குறைவான விலையில் வரும் புதிய டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் காரின் அறிமுக தேதி வெளியீடு!

Written By:

ஒருவழியாக புதிய மாடல் 3 காரின் அறிமுக தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவிலும் விற்பனைக்கு வர இருக்கும் முதல் டெஸ்லா மாடல் என்பதால், இந்த செய்தி இந்தியர்கள் மத்தியிலும் ஆவலைத் தூண்டியிருக்கிறது.

புதிய மாடல் 3 எலக்ட்ரிக் காரின் அறிமுக தேதி வெளியீடு!

டெஸ்லா எலக்ட்ரிக் கார்களுக்கு இருக்கும் வரவேற்பு பலரும் அறிந்ததே. அதிசெயல்திறன் மிக்க இந்த எலக்ட்ரிக் கார்களில் நவீன தொழில்நுட்ப வசதிகள் நிரம்பி வழிகின்றன. இதனால், சொகுசு கார் தயாரிப்பாளர்களுக்கே இந்த எலக்ட்ரிக் கார்கள் கிலியை ஏற்படுத்தி உள்ளன.

புதிய மாடல் 3 எலக்ட்ரிக் காரின் அறிமுக தேதி வெளியீடு!

இதுவரை விலை அதிகம் என்ற விஷயம் பலருக்கும் டெஸ்லா எலக்ட்ரிக் கார்களை எட்டாக்கனியாக வைத்திருந்தது. இந்த நிலையில், குறைவான விலையில் புதிய மாடல் 3 எலக்ட்ரிக் காரை அறிவித்தது. இந்த காருக்கு இந்தியா உள்பட உலக அளவில் முன்பதிவு பெறப்பட்டது.

புதிய மாடல் 3 எலக்ட்ரிக் காரின் அறிமுக தேதி வெளியீடு!

இந்திய பிரபலங்கள் சிலரும் போட்டி போட்டு இந்த காரை ஆன்லைனில் முன்பதிவு செய்தனர். முன்பதிவு லட்சங்களை கடந்து இமாலய சாதனை படைத்தது. கிட்டத்தட்ட 3.25 லட்சம் பேர் இந்த காருக்கு முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

புதிய மாடல் 3 எலக்ட்ரிக் காரின் அறிமுக தேதி வெளியீடு!

ஆட்டோமொபைல் துறையினரையே இந்த விஷயம் வியக்க வைத்தது. இந்த நிலையில், இந்த கார் வருவது எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த உறுதி செய்யப்படாமல் இருந்தது. இதனால், முன்பதிவு செய்த லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களும், இந்த காரை வாங்குவதற்கு திட்டமிட்டிருப்பவர்களுக்கும் பெரும் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்த நிலையில், ஒருவழியாக தற்போது புதிய மாடல் 3 காரின் அறிமுக தேதி விபரம் வெளியாகி உள்ளது. வரும் 28ந் தேதி புதிய மாடல் 3 எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைமை அதிகாரி எலான் மஸ்க் டிவிட்டர் பதிவு மூலமாக தெரிவித்துள்ளார்.

புதிய மாடல் 3 எலக்ட்ரிக் காரின் அறிமுக தேதி வெளியீடு!

மேலும், வரும் 7ந் தேதி முதல் மாடல் 3 எலக்ட்ரிக் கார் உற்பத்தி பிரிவிலிருந்து வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த காரை டெலிவிரி பெற காத்திருப்பவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

புதிய மாடல் 3 எலக்ட்ரிக் காரின் அறிமுக தேதி வெளியீடு!

டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் காரின் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்பட உள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் 100 கார்களும், செப்டம்பரில் 1,500 கார்களும், டிசம்பர் முதல் மாதத்திற்கு 20,000 கார்கள் என்ற அளவில் உற்பத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

புதிய மாடல் 3 எலக்ட்ரிக் காரின் அறிமுக தேதி வெளியீடு!

முழு அளவிலான உற்பத்தி துவங்கப்பட்டதற்கு பின்னர் 2018ம் ஆண்டில் இந்த காருக்கு முன்பதிவு செய்து காத்திருப்பவர்கள், காரை டெலிவிரி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. மேலும், உற்பத்தி முழு அளவில் துவங்கப்பட்டதற்கு பின்னர், இந்த காருக்கான முன்பதிவு மீண்டும் சூடிபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மாடல் 3 எலக்ட்ரிக் காரின் அறிமுக தேதி வெளியீடு!

புதிய டெஸ்லா மாடல் 3 கார் காம்பேக்ட் செடான் ரகத்தை சேர்ந்த மாடல். இந்த காரில் 5 பெரியவர்கள் பயணிப்பதற்கு ஏதுவான இருக்கை வசதி இருக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 346 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

புதிய மாடல் 3 எலக்ட்ரிக் காரின் அறிமுக தேதி வெளியீடு!

இரண்டு மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டு இருக்கும் இந்த கார் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தை பெற்றிருக்கிறது. இந்த கார் 0- 96 கிமீ வேகத்தை 5.6 வினாடிகளில் எட்டிவிடும். இந்த கார் பல சொகுசு கார் தயாரிப்புகளுக்கு பெரும் தலைவலியை கொடுக்கும்.

மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Tesla boss Elon Musk has finally revealed the launch date of the Model 3. In a series of tweets, Musk revealed that the deliveries would commence from July 28, 2017.
Story first published: Tuesday, July 4, 2017, 12:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark