அப்படியா... சிங்கிள் சார்ஜில் 900 கிமீ தூரம் பயணித்த டெஸ்லா கார்!

Written By:

எலக்ட்ரிக் கார்கள் என்றால் பிக்கப் இருக்காது, அதிக தூரம் பயணிக்க முடியாது, சொகுசு வசதிகள் அதிகம் எதிர்பார்க்க முடியாது போன்ற அனைத்து சம்பிரதாய தொழில்நுட்பங்களையும் உடைத்து புரட்சியை ஏற்படுத்தியிருக்கின்றன டெஸ்லா எலக்ட்ரிக் கார்கள்.

சிங்கிள் சார்ஜில் 900 கிமீ தூரம் பயணித்த டெஸ்லா கார்!

அதிக சொகுசு வசதிகள், வியக்க வைக்கும் செயல்திறன், அதிக தூரம் பயணிக்கும் திறனை வழங்கும் பேட்டரி என்று டெஸ்லா கார்கள் வாடிக்கையாளர்களிடத்தில் நன்மதிப்பையும், பெரும் வரவேற்பையும் பெற்றிருக்கின்றன.

சிங்கிள் சார்ஜில் 900 கிமீ தூரம் பயணித்த டெஸ்லா கார்!

இந்த நிலையில், டெஸ்லா எலக்ட்ரிக் கார் ஒன்று புதிய சாதனையை படைத்து ஆட்டோமொபைல் துறையினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆம். முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியில் இயங்கிய டெஸ்லா கார் 901.2 கிமீ தூரம் பயணித்து புதிய சாதனை படைத்துள்ளது.

சிங்கிள் சார்ஜில் 900 கிமீ தூரம் பயணித்த டெஸ்லா கார்!

டெஸ்லா மாடல் எஸ் காரின் பி100டி என்ற மாடல்தான் இந்த புதிய சாதனையை படைத்து உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஹைப்பர்மைலிங் எனப்படும் முறையில் டெஸ்லா மாடல் எஸ் காரை செலுத்தி இந்த சாதனையை படைத்துள்ளனர் பெல்ஜியத்தை சேர்ந்த ஸ்டீவன் பீட்டர்ஸ் மற்றும் ஜோரி கூல்ஸ் குழுவினர்.

சிங்கிள் சார்ஜில் 900 கிமீ தூரம் பயணித்த டெஸ்லா கார்!

சராசரியாக மணிக்கு 40 கிமீ வேகத்தில் காரை செலுத்தி இந்த புதிய சாதனையை படைத்துள்ளனர். நேரான சாலையில் சிறப்பாக ஹைப்பர்மைலிங் செய்ய முடியும். அதாவது, அதிக எரிபொருள் சிக்கனம் தரும் வகையில் ஓட்டும் நுட்பம்தான் இது.

சிங்கிள் சார்ஜில் 900 கிமீ தூரம் பயணித்த டெஸ்லா கார்!

அதேநேரத்தில், வளைவுகள் மற்றும் சாலை சந்திப்புகளில் மிகச் சிறப்பான ஓட்டுதல் முறை மூலமாக 900 கிமீ தூரம் பயணித்துள்ளனர். இதற்காக, போக்குவரத்து குறைவான சாலைகள் கொண்ட பகுதியை தேர்வு செய்து ஓட்டி இருக்கின்றனர்.

சிங்கிள் சார்ஜில் 900 கிமீ தூரம் பயணித்த டெஸ்லா கார்!

இந்த சாதனையை 23 மணிநேரம் 45 வினாடிகளில் புரிந்துள்ளனர் இந்த காரை செலுத்திய குழுவினர். அதேநேரத்தில், இந்த சாதனையை டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் மகிழ்ச்சி அடையவில்லையாம். அவர் 950 கிமீ தூரம் பயணிக்கும் என்று எதிர்நோக்கி இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சிங்கிள் சார்ஜில் 900 கிமீ தூரம் பயணித்த டெஸ்லா கார்!

காரில் சரியான டயர்களை பொருத்தியிருந்தால் 1,000 கிமீ தூரத்திற்கும் மேலாக பயணித்திருக்கும் என்று தெரிவித்து இருக்கிறார். அதாவது, இந்த சாதனையில் அவர் கடும் ஏமாற்றம் அடைத்ததாக கூறப்படுகிறது.

சிங்கிள் சார்ஜில் 900 கிமீ தூரம் பயணித்த டெஸ்லா கார்!

2015ம் ஆண்டு டெஸ்லா கார் ஒன்று 885 கிமீ தூரம் பயணித்தது சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை இந்த குழுவினர் முறியடித்துள்ளனர். இந்த சாதனை மட்டுமல்ல, நடைமுறையிலும் டெஸ்லா மாடல் எஸ் கார்கள் போட்டியாளர்களைவிட சிறப்பான ரேஞ்ச் கொண்டிருக்கின்றன.

மேலும்... #டெஸ்லா #tesla
English summary
டெஸ்லா மாடல் எஸ் கார் அதிக தூரம் பயணித்து ஆட்டோமொபைல் துறையினரை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
Story first published: Thursday, June 22, 2017, 13:19 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark