விற்பனையில் டாப்-10 கார்கள்... பட்டியலில் ஏறிய மாருதி ஓம்னி!

Written By:

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பு இழப்பு காரணமாக, கடந்த சில மாதங்களாக கார் விற்பனையில் தொய்வு காணப்பட்டு வருகிறது. கடந்த மாதமும் பண மதிப்பு இழப்பு தாக்கம் எதிரொலித்தது.

அதேநேரத்தில், நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதிக்கு, இந்த பண மதிப்பு இழப்பு ஒரு பொருட்டாக இல்லை. அந்த நிறுவனத்தின் கார் விற்பனை விர்ரென்று எகிறியது. இந்த நிலையில், கடந்த மாதம் விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த கார் மாடல்களின் பட்டியலை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

10. மாருதி ஓம்னி

10. மாருதி ஓம்னி

கடந்த மாதம் திடீர் வரவாக மாருதி ஓம்னி டாப் 10 பட்டியலில் ஏறி ஆச்சரியப்படுத்தியது. கடந்த மாதத்தில் 8,723 கார்கள் மாருதி ஓம்னி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடும்போது, ஓம்னி காரின் விற்பனை 48 சதவீதம் அதிகரித்துள்ளது. மிக குறைவான விலையில் கிடைக்கும் பன்முக பயன்பாட்டு வகை கார் என்பதே இதற்கான மவுசு தொடர்ந்து நீடிக்க காரணமாகியுள்ளது.

ஜனவரி விற்பனையில் டாப்-10 கார்கள்... பட்டியலில் ஏறிய மாருதி ஓம்னி!

மாருதி ஓம்னி கார் பயணிகள் வேன் மாடலிலும், ஆம்புலன்ஸ், சரக்கு வாகனமாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த காரில் 34.2 பிஎச்பி பவரையும், 59 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 796சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

09. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

09. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

கடந்த மாதம் மாருதி பிரெஸ்ஸா காரின் விற்பனை சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்தது. கடந்த மாதத்தில் 8,932 மாருதி பிரெஸ்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம் பிரெஸ்ஸாவுக்கு சிறப்பான மாதமாகவே அமைந்தது.

ஜனவரி விற்பனையில் டாப்-10 கார்கள்... பட்டியலில் ஏறிய மாருதி ஓம்னி!

மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி காரில் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 88.5 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் மாடலில் கிடைக்கிறது. விரைவில் பெட்ரோல் மாடலையும் களமிறக்கும் திட்டம் மாருதியிடம் உள்ளது. அது விலை குறைவாக இருக்கும் என்பதால், விற்பனை கூடுதலாகும் வாய்ப்புள்ளது.

 08. ஹூண்டாய் எலைட் ஐ20

08. ஹூண்டாய் எலைட் ஐ20

கடந்த மாதம் 8வது இடத்தை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் பெற்றது. கடந்த மாதத்தில் 10,010 ஹூண்டாய் எலைட் ஐ20 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது ஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கு நல்ல துவக்கமாகவே அமைந்தது.

ஜனவரி விற்பனையில் டாப்-10 கார்கள்... பட்டியலில் ஏறிய மாருதி ஓம்னி!

ஹூண்டாய் எலைட் ஐ20 கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பெட்ரோல் எஞ்சின் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலிலும் கிடைக்கிறது. டீசல் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் கிடைக்கிறது.

 07. மாருதி பலேனோ

07. மாருதி பலேனோ

பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் ஹூண்டாய் எலைட் ஐ20 காருடனான யுத்தத்தில் மாருதி பலேனோ கார் சிறிய வித்தியாசத்தில் முன்னிலை பெற்றது. கடந்த மாதம் 10,470 மாருதி பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜனவரியைவிட 36 சதவீதம் இது கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி விற்பனையில் டாப்-10 கார்கள்... பட்டியலில் ஏறிய மாருதி ஓம்னி!

மாருதி பிரெஸ்ஸா கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும், டீசல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.

 06. மாருதி செலிரியோ

06. மாருதி செலிரியோ

மாருதி செலிரியோ கார் 6வது இடத்தை பிடித்தது. கடந்த மாதம் 10,870 செலிரியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜனவரியை விட இப்போது விற்பனை 52 சதவீதம் உயர்ந்துள்ளது. மாருதி செலிரியோ காரின் ஏஎம்டி மாடலுக்கு தொடர்ந்து அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஜனவரி விற்பனையில் டாப்-10 கார்கள்... பட்டியலில் ஏறிய மாருதி ஓம்னி!

மாருதி செலிரியோ காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. செலிரியோ கார் 800சிசி டீசல் எஞ்சின் மாடலிலும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், விற்பனை சரியில்லாததால், அதன் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் தவிர்த்து, சிஎன்ஜி எரிபொருள் மாடலிலும் கிடைக்கிறது.

 05. ஹூண்டாய் க்ராண்ட் ஐ10

05. ஹூண்டாய் க்ராண்ட் ஐ10

கடந்த மாதம் 5வது இடத்தில் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார் உள்ளது. கடந்த மாதத்தில் 13,010 ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார்கள் உள்ளன. கடந்த ஆண்டு ஜனவரியை ஒப்பிடும்போது, இப்போது விற்பனை 31 சதவீதம் உயர்ந்துள்ளது.

ஜனவரி விற்பனையில் டாப்-10 கார்கள்... பட்டியலில் ஏறிய மாருதி ஓம்னி!

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.1 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், தற்போது 1.1 டீசல் எஞ்சினுக்கு பதிலாக புதிய 1.2 லிட்டர் டீசல் எஞ்சி்ன் ஆப்ஷனும் களமிறங்கி உள்ளது. பெட்ரோல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும், டீசல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கும்.

 04. மாருதி ஸ்விஃப்ட்

04. மாருதி ஸ்விஃப்ட்

மாருதி ஸ்விஃப்ட் கார் பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதம் 14,540 மாருதி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு ஜனவரியை ஒப்பிடும்போது, கடந்த மாதம் விற்பனை 3 சதவீதம் உயர்ந்துள்ளது.

ஜனவரி விற்பனையில் டாப்-10 கார்கள்... பட்டியலில் ஏறிய மாருதி ஓம்னி!

மாருதி ஸ்விஃப்ட் கார் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரண்டு மாடல்களுமே 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

03. மாருதி வேகன் ஆர்

03. மாருதி வேகன் ஆர்

மாருதி வேகன் ஆர் கார் மூன்றாம் இடத்தை பிடித்தது. கடந்த மாதம் 14,900 மாருதி வேகன் ஆர் கார்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு ஜனவரியை ஒப்பிடும்போது விற்பனை 17 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஜனவரி விற்பனையில் டாப்-10 கார்கள்... பட்டியலில் ஏறிய மாருதி ஓம்னி!

மாருதி வேகன் ஆர் கார் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் கிடைக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

02. மாருதி டிசையர்

02. மாருதி டிசையர்

மாருதி டிசையர் கார் 2வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதம் 18,000 டிசையர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. காம்பேக்ட் செடான் கார் செக்மென்ட்டில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் இந்த கார், நாட்டின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாகவும் தக்க வைத்து வருகிறது.

ஜனவரி விற்பனையில் டாப்-10 கார்கள்... பட்டியலில் ஏறிய மாருதி ஓம்னி!

மாருதி டிசையர் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலிலும், டீசல் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலிலும் கிடைக்கும்.

01. மாருதி ஆல்ட்டோ

01. மாருதி ஆல்ட்டோ

மாருதி ஆல்ட்டோ கார் முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. கடந்த மாதம் 22,990 மாருதி ஆல்ட்டோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 7 சதவீத உயர்வு. மிக குறைவான விலை கார் மார்க்கெட்டில் மிக சரியான தேர்வாக இருந்து வருகிறது.

ஜனவரி விற்பனையில் டாப்-10 கார்கள்... பட்டியலில் ஏறிய மாருதி ஓம்னி!

மாருதி ஆல்ட்டோ கார் 800சிசி மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மாருதி ஆல்ட்டோ கே10 மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலில் தேர்வு உள்ளது.

புதிய யமஹா எஃப்இசட்250 பைக்கின் படங்கள்!

சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய யமஹா எஃப்இசட்250 பைக்கின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
Maruti Suzuki posted a market share of 50.4 percent taking nearly half of the market and the only other carmaker in the list is Hyundai.
Story first published: Tuesday, February 7, 2017, 9:45 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos