டாடா டியாகோ காரின் குறைவான விலை ஏஎம்டி மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

Written By:

டாடா டியாகோ காரின் குறைவான விலை ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா டியாகோ காரின் குறைவான விலை ஏஎம்டி மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

டாடா டியாகோ காரின் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி எனப்படும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் கிடைக்கிறது. அதேநேரத்தில், டாடா டியாகோ காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலானது விலை உயர்ந்த எக்ஸ்இசட் என்ற ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே கிடைத்து வந்தது.

டாடா டியாகோ காரின் குறைவான விலை ஏஎம்டி மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இதனால், வாடிக்கையாளர்கள் பட்ஜெட்டை கருதி, டாடா டியாகோ காரின் ஏஎம்டி மாடலை எளிதாக தேர்வு செய்ய முடியாத நிலை இருந்தது. இந்த குறையை போக்கும் விதத்தில், தற்போது டாடா டியாகோ காரின் விலை குறைந்த ஏஎம்டி கியர்பாக்ஸ் வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

டாடா டியாகோ காரின் குறைவான விலை ஏஎம்டி மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

எக்ஸ்டிஏ என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் ரூ.4.79 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும். இந்த காருக்கான ஏஎம்டி கியர்பாக்ஸ் இத்தாலியை சேர்ந்த மேக்னெட்டி மரெல்லி நிறுவனத்திடம் இருந்து சப்ளை பெறப்படுகிறது.

டாடா டியாகோ காரின் குறைவான விலை ஏஎம்டி மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

டாடா டியாகோ காரின் பெட்ரோல் மாடலில் அதிகபட்சமாக 84 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்த 1.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

Recommended Video - Watch Now!
2017 Maruti Suzuki Baleno Alpha Automatic Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
டாடா டியாகோ காரின் குறைவான விலை ஏஎம்டி மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

டாடா டியாகோ காரின் இந்த ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலில் 'க்ரீப்' என்று சொல்லப்படும் விசேஷ வசதி இருக்கிறது. இந்த வசதி மூலமாக, ஓட்டுனர் பிரேக் பெடலில் இருந்து ஆக்சிலரேட்டர் பெடலுக்கு காலை மாற்றும்போதும் கார் பின்னோக்கி நகராமல் தடுத்துவிடும். இது மலைச் சாலைகள் மற்றும் மேடான சாலைகளில் செல்லும்போது ஓட்டுனருக்கு மிகச் சிறப்பானதாக இருக்கும்.

டாடா டியாகோ காரின் குறைவான விலை ஏஎம்டி மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

ஓட்டுனர் விருப்பத்திற்கு தக்கவாறு எஞ்சின் செயல்திறனை மாற்றிக் கொள்ளும் வசதியை தரும், டிரைவிங் மோடுகளும் இருக்கின்றன. ஸ்போர்ட் மற்றும் சிட்டி என்ற இந்த இரண்டு வித டிரைவிங் மோடுகள் மூலமாக ஓட்டுனர் விருப்பத்திற்கும், சாலை நிலைகளுக்கும் தக்கவாறு எஞ்சின் இயக்கத்தை மாற்றிக் கொள்ள முடியும்.

டாடா டியாகோ காரின் குறைவான விலை ஏஎம்டி மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

மாருதி சுஸுகி செலிரியோ, ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 ஆட்டோமேட்டிக், மாருதி இக்னிஸ் ஏஎம்டி மற்றும் ரெனோ க்விட் 1.0 லிட்டர் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்களுக்கு இந்த கார் போட்டியை தரும்.

English summary
The Tata Tiago proved to be a worthy competitor in the hatchback segment, and the Tiago XZA AMT variant gave competitors a run for their money. Now, Tata Motors has launched the Tiago XTA AMT variant in India, priced at Rs 4.79 lakh.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark