புதிய டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரின் விலை உள்ளிட்ட விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

உலகையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்க செய்த புதிய டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார் அமெரிக்காவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்!

எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் முத்திரை பதித்த டெஸ்லா கார் நிறுவனம் குறைவான விலை மாடல் 3 காரை உலக அளவில் விற்பனைக்கு அறிவித்தது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்த காருக்கு ஆன்லைனில் முன்பதிவு பெறப்பட்டது.

டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்!

மூன்று லட்சங்களுக்கும் மேல் புக்கிங் செய்யப்பட்ட இந்த மாடல் 3 எலக்ட்ரிக் கார் எப்போது விற்பனைக்கு வரும் என்று முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் ஆவலோடு காத்திருந்தனர். இந்த நிலையில், புதிய டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த கார் இருவிதமான மாடல்களில் விற்பனைக்கு வந்துள்ளது. ஸ்டான்டர்டு மாடலில் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரி மூலமாக

அதிகபட்சமாக 355 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த மாடல் 0-100 கிமீ வேகத்தை 5.6 வினாடிகளில் எட்டிவிடும்.

டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்!

அதிக திறன் வாய்ந்த பேட்டரி பொருத்தப்பட்ட மாடல் 3 காரில் 500 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த மாடல் 0 -100 கிமீ வேகத்தை 5.1 வினாடிகளிலேயே எட்டிவிடும். மணிக்கு 225 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது.

டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டெஸ்லா மாடல் 3 கார் 4,694மிமீ நீளமும், 1,849மிமீ அகலமும், 1,443மிமீ உயரமும் கொண்டது. இந்த கார் 1,475 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது.

டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த புதிய கார் ரியர் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வந்துள்ளது. 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல் 3 கார் தயாரிக்கும் பணிகளும் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்!

வேகத்தை உணரும் திறன் பெற்ற ஸ்டீயரிங் சிஸ்டம் இருப்பது சிறப்பானதாக கூறலாம். முன்புறத்தில் டபுள் விஷ்போன் சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் மல்டிலிங்க் சஸ்பென்ஷன் அமைப்பும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் 18 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. 15.4 இன்ச் திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வைஃபை இன்டர்நெட் வசதி, டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஸ்மார்ட்போன் மூலமாக கதவுகளை திறக்கும் வசதி, கிரெடிட் கார்டு போன்ற கீ ஃபாப், வாய்ஸ் கமாண்ட் வசதி போன்றவை இடம்பெற்று இருக்கின்றன.

டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காருக்கு விசேஷ ஆக்சஸெரீ பேக்கேஜும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 12 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஸ்டீரியோ சிஸ்டம், போன் சார்ஜர்கள், அட்ஜெஸ்ட் வசதியுடன் முன் இருக்கைகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மாடல் 3 கார் நாட்ச்பேக் ஸ்டைலில் வடிவமைப்பு பெற்றுள்ளது. முன்புறம், பின்புறத்தில் இரண்டு பூட் ரூம்கள் இருக்கின்றன. மொதத்தில் வடிவமைப்பு மிகவும் எளிமையானதாக கூறலாம்.

டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்!

ஸ்டான்டர்டு பேட்டரி பொருத்தப்பட்ட மாடல் இந்திய மதிப்பில் ரூ.22.45 லட்சம் மதிப்பிலும், உயர்திறன் பெற்ற பேட்டரி பொருத்தப்பட்ட மாடல் ரூ.28.22 லட்சம் மதிப்பிலும் அங்கு விற்பனைக்கு வந்துள்ளது.

டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவிலும் இந்த காருக்கு பலர் ஆன்லைனில் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். ஆனால், எப்போது டெலிவிரி கொடுக்கப்படும் என்பது குறித்து டெஸ்லா நிறுவனத்திடமிருந்து இதுவரை உறுதியான தகவல் இல்லை.

Most Read Articles
மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Tesla Model 3 launched. Electric carmaker Tesla launched its most affordable electric car Model 3 with a price tag of $35,000 (Rs 22.45 lakh).
Story first published: Tuesday, August 1, 2017, 18:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X