ஜூன் விற்பனையில் டாப் 10 கார்கள்: டாடா டியாகோ பட்டியலில் இடம்பிடித்தது!

ஜூன் விற்பனையில் டாப் 10 கார் மாடல்களின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

ஜிஎஸ்டி வரி வருவதன் எதிரொலியால், கடந்த மாதம் கார் விற்பனையில் சுணக்கம் காணப்பட்டது. பல முன்னணி மாடல்களின் விற்பனையில் சரிவு ஏற்பட்டது. இந்த சூழலில் டாடா டியாகோ கார் பட்டியலில் இடம்பிடித்து அசத்தியது. டாப் 10 கார்களின் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

10. டாடா டியாகோ

10. டாடா டியாகோ

கடந்த மாதத்தில் டாடா டியாகோ கார் டாப் 10 பட்டியலில் ஏறி அசத்தியது. கடந்த மாதம் கார் விற்பனை படு சுணக்கமாக இருந்த நிலையிலும், டாடா டியாகோ கார் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்தது. கடந்த மாதத்தில் 5,438 டியாகோ கார்கள் விற்பனையாகி உள்ளன.

09. ரெனோ க்விட்

09. ரெனோ க்விட்

கடந்த மாதத்தில் ரெனோ க்விட் காரின் விற்பனையிலும் சுணக்கம் ஏற்பட்டது. கடந்த மாதத்தில் 5,439 க்விட் கார்கள் விற்பனையாகின. ஜிஎஸ்டி வரி காரணமாக விற்பனை குறைந்தாலும், இந்த மாதத்தில் இருந்து க்விட் விற்பனை மீண்டும் சூடுபிடிக்கும் என நம்பலாம்.

 08. ஹூண்டாய் க்ரெட்டா

08. ஹூண்டாய் க்ரெட்டா

கடந்த மாதத்தில் 8வது இடத்தை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி பிடித்தது. கடந்த மாதத்தில் 6,436 ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் விற்பனையாகின. டிசைனும், வசதிகளும் இந்த காருக்கு தொடர்ந்து சிறப்பான வரவேற்பை பெற்று தந்து வருகிறது.

07. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

07. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

கடந்த மாதத்தில் 8,293 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி வரி எதிரொலியால் பல கார்களின் விற்பனை குறைந்தாலும், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா விற்பனை ஓரளவு தாக்குப் பிடித்து சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

06. மாருதி ஸ்விஃப்ட்

06. மாருதி ஸ்விஃப்ட்

கடந்த மாதத்தில் 9,008 மாருதி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகி உள்ளன. போட்டி மிகுந்த இந்த செக்மென்ட்டில், டிசைன், வசதிகள், மைலேஜ், விலை என அம்சங்களிலும் மாருதி ஸ்விஃப்ட் கார் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது.

 05. மாருதி பலேனோ

05. மாருதி பலேனோ

கடந்த மாதத்தில் 9,057 மாருதி பலேனோ கார்கள் விற்பனையாகி உள்ளன. டிசைன், வசதிகள் மட்டுமின்றி சரியான விலையில் கிடைக்கும் சிறந்த பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மாடலாக தன்னை முன்னிறுத்தி வருகிறது மாருதி பலேனோ.

04. மாருதி வேகன் ஆர்

04. மாருதி வேகன் ஆர்

கடந்த மாதத்தில் 10,668 மாருதி வேகன் ஆர் கார்கள் விற்பனையாகின. நகர்ப்புற பயன்பாட்டுக்கான மிகச் சிறந்த மாடலாக இருப்பதால், விற்பனையிலும் தொடர்ந்து சாதித்து வருகிறது.

 03. மாருதி டிசையர்

03. மாருதி டிசையர்

கடந்த மாதத்தில் 12,049 மாருதி டிசையர் கார்கள் விற்பனையாகி உள்ளன. புதிய தலைமுறை மாடலும் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், விற்பனை குறைவாக இருப்பதற்கு ஜிஎஸ்டி வரி எதிரொலியே காரணமாக கூறலாம். இந்த மாதத்திலிருந்து மீண்டும் தனது பழைய எண்ணிக்கையை டிசையர் தொடும் என நம்பலாம்.

02. ஹூண்டாய் க்ராண்ட் ஐ10

02. ஹூண்டாய் க்ராண்ட் ஐ10

கடந்த மாதத்தில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி அசத்தி உள்ளது ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார். முதல் மூன்று இடங்கள் எப்போதுமே மாருதி கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், அதனை உடைதத்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது க்ராண்ட் ஐ10 கார். கடந்த மாதத்தில் 12,317 க்ராண்ட் ஐ10 கார்கள் விற்பனையாகி உள்ளன.

01. மாருதி ஆல்ட்டோ

01. மாருதி ஆல்ட்டோ

போட்டி எவ்வளவு இருந்தாலும் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டு வருகிறது மாருதி ஆல்ட்டோ கார். கடந்த மாதத்தில் 14,856 மாருதி ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகி உள்ளன. மிக குறைவான விலையில் கிடைக்கும் மாருதி கார் என்பதே இதற்கு வலு சேர்க்கிறது.

Most Read Articles
மேலும்... #டாப் 10 #top 10
English summary
Most of the carmakers, except for Maruti Suzuki and Honda Cars India reported negative growth in June, but industry leaders think that sales of passenger cars will improve or even go past expectations because of the price reductions.
Story first published: Monday, July 10, 2017, 12:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X