புதிய டாடா டீகோர் மின்சார காரின் தொழில்நுட்ப விபரங்கள் கசிந்தன!

Written By:

மின்சார கார்களுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வரும் நிலையில், மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் மின்சார கார் மாடல்களை அறிமுகப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன.

புதிய டாடா டீகோர் மின்சார காரின் தொழில்நுட்ப விபரங்கள்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டீகோர் காரின் மின்சார மாடலை வர்த்தக ரீதியில் விற்பனை செய்வதற்கான அராய் நிறுவனத்தின் சான்றை பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான ஆவணங்கள் டீம் பிஎச்பி தளத்தில் வெளியாகி உள்ளன.

புதிய டாடா டீகோர் மின்சார காரின் தொழில்நுட்ப விபரங்கள்!

ஆவணங்களில், டாடா டீகோர் மின்சார கார் அதிகபட்சமாக 40 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. 5 பேர் வரை பயணிக்க முடியும்.

புதிய டாடா டீகோர் மின்சார காரின் தொழில்நுட்ப விபரங்கள்!

டாடா டீகோர் கார் 1,516 கிலோ எடை கொண்டது. மஹிந்திரா வெரிட்டோ மின்சார காரை விட இது 200 கிலோ வரை எடை குறைவானது என்பது கவனிக்கத்தக்கது.

புதிய டாடா டீகோர் மின்சார காரின் தொழில்நுட்ப விபரங்கள்!

புதிய டாடா டீகோர் மின்சார கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 120 கிமீ முதல் 150கிமீ தூரம் வரை பயணிக்கும். எனவே, ஒருமுறை சார்ஜ் செய்தால் வாரம் முழுவதும் அலுவலகம் சென்று வர முடியும்.

புதிய டாடா டீகோர் மின்சார காரின் தொழில்நுட்ப விபரங்கள்!

அதேபோன்று, நகர்ப்புறத்தில் வாடகை கார்களை இயக்கும், டாக்சி ஆபரேட்டர்களுக்கும் இது தோதுவானதாக இருக்கும். ஒருநாளுக்கு ஒருமுறை அல்லது இருமுறை சார்ஜ் செய்தால் போதுமானதாக இருக்கும் என்று நம்பலாம்.

Recommended Video - Watch Now!
[Tamil] Tata Tiago XTA AMT Variant Launched In India - DriveSpark
புதிய டாடா டீகோர் மின்சார காரின் தொழில்நுட்ப விபரங்கள்!

சார்ஜ் செய்வதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும், பேட்டரியை எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தகவல்கள் குறித்த விபரம் இதுவரை தெரியவில்லை.

புதிய டாடா டீகோர் மின்சார காரின் தொழில்நுட்ப விபரங்கள்!

அரசு துறை பயன்பாட்டிற்காக 350 டீகோர் மின்சார கார்களை டாடா மோட்டார்ஸ் இந்த மாதத்திற்குள் சப்ளை செய்ய வேண்டும். அதன்படி, அராய் சான்று அளிக்கப்பட்டிருப்பதால், சப்ளை கொடுக்கும் பணிகள் துவங்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

புதிய டாடா டீகோர் மின்சார காரின் தொழில்நுட்ப விபரங்கள்!

டாடா டீகோர் மின்சார கார் விற்பனைக்கு தயார் நிலையில் இருந்தாலும், முதலாவதாக நானோ மின்சார கார் மாடலை டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய டாடா டீகோர் மின்சார காரின் தொழில்நுட்ப விபரங்கள்!

அதன்பிறகு, டாடா டீகோர் மற்றும் டியாகோ மின்சார கார் மாடல்கள் சந்தைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. 2030ம் ஆண்டிற்குள் முழுவதும் மின்சார கார் பயன்பாட்டை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் தீவிரமாக இருக்கிறது. அதற்கு தக்கவாறு, மின்சார கார் மாடல்களை களமிறக்குவதற்கு டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் ஆயத்தமாகி வருகின்றன.

மேலும்... #டாடா #tata
English summary
Tata Tigor Electric Car Technical Details Leaked.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark