2016-ல் கார் விற்பனையில் உலகின் டாப் - 10 கார் தயாரிப்பு குழுமங்கள்!

Written By:

கார் விற்பனையில் உலகின் நம்பர்-1 யார் என்பதில் கார் தயாரிப்பு குழுமங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. பல பிரபல கார் பிராண்டுகளை கட்டி ஆளும் ஃபோக்ஸ்வேகன், டொயோட்டா மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கடும் சந்தைப் போட்டிக்கு மத்தியில், எந்தெந்த இடங்களை பிடித்துள்ளன என்பதை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

 10. சுஸுகி

10. சுஸுகி

2015ம் ஆண்டு 9வது இடத்தில் இருந்த ஜப்பானை சேர்ந்த சுஸுகி குழுமம், கடந்த ஆண்டு கார் விற்பனையில் 10வது இடத்தை பெற்றிருக்கிறது. உலக அளவில் கார் மார்க்கெட்டில் 3.1 சதவீத பங்களிப்பை சுஸுகி கடந்த ஆண்டு பெற்றது. கடந்த ஆண்டு 28,55,573 நான்கு சக்கர பயணிகள் வாகனங்களை சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதில், கிட்டத்தட்ட 50 சதவீதம் இந்தியாவின் மாருதி சுஸுகி நிறுவனத்திடமிருந்து கிடைக்கிறது.

09. பிஎஸ்ஏ குழுமம்

09. பிஎஸ்ஏ குழுமம்

கடந்த ஆண்டு 9வது இடத்தை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பீஜோ சிட்ரோவன் ஆட்டோமொபைல்ஸ் குழுமம் பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டில் அந்த நிறுவனம் 32,48,108 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. உக அளவில் 3.6 சதவீத விற்பனை பங்களிப்பை இந்த குழுமம் பெற்றிருக்கிறது. விற்பனையை கூட்டும் விதத்தில், இந்தியா உள்பட வெளிநாடுகளில் மீண்டும் கால் பதிக்க பீஜோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

08. ஃபியட் க்றைஸ்லர் குழுமம்

08. ஃபியட் க்றைஸ்லர் குழுமம்

இத்தாலியை சேர்ந்த ஃபியட் க்றைஸ்லர் குழுமம் 8வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 48,64,390 பயணிகள் வாகனங்களை இந்த குழுமம் விற்பனை செய்துள்ளது. உலக அளவில் கார் மார்க்கெட்டில் 5.4 சதவீத பங்களிப்பை இந்த குழுமம் பெற்றிருக்கிறது. ஆனால், இந்தியாவில் இந்த குழுமத்தின் வர்த்தகம் திருப்திகரமாக இல்லை. அதேநேரத்தில், டீசல் எஞ்சின் விற்பனையில் இந்த நிறுவனம் இந்தியாவில் முக்கிய பங்களிப்பை பெற்றிருக்கிறது.

 07. ஹோண்டா

07. ஹோண்டா

கார் விற்பனையில் உலக அளவில் 7வது பெரிய நிறுவனமாக ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் இடம்பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டில் 49,06,685 கார்களை ஹோண்டா கார் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. உலக அளவில் 5.4 சதவீத மார்க்கெட் பங்களிப்பை பெற்றிருக்கிறது. இந்திய கார் சந்தையிலும் மிக முக்கிய இடத்தை ஹோண்டா கார் நிறுவனம் பெற்றிருக்கிறது.

06. ஃபோர்டு

06. ஃபோர்டு

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனம் 6வது இடத்தை பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டில் 62,95,636 கார்களை ஃபோர்டு நிறுவனம் விற்பனை செய்துள்ளது. உலக அளவில் இந்த நிறுவனத்தின் மார்க்கெட் பங்களிப்பு 6.9 சதவீதமாக உள்ளது. இந்திய கார் சந்தையிலும் ஃபோர்டு நிறுவனம் மிக முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது.

05. ஜெனரல் மோட்டார்ஸ்

05. ஜெனரல் மோட்டார்ஸ்

அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் பல்வேறு கார் நிறுவனங்கள் செயல்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை முதல் மூன்று இடங்களில் இருந்த இந்த நிறுவனம் தற்போது போட்டியாளர்களால் கீழே தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 79,72,401 பயணிகள் வாகனங்களை ஜெனரல் மோட்டார்ஸ் குழுமம் விற்பனை செய்துள்ளது. இந்தியாவில் செவர்லே பிராண்டில் ஜெனரல் மோட்டார்ஸ் கார் விற்பனையில் ஈடுபட்டுள்ளது.

04. ஹூண்டாய் மோட்டார்ஸ்

04. ஹூண்டாய் மோட்டார்ஸ்

தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் குழுமம் 6வது இடத்தை பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டில் 81,75,871 கார்களை ஹூண்டாய் மற்றும் கியா பிராண்டுகளில் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. உலக அளவில் ஹூண்டாய் நிறுவனத்தின் பங்களிப்பு 9.0 சதவீதமாக உள்ளது.

03. ரெனோ- நிஸான்

03. ரெனோ- நிஸான்

கடந்த ஆண்டு 3வது இடத்திற்கு அதிரடியாக முன்னேறி உள்ளது ரெனோ- நிஸான் குழுமம். கடந்த ஆண்டில் 85,13,050 கார்களை இந்த குழுமம் விற்பனை செய்துள்ளது. இந்த கூட்டணி தற்போது உலக அளவில் 9.4 சதவீத மார்க்கெட் பங்களிப்பை பெற்றிருக்கிறது. ரெனோ- நிஸான் கூட்டணியின் மிக முக்கிய மார்க்கெட்டுகளில் ஒன்றாக இந்திய கார் சந்தை விளங்குகிறது.

02. டொயோட்டா கார்ப்பரேசன்

02. டொயோட்டா கார்ப்பரேசன்

முதல் இடத்தை ருசித்து வந்த டொயோட்டா கடந்த ஆண்டு 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது. கடந்த ஆண்டில் 99,47,416 கார்களை டொயோட்டா கார் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. உலக கார் சந்தையில் 10.9 சதவீத பங்களிப்பை ஜப்பானிய நிறுவனமான டொயோட்டா கை வசம் வைத்துள்ளது. இந்திய கார் சந்தையிலும் மிக முக்கிய பங்களிப்பை டொயோட்டா பெற்றிருக்கிறது.

01. ஃபோக்ஸ்வேகன் குழுமம்

01. ஃபோக்ஸ்வேகன் குழுமம்

உலகிலேயே அதிக கார் நிறுவனங்களை கொண்ட கார் குழுமம் ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன். புகாட்டி, ஆடி, போர்ஷே, ஸ்கோடா என உலகின் பிரசித்தி பெற்ற பல முன்னணி பிராண்டுகள் இந்த கார் நிறுவனத்தின் கீழ்தான் செயல்படுகின்றன. இந்த நிலையில், டீசல் கார் மாசு உமிழ்வு மோசடி காரணமாக ஃபோக்ஸ்வேகன் குழுமத்துக்கு பெரும் அவப்பெயர் ஏற்பட்டது. இதனால், விற்பனை கடுமையாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

2016-ல் கார் விற்பனையில் உலகின் டாப் - 10 கார் தயாரிப்பு குழுமங்கள்!

ஆனால், அந்த சோதனைகளை தாண்டி, கடந்த ஆண்டு விற்பனையில் உலகின் நம்பர்-1 கார் குழுமம் என்ற பெருமையை ஃபோக்ஸ்வேகன் குழுமம் பெற்றிருக்கிறது. இதன்மூலமாக, அந்த நிறுவனத்துக்கு புதிய தெம்பும், உற்சாகமும் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில் 10.3 மில்லியன் கார்களை ஃபோக்ஸ்வேகன் குழுமம் விற்பனை செய்துள்ளது. அதாவது, ஒரு மில்லியன் என்ற அளவை தாண்டி சாதித்துள்ளது ஃபோக்ஸ்வேகன் குழுமம். உலக அளவிலான கார் சந்தையில் 11.1 சதவீத பங்களிப்பை பெற்றிருக்கிறது.

2016-ல் கார் விற்பனையில் உலகின் டாப் - 10 கார் தயாரிப்பு குழுமங்கள்!

பல கார் பிராண்டுகளை உள்ளடக்கிய விற்பனையின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய யமஹா எஃப்இசட்25 பைக்கின் படங்கள்!

புதிய யமஹா எஃப்இசட்25 பைக்கின் பிரத்யேக படங்களின் தொகுப்பை உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.

English summary
World car group ranking in 2016 induct the Volkswagen Group as the global leader despite the diesel gate scandal that rocked the company.
Story first published: Wednesday, January 25, 2017, 12:12 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark