2017-ல் உலகின் மிக மிக விலை உயர்ந்த கார் மாடல்கள் இவைதான்... !!

இன்றைய தேதியில் உலகின் மிக விலை உயர்ந்த டாப்-10 கார்களின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

பெரும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் உயர்ந்து வருவதாக சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பெரும் கோடீஸ்வர்களின் பட்டியலில் இளைஞர்களின் ஆதிக்கமும் வெகுவாக உயர்ந்து வருகிறது. அதுபோன்ற இளம் கோடீஸ்வரர்கள் தங்களது அந்தஸ்தை காட்டும் விதமாக விலை உயர்ந்த சூப்பர் கார்கள் மற்றும் ஹைப்பர் கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதனால், உலகின் மிக பிரபலமான நிறுவனங்கள் தவிர்த்து, பல புதிய நிறுவனங்களும் சூப்பர் கார் மற்றும் ஹைப்பர் கார் தயாரிப்பில் குதித்துள்ளன. இந்த நிலையில், இன்றைய நிலவரப்படி, உலகின் மிக விலை உயர்ந்த கார்களின் பட்டியலை இங்கே காணலாம்.

10. கோனிக்செக் ரெகேரா

10. கோனிக்செக் ரெகேரா

விலை: ரூ.12.42 கோடி

உலகிலேயே மிகவும் தனித்துவமான டிசைன், புதுமைகள் நிறைந்த சூப்பர் கார் மாடல்களில் ஒன்றாக கோனிக்செக் ரெகேரா புகழப்படுகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்தின் அடிப்படையில் பல கஸ்டமைஸ் வசதிகள் செய்து தரப்படுகிறது. மொத்தம் 80 ரெகேரா கார்கள் மட்டும் விற்பனைக்கு செல்லும்.

2017-ல் உலகின் மிக மிக விலை உயர்ந்த கார்கள்!

இந்த காரில் 1.100 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த 5.0 லிட்டர் வி8 எஞ்சின் இருக்கிறது. இதுதவிர, ஒவ்வொரு சக்கரத்திலும் தலா ஒரு எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த காரில் டைரக்ட் டிரைவ் டிரான்ஸ்மிஷன் மிகவும் உன்னதமான விஷயமாக கூறலாம். 0- 100 கிமீ வேகத்தை இந்த கார் வெறும் 2.8 வினாடிகளில் எட்டிவிடும்.

09. ஃபெராரி லாஃபாரி அபெர்ட்டா

09. ஃபெராரி லாஃபாரி அபெர்ட்டா

விலை: ரூ.14.38 கோடி

ஃபெராரி நிறுவனத்தின் பாரம்பரியத்தையும், தொழில்நுட்ப வல்லமையையும் பரைசாற்றி வரும் மாடல் லாஃபெராரி. கடந்த ஆண்டு பாரிஸ் மோட்டார் ஷோவில் லாஃபெராரி காரின் திறந்து மூடும் கூரை அமைப்புடைய அபெர்ட்டா மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. ஃபெராரி நிறுவனம் தயாரித்த கன்வெர்ட்டிபிள் மாடல்களிலேயே இதுதான் அதிவேகமானது. மொத்தம் 150 கார்கள் விற்பனைக்கு செல்கிறது.

2017-ல் உலகின் மிக மிக விலை உயர்ந்த கார்கள்!

லாஃபெராரி காரில் பயன்படுத்தப்ப்டடு இருக்கும் 6.3 லிட்டர் வி12 எஞ்சின் அதிகபட்சமாக 1,000 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும் வல்லமை கொண்டது. இதன் பட்டர்ஃப்ளை ஸ்டைல் கதவுகள் சற்றே வித்தியாசமான கோணத்தில் திறக்கும். மிகச் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் தத்துவத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் கன்வெர்ட்டிபிள் கார்.

08. மெக்லாரன் பி1 ஜிடிஆர்

08. மெக்லாரன் பி1 ஜிடிஆர்

விலை: ரூ.16.93 கோடி

லீ மான்ஸ் கார் பந்தயத்தில் வெற்றி பெற்று 20ம் ஆண்டு நிறைவை கொண்டாடும் விதத்தில், மெக்லாரன் நிறுவனம் வெளியிட்ட கார் மாடல். மெக்லாரன் பி1 காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த கார் பந்தய களத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

2017-ல் உலகின் மிக மிக விலை உயர்ந்த கார்கள்!

இந்த காரில் 1,000 குதிரைசக்தி திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும், எஞ்சின் இயக்கத்தை வேறுபட்ட நிலைகளில் மாற்றிக் கொள்ளும் விதத்தில் பல விசேஷ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. மணிக்கு 362 கிமீ வேகம் வரை செல்லும் திறன் பெற்றிருக்கிறது. 0- 96 கிமீ வேகத்தை வெறும் 2.4 வினாடிகளில் எட்டிவிடும்.

07. புகாட்டி சிரோன்

07. புகாட்டி சிரோன்

விலை: ரூ.16.98 கோடி

உலகின் அதிவேக தயாரிப்பு நிலை கார்களை உருவாக்கி வரும் புகாட்டி நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஹைப்பர் கார் மாடல். ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் தொழில்நுட்ப வல்லமையை உலகிற்கு பரைசாற்றும் மாடலாக விற்பனையில் இருக்கிறது. யானையை கட்டி தீணி போடுவது போன்று இதன் பராமரிப்பு செலவும் மிக அதிகம்.

2017-ல் உலகின் மிக மிக விலை உயர்ந்த கார்கள்!

இந்த காரில் 4 டர்போ சார்ஜர்கள் துணையுடன் இயங்கும் டபிள்யூ16 சிலிண்டர் அமைப்புடைய 8.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் 1,500 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும் வல்லமை கொண்டது. மணிக்கு 431 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது. பெரும் கோடீஸ்வரர்களையே மிரள வைக்கும் செயல்திறனும், சிறந்த டிசைனும் கொண்டதாக பெருமை படுத்தப்படுகிறது.

06. பகானி ஹூவைரா பிசி

06. பகானி ஹூவைரா பிசி

விலை: ரூ.18.30 கோடி

பகானி கார் நிறுவனம் தயாரித்த மாடல்களிலேயே மிகவும் விலை உயர்ந்த மாடல். இந்த காரில் பிசி என்பது இத்தாலியை சேர்ந்த பிரபல முதலீட்டாளரும், பகானி நிறுவனத்தின் தலைவர் ஹோராசியோ பகானியின் நண்பருமான பென்னி கெயோலா என்பவரின் இனிஷியலுடன் தயாரிக்கப்பட்டது. ஃபெராரி நிறுவனத்தின் பல அரிய வகை கார்கள் பென்னியின் கராஜில் வரிசை கட்டி நிற்கிறது.

2017-ல் உலகின் மிக மிக விலை உயர்ந்த கார்கள்!

பகானி ஹூவைரா பிசி காரில் ஏஎம்ஜி நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் 6.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 790 குதிரைசக்தி திறனை இந்த கார் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. உலகிலேயே மிகச் சிறந்த டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்ப சிறப்பு கொண்ட மாடல்களில் இதனையும் சேர்த்துக் கொள்ளலாம்.

05. ஃபெராரி பினின்ஃபரீனா செர்ஜியோ

05. ஃபெராரி பினின்ஃபரீனா செர்ஜியோ

விலை: ரூ.19.61 கோடி

பல ஃபெராரி கார்களை வடிவமைத்து கொடுத்த இத்தாலியை சேர்ந்த பினின்ஃபரீனா நிறுவனத்தின் ஸ்தாபகரின் நினைவாக உருவாக்கப்பட்ட மாடல். மொத்தம் 6 கார்கள் மட்டுமே தயாரிக்க முடிவு செய்யப்பட்து. ஃபெராரி 458 ஸ்பைடர் காரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட லிமிடேட் எடிசன் மாடலாக உருவாக்கப்பட்டது.

2017-ல் உலகின் மிக மிக விலை உயர்ந்த கார்கள்!

கார்பன் ஃபைபர் பாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கும் இந்த கார் ஃபெராரி 458 காரைவிட எடை மிக குறைவானது. இரண்டு பேர் அமர்ந்து செல்லும் வசதிகொண்ட இந்த ஸ்போர்ட்ஸ் காரில் டர்போ சார்ஜர் அல்லாத 4.5 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

04. அஸ்டன் மார்ட்டின் வல்கைரி

04. அஸ்டன் மார்ட்டின் வல்கைரி

விலை: ரூ.19.61 கோடி

ரெட்புல்- அஸ்டன் மார்ட்டின் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய இந்த கார் ஏஎம்-ஆர்பி-001 என்ற குறியீட்டுப் பெயரில் குறிப்பிடப்பட்டது. தற்போது இந்த கார் அஸ்டன் மார்ட்டின் வல்கைரி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிகச் சிறந்த ஏரோடைனமிக்ஸ் தத்துவத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த கார் கார் தொழில்நுட்பத்தில் முத்தாய்ப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

2017-ல் உலகின் மிக மிக விலை உயர்ந்த கார்கள்!

இந்த காரில் 6.5 லிட்டர் வி2 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஹைப்ரிட் சிஸ்டத்தில் இயங்கும் இந்த கார் 1,000 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மிகவும் பிரத்யேகமான அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் ஹைப்பர் கார் மாடல் இது.

03. லம்போர்கினி வெனினோ ரோட்ஸ்டெர்

03. லம்போர்கினி வெனினோ ரோட்ஸ்டெர்

விலை: ரூ.21.57 கோடி

லம்போர்கினி நிறுவனம் தயாரித்த கார்களிலேயே மிகவும் விலை உயர்ந்த கார் மாடல் இது. மொத்தம் மூன்று கார்கள் மட்டுமே தயாரித்து விற்பனை செய்யப்பட உள்ளது. திறந்து மூடும் கூரை அமைப்புடைய கன்வெர்ட்டிபிள் ரக கார். இந்த காரின் சேஸி லம்போர்கினி அவென்டேடாரிலிருந்து பெறப்பட்டுள்ளது.

2017-ல் உலகின் மிக மிக விலை உயர்ந்த கார்கள்!

இந்த காரில் இருக்கும் 6.5 லிட்டர் வி12 எஞ்சின் அதிகபட்சமாக 750 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்த வல்லது. 0-60 கிமீ வேகத்தை 2.9 வினாடிகளில் எட்டிவிடும். கார்பன் ஃபைபர் பாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதால், மிக இலகுவான எடை உள்ள சூப்பர் கார்களில் ஒன்று.

02. லைக்கன் ஹைப்பர்ஸ்போர்ட்

02. லைக்கன் ஹைப்பர்ஸ்போர்ட்

விலை: ரூ.22.22 கோடி

உலகிலேயே விலை மதிப்பு மிக்க கார்களின் சொர்க்கபுரியாக அரபு நாடுகள் கருதப்படுகின்றன. இந்த நிலையில், அரபு நாட்டிலேயே தயாரான முதல் சூப்பர் கார் என்ற பெருமையுடன் லைக்கன் ஹைப்பர்ஸ்போர்ட் வர இருக்கிறது. நவீன தொழில்நுட்பங்கள் நிரம்பி வழிகிறது. இந்த காரின் ஹெட்லைட்டில் 15 காரட் வைரக் கற்கள் பதிக்கப்ப்டடு இருக்கின்றன.

2017-ல் உலகின் மிக மிக விலை உயர்ந்த கார்கள்!

இந்த காரில் 780 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்த 3.8 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 0-100 கிமீ வேகத்தை 2.8 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 386 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

01. மெக்லாரான் பி1 எம்

01. மெக்லாரான் பி1 எம்

விலை: ரூ.24.18 கோடி

இன்றைய தேதியில் உலகின் மிகவும் விலை உயர்ந்த கார் மாடல் மெக்லாரன் பி1 எம். இதனை மெக்லாரன் நிறுவனம் நேரடியாக உருவாக்கவில்லை. மெக்லாரன் பி1 காரை லான்ஸான்ட்டே மோட்டார்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மறுகட்டமைப்பு செய்து, மிக சிறப்பு வாய்ந்த சூப்பர் கார் மாடலாக மேம்படுத்தி இருக்கிறது.

2017-ல் உலகின் மிக மிக விலை உயர்ந்த கார்கள்!

இந்த காரில் 3.8 லிட்டர் வி8 எஞ்சின் மற்றும் மூன்று எலக்ட்ரிக் மோட்டார்களுடன் இயங்குகிறது. அதிகபட்சமாக 1,000 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. விலைக்கு தக்கவாறு மிகச் சிறந்த சூப்பர் கார் மாடலாக இருக்கும் என்று லான்ஸான்ட்டே மோட்டார்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நம்பிக்கை கூறுகிறது.

Most Read Articles
மேலும்... #டாப் 10 #top 10
English summary
Read in Tamil: Top 10 Most Expensive Cars in the World in 2017.
Story first published: Monday, March 27, 2017, 10:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X