இந்தியாவின் முதல் டெஸ்லா எலக்ட்ரிக் கார் இதுதான்... படங்கள், தகவல்கள்!

By Saravana Rajan

முதல்முறையாக டெஸ்லா எலக்ட்ரிக் கார் இந்தியாவில் தரிசனம் தந்துள்ளது. படங்களையும், தகவல்களையும் காணலாம்.

இந்தியா வந்த முதல் டெஸ்லா எலக்ட்ரிக் கார்: படங்களுடன் தகவல்கள்!

எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் புரட்சியை படைத்து வருகிறது. தொழில்நுட்பத்தில் சிறந்த, சக்திவாய்ந்த மின்சார கார்களை அந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. தற்போது அந்த நிறுவனம் வெளிநாடுகளிலும் தனது மின்சார கார்களை அறிமுகம் செய்யும் முனைப்பில் இருக்கிறது.

இந்தியா வந்த முதல் டெஸ்லா எலக்ட்ரிக் கார்: படங்களுடன் தகவல்கள்!

இந்தியாவில் களமிறங்கவும் முனைப்பு காட்டி வருகிறது. இந்த வேளையில், மும்பையை சேர்ந்த ஒருவர் டெஸ்லா மாடல் எக்ஸ் மின்சார காரை இறக்குமதி செய்து வாங்கி இருக்கிறார். டீப் புளூ என்ற வண்ணத்திலான அந்த காரை க்ரீன்விச் மெரிடியன் லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவனம் இறக்குமதி செய்து தந்துள்ளது.

இந்தியா வந்த முதல் டெஸ்லா எலக்ட்ரிக் கார்: படங்களுடன் தகவல்கள்!

இந்த காரை மும்பையில் வைத்து பயன்படுத்தவும் அதன் உரிமையாளர் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் மாடல் டெஸ்லா மாடல் எக்ஸ்75D என்ற வேரியண்ட் என்று தெரிகிறது.

இந்தியா வந்த முதல் டெஸ்லா எலக்ட்ரிக் கார்: படங்களுடன் தகவல்கள்!

இந்த மாடல் எக்ஸ் கார் 100D மற்றும் P100D ஆகிய வேரியண்ட்டுகளிலும் கிடைக்கிறது. ஆனால், இறக்குமதி செய்யப்பட்டுள்ள 75D மாடலில் லூடிக்ரஸ் மோடு இல்லை. இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 380 கிமீ தூரம் பயணிக்கும். அதிகபட்சமாக மணிக்கு 209 கிமீ வேகம் வரை செல்லும்.

Recommended Video - Watch Now!
[Tamil] 2018 Hyundai Verna Indian Model Unveiled - DriveSpark
இந்தியா வந்த முதல் டெஸ்லா எலக்ட்ரிக் கார்: படங்களுடன் தகவல்கள்!

மாடல் எக்ஸ் காரின் P100D மாடலானது, 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 2.9 வினாடிகளில் கடந்துவிடும். அதாவது, பல சூப்பர் கார்களின் செயல்திறனையே விஞ்சக்கூடிய வல்லமை கொண்ட எலக்ட்ரிக் கார் இது. இந்தியாவில் இறக்குமதியாகி இருக்கும் 75D மாடல் 0 -100 கிமீ வேகத்தை 4.5 வினாடிகளில் எட்டிவிடும்.

இந்தியா வந்த முதல் டெஸ்லா எலக்ட்ரிக் கார்: படங்களுடன் தகவல்கள்!

இந்த காரில் மேல் நோக்கி திறக்கூடிய விசேஷமான ஃபால்கன் கதவுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. மிகவும் நெருக்கடியான இடங்களில் கூட இடிக்காமல் திறப்பதற்கு ஏதுவாக இந்த கதவுகளில் சென்சார்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

இந்தியா வந்த முதல் டெஸ்லா எலக்ட்ரிக் கார்: படங்களுடன் தகவல்கள்!

அமெரிக்காவில் டெஸ்லா மாடல் எக்ஸ் கார் 73,000 டாலர் விலையிலிருந்து 1.30 லட்சம் டாலர் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் இறக்குமதி வரிகள் உள்பட ரூ.2 கோடி அடக்க விலையாக இருக்கும்.

Source : Automobili Ardent

Tamil
மேலும்... #டெஸ்லா #tesla
English summary
A Tesla has landed in India for the first time. The Deep Blue Metallic Model X was brought to India by Greenwich Meridian Logistics Pvt. Ltd, upon order by an unknown Mumbai resident.
இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
 
X

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more