைத்திலும் மிகச் சிறந்த தேர்வாக இருக்கும்.

Source: Team BHP

புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்கள்!

மெர்சலாக வைக்கும் டிசைனில் வந்திருக்கும் புதிய ஹோண்டா சிட்டி காரின் உயர்தர படங்களை கீழே உள்ள கேலரியை க்ளிக் செய்து காணலாம்.

English summary
The Tata Tiago AMT variant will come in petrol model only, and the diesel model is expected later during the products' life cycle.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark