வியக்க வைத்த டெஸ்லா மாடல் எக்ஸ் எஸ்யூவியின் கிராஷ் டெஸ்ட் முடிவுகள்!

கிராஷ் டெஸ்ட்டில் டெஸ்லா மாடல் எக்ஸ் எஸ்யூவி சிறப்பான மதிப்பீட்டை பெற்றிருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் புதிய புரட்சியை ஏற்படுத்திய நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா. அதி செயல்திறனும், சொகுசு வசதிகளிலும் மித மிஞ்சிய மின்சார கார்களை டெஸ்லா தயாரித்து வருகிறது. மேலும், இந்த நிறுவனத்தின் கார்கள் பாதுகாப்பு வசதிகளிலும் பெயர் பெற்று விளங்குகின்றன.

வியக்க வைத்த டெஸ்லா மாடல் எக்ஸ் எஸ்யூவியின் கிராஷ் டெஸ்ட் முடிவுகள்!

உலகின் மிகச் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய எஸ்யூவி மாடலாக மாடல் எக்ஸ் காரை டெஸ்லா கூறி வருகிறது. இந்த காரின் உற்பத்தி துவங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை இதன் பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்வதற்கான கிராஷ் டெஸ்ட் நடத்தப்படாமல் இருந்தது.

 வியக்க வைத்த டெஸ்லா மாடல் எக்ஸ் எஸ்யூவியின் கிராஷ் டெஸ்ட் முடிவுகள்!

இந்த நிலையில், டெஸ்லா மாடல் எக்ஸ் காரின் கட்டுமானத்தை ஆய்வு செய்யும் விதமாக அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பு ஆணையம்[ ஐஎச்டிஎஸ்ஏ ] அண்மையில் டெஸ்லா மாடல் எக்ஸ் காரை கிராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தியது. இதன் முடிவுகள் வியக்க வைத்துள்ளது.

வியக்க வைத்த டெஸ்லா மாடல் எக்ஸ் எஸ்யூவியின் கிராஷ் டெஸ்ட் முடிவுகள்!

அதாவது, டெஸ்லா மாடல் எக்ஸ் 75D என்ற பேஸ் மாடலைத்தான் ஐஎச்டிஎஸ்ஏ அமைப்பு சோதனைக்கு உட்படுத்தியது. முன்புற கட்டுமானத்தை ஆய்வு செய்வதற்கான கிராஷ் டெஸ்ட்டில் இந்த கார் 5க்கு 5 என்ற அதிகபட்சமான நட்சத்திர மதிப்பீட்டை பெற்றிருக்கிறது.

 வியக்க வைத்த டெஸ்லா மாடல் எக்ஸ் எஸ்யூவியின் கிராஷ் டெஸ்ட் முடிவுகள்!

பொதுவாக, அனைத்து அம்சங்களிலும் சில கார்கள் அதிகபட்சமான 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றாலும் கூட, சில பிரிவுகளில் குறைவான மதிப்பீடுகளை பெறும். ஆனால், இந்த கார் அனைத்து துணை ஆய்வுகளிலும் கூட அதிகபட்சமான 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்று அசத்தி இருக்கிறது.

 வியக்க வைத்த டெஸ்லா மாடல் எக்ஸ் எஸ்யூவியின் கிராஷ் டெஸ்ட் முடிவுகள்!

இதுபோன்று துணைப் பிரிவுகள் உட்பட அனைத்து விதமான ஆய்வுகளிலும் 5 நட்சத்திர மதிப்பீடு பெற்ற உலகின் முதல் எஸ்யூவ மாடலாகவும் மாடல் எக்ஸ் கார் குறிப்பிடப்படுகிறது. இது பேஸ் மாடல்தான் என்பதும் மனதில் வைக்க வேண்டிய விஷயம்.

டெஸ்லா மாடல் எக்ஸ் எஸ்யூவியின் வீடியோவை காணலாம்.

Most Read Articles
மேலும்... #டெஸ்லா #tesla
English summary
The US National Highway Traffic Safety Administration (NHTSA) decided to finally put Tesla's claims to the test by putting a base Model X 75D through the safety ringer. The Tesla Model X 75D passed the crash tests with flying colours and is the first SUV ever to achieve 5-Star in every category and sub-category of the NHTSA testing.
Story first published: Wednesday, June 14, 2017, 16:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X