விற்பனையில் டாப் - 10 கார் மாடல்கள்!

Written By:

உயர் மதிப்பு ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பும், ஆண்டு கடைசியும் சேர்ந்து கொண்டு கார் விற்பனையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

விற்பனையில் அசத்தி வரும் டாப்- 10 இடங்களில் உள்ள பல முன்னணி கார் மாடல்கள் கூட கடந்த மாதம் திணறித்தான் போயின. பல கார்கள் விற்பனையில் திணறிய நிலையில், 9 மாதங்களுக்கு பிறகு, டாப்-10 பட்டியலில் ஹூண்டாய் இயான் கார் இடம்பிடித்தது. கடந்த மாதத்தில் விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த கார்களின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

 10. ஹூண்டாய் இயான்

10. ஹூண்டாய் இயான்

ரெனோ க்விட் கார் வந்தவுடன் ஹூண்டாய் இயான் கார் விற்பனை கடுமையாக சரிந்தது. இந்த நிலையில், ஒருவழியாக 9 மாதங்கள் கழித்து ஹூண்டாய் இயான் கார் டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்தது. கடந்த மாதத்தில் 6,790 ஹூண்டாய் இயான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதத்தைவிட கடந்த மாதத்தில் 3 சதவீதம் கூடுதலாகி உள்ளது.

09. மாருதி செலிரியோ

09. மாருதி செலிரியோ

பட்ஜெட் விலையில் பெட்ரோல், டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள், மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் கிடைக்கும் மாருதி செலிரியோ பட்ஜெட் கார் விரும்புவோருக்கு சிறந்த சாய்ஸாக இருக்கிறது. இந்த நிலையில், ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பும், ஆண்டு கடைசியும் சேர்ந்து செலிரியோ காரின் விற்பனையில் கடும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டன. கிட்டத்தட்ட விற்பனை 10 சதவீதம் குறைந்தது. கடந்த 2015ம் ஆண்டு டிசம்பரில் 8,019 செலிரியோ கார்கள் விற்பனையாகி இருந்த நிலையில், கடந்த மாதம் 7,189 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன.

08. ஹூண்டாய் எலைட் ஐ20

08. ஹூண்டாய் எலைட் ஐ20

ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டின் ஆணழகன் என்ற பட்டத்துடன் வலம் வருகிறது ஹூண்டாய் எலைட் ஐ20 கார். மாருதி பலேனோ வருகையை அடுத்து ஹூண்டாய் எலைட் ஐ20 விற்பனையில் சற்று நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், சளைக்காமல் ஹூண்டாய் எலைட் ஐ20 கார் நல்ல விற்பனையை பதிவு செய்து வந்தது. ஆனால், டிசம்பரில் ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் விற்பனை கடுமையாக சரிந்தது. கடந்த 2015ம் ஆண்டு டிசம்பரில் 10,379 கார்கள் விற்பனையாகி இருந்த நிலையில், கடந்த மாதம் 8,450 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளது.

07.ரெனோ க்விட்

07.ரெனோ க்விட்

ரூபாய் நோட்டு செல்லாது பிரச்னை, ஆண்டு கடைசி ஆகியவற்றை மனதில் கொள்ளாமல் வாடிக்கையாளர்கள் ரெனோ க்விட் காருக்கு பேராதரவை வழங்கியிருக்கின்றனர். இதனால், பெரிய அளவில் விற்பனை பாதிக்கப்படவில்லை. கடந்த 2015ம் ஆண்டு டிசம்பரில் 6,888 கார்கள் விற்பனையாகி இருந்த நிலையில், கடந்த மாதம் 8,797 கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. வழக்கமான உற்சாகத்துடன் விற்பனையில் ஓடுகிறது ரெனோ க்விட் கார்.

06. மாருதி பலேனோ

06. மாருதி பலேனோ

பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் முன்னிலை வகிக்கிறது மாருத பலேனோ கார். கடந்த மாதத்தில் விற்பனை 10 சதவீதம் வரை குறைந்துவிட்டது. கடந்த 2015ம் ஆண்டு டிசம்பரில் 10,572 கார்கள் விற்பனையாகி இருந்த நிலையில், கடந்த மாதத்தில் 9,486 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளது.

05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

வடிமைப்பிலும், வசதிகளிலும் நிறைவான ஹேட்ச்பேக் கார் ஹூண்டாய் கிராண்ட் ஐ10. தொடர்ந்து விற்பனையில் ஹூண்டாய் நிறுவனத்துக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்து வரும் மாடல். ஆனால், கடந்த மாதம் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் விற்பனை 17 சதவீதம் குறைந்தது. கடந்த 2015ம் ஆண்டு டிசம்பரில் 12,749 கார்கள் விற்பனையாகி இருந்த நிலையில், கடந்த மாதத்தில் 10,519 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளது.

04. மாருதி வேகன் ஆர்

04. மாருதி வேகன் ஆர்

நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்ற அருமையான பட்ஜெட் விலை கார் மாருதி வேகன் ஆர். கடந்த மாதத்தில் மாருதி வேகன் ஆர் காரின் விற்பனை 3 சதவீதம் குறைந்தது. கடந்த 2015ம் ஆண்டு டிசம்பரில் 14,645 வேகன் ஆர் கார்கள் விற்பனையாகி இருந்த நிலையில், கடந்த மாதம் 14,176 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன.

 03. மாருதி ஸ்விஃப்ட்

03. மாருதி ஸ்விஃப்ட்

இளமை துள்ளல் நிறைந்த வடிவமைப்பும், செயல்திறன் மிக்க எஞ்சின்களும் இந்த காருக்கான மதிப்பை தொடர்ந்து தக்க வைத்து வருகின்றன. கடந்த மாதத்தில் மாருதி ஸ்விஃப்ட் காரின் விற்பனை 0.1 சதவீதம் குறைந்தது. கடந்த மாதம் 14,538 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகி உள்ளன.

 02. மாருதி டிசையர்

02. மாருதி டிசையர்

குறைவான பராமரிப்பு செலவு கொண்ட இந்தியாவின் சிறந்த காம்பேக்ட் செடான் கார் மாருதி டிசையர். கடந்த மாததத்தில் டிசையர் விற்பனை 11 சதவீதம் சரிந்தது. கடந்த மாதத்தில் 14,643 டிசையர் கார்கள் மட்டுமே விற்பனையாகின.

01. மாருதி ஆல்ட்டோ

01. மாருதி ஆல்ட்டோ

மார்க்கெட் நிலவரம் எப்படி இருந்தாலும், இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் நம்பர்-1 கார் மாடல் என்ற பெருமையை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது மாருதி ஆல்ட்டோ கார். கடந்த மாதத்தில் விற்பனை 23 சதவீதம் சரிந்த போதிலும், நம்பர்1 கார் மாருதி ஆல்ட்டோதான். கடந்த மாதத்தில் 17,351 மாருதி ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகி உள்ளன. அதிக மைலேஜ், குறைவான பராமரிப்பு செலவு கொண்ட கார் என்பது இதன் பலம்.

சூடுபிடிக்குமா?

சூடுபிடிக்குமா?

ரூபாய் நோட்டு செல்லாது பிரச்னையிலிருந்து சற்றே மீண்டு வரும் நிலையில், வரும் மாதங்களில் கார் விற்பனை மீண்டும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லோருக்கும் பிடித்த டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!

எல்லோருக்கும் பிடித்த டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை வாங்குவதற்கு திட்டமிட்டிருக்கும் வாடிக்கையாளர்களே! உங்களது கனவு டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை அங்குலம் அங்குலமாக இங்கே பார்ப்பதற்கான அரிய வாய்ப்பை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வழங்குகிறது. கீழே உள்ள ஆல்பத்தை க்ளிக் செய்து இன்னோவா கார் தாகத்தை தீர்த்துக் கொள்ளலாம். ஷோரூமிற்கு செல்வதற்கு முன்னர் சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப விபரங்கள் குறித்த சந்தேகங்களை தெரிந்து கொள்வதற்காக குறிப்பெடுத்துக் கொள்வதற்கும் இது வசதியாக இருக்கும்.

English summary
Barring Maruti Suzuki DZire, Renault Kwid and Hyundai Eon, rest of the lot have suffered negative sales.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark