பிப்ரவரி விற்பனையில் டாப் 20 கார்கள்... ஸ்விஃப்ட்டை கீழே தள்ளியது கிராண்ட் ஐ10 கார்!

Written By:

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழக்க செய்யப்பட்டதற்கு பின்னர் கார் விற்பனை மந்தமடைந்தது. இந்த நிலையில், கடந்த மாதம் பணமதிப்பிழப்பு தாக்கத்திலிருந்து கார் மார்க்கெட் சற்று மீண்டு வந்துள்ளது.

கடந்த மாதத்தில் உள்நாட்டு கார் விற்பனை 4.9 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேபோன்று, பயணிகள் வாகன விற்பனையும் 9 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கடுமையான சந்தைப் போட்டிக்கு மத்தியில் தடைகளை தாண்டி முதல் 20 இடங்களை பிடித்த கார் மாடல்களின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

 20. டாடா டியாகோ

20. டாடா டியாகோ

கடந்த மாதத்தில் 5,365 டாடா டியாகோ கார்கள் விற்பனையாகின. கடந்த மாத பட்டியலில் 20வது இடத்தை பிடித்தது டாடா டியோகா. தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனதத்தின் விற்பனையில் மிக முக்கிய பங்களிப்பை டாடா டியாகோ கார் வழங்கி வருகிறது. அழகான, நவீன வசதிகள் நிரம்பிய இந்த கார் போட்டியாளர்களைவிட சற்றே குறைவான விலையில் கிடைப்பதும் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதற்கு காரணம்.

19. ஹூண்டாய் இயான்

19. ஹூண்டாய் இயான்

ரெனோ க்விட் காரின் வருகையால் ஹூண்டாய் இயான் காரின் விற்பனை பாதிப்படைந்தது. கடந்த மாதத்தில் 5,500 ஹூண்டாய் இயான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஹூண்டாய் நிறுவனத்துக்கு தொடர்ந்து முக்கிய பங்களிப்பை இயான் கார் வழங்கி வருகிறது. குறைவான விலையில் கிடைக்கும் ஹூண்டாய் கார் என்பது இதன் பலம்.

 18.மாருதி எர்டிகா

18.மாருதி எர்டிகா

கடந்த மாதத்தில் 5,505 மாருதி எர்டிகா கார்கள் விற்பனையாகி உள்ளன. 7 சீட்டர் மார்க்கெட்டில் சிறப்பம்சங்கள், விலை போன்ற அனைத்து விதத்திலும் மிகச் சிறப்பான தேர்வாக இருக்கிறது. அத்துடன், மாருதியின் வலுவான சர்வீஸ் கட்டமைப்பும் இந்த காருக்கு வலு சேர்க்கிறது.

 17. மாருதி சியாஸ்

17. மாருதி சியாஸ்

மிட்சைஸ் கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி காருக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறது மாருதி சியாஸ். கடந்த மாதத்தில் 5,886 மாருதி சியாஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. வடிவமைப்பு, வசதிகள், நம்பகமான எஞ்சின் போன்றவை இந்த காருக்கு சிறப்பு சேர்க்கும் விஷயங்கள்.

 16. டொயோட்டா இன்னோவா

16. டொயோட்டா இன்னோவா

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. எம்பிவி என்றால் இன்னோவா எனும் அளவுக்கு இடவசதி, நவீன தொழில்நுட்ப வசதிகள், அந்தஸ்தை கூட்டும் டிசைன் என அசத்தி வருகிறது புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார். கடந்த மாதத்தில் 6,054 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்கள் விற்பனையாகி உள்ளன.

 15. ஹோண்டா சிட்டி

15. ஹோண்டா சிட்டி

மிட்சைஸ் மார்க்கெட்டில் கண்ணை மூடிக் கொண்டு தேர்வு செய்யும் மாடலாக முதன்மை வகிக்கிறது ஹோண்டா சிட்டி கார். தற்போது மேம்படுத்தப்பட்ட புதிய மாடலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதால், வரும் மாதங்களில் ஹோண்டா சிட்டி மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் முதலிடத்தை தக்க வைக்கும் என நம்பலாம். கடந்த மாதத்தில் 6,318 ஹோண்டா சிட்டி கார்கள் விற்பனையாகி உள்ளன. டிசைன், தரம் என வாடிக்கையாளரின் மனதை கொள்ளை கொண்ட மாடலாக வலம் வருகிறது.

14. மாருதி ஈக்கோ

14. மாருதி ஈக்கோ

பல புதிய கார் மாடல்கள் வந்த வண்ணம் இருக்கும் நிலையில், மிக நீண்டகாலமாக மார்க்கெட்டில் இருந்து வரும் மாருதி ஈக்கோ கார் தனக்கென தனி வாடிக்கையாளர் வட்டத்தை தொடர்ந்து பெற்று வருகிறது. கடந்த மாதத்தில் 6,388 மாருதி ஈக்கோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது ஆச்சரியம் தரும் எண்ணிக்கை என்றே கூறலாம். மிக குறைவான விலையில் கிடைக்கும் 7 சீட்டர் கார் என்பது இதன் பலம்.

13. மஹிந்திரா பொலிரோ

13. மஹிந்திரா பொலிரோ

எஸ்யூவி ரக கார் மார்க்கெட்டில் புதிய புதிய மாடல்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தாலும், நீடித்த உழைப்புக்கு பெயர் பெற்ற மஹிந்திரா பொலிரோ தொடர்ந்து சிறப்பான விற்பனையை பதிவு செய்து வருகிறது. கடந்த மாதத்தில் 6,442 மஹிந்திரா பொலிரோ எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

12. மாருதி பலேனோ

12. மாருதி பலேனோ

கடந்த மாதத்தில் மாருதி பலேனோ காரின் விற்பனை கடுமையாக சரிந்தது. கடந்த மாதத்தில் 7,658 பலேனோ கார்கள் விற்பனையாகி உள்ளன. டிசைன், இடவசதி, தொழில்நுட்ப வசதிகள், விலை என அனைத்திலும் நிறைவான பிரிமியம் ஹேட்ச்பேக் கார் என்ற நினைப்பை ஏற்படுத்துகிறது.

11. மாருதி ஓம்னி

11. மாருதி ஓம்னி

மாருதி ஓம்னி மினி வேன் தொடர்ந்து நல்ல விற்பனையை பதிவு செய்து வருகிறது. கடந்த மாதத்தில் 7,809 மாருதி ஓம்னி வேன்கள் விற்பனையாகி உள்ளன. 7 சீட்டர் காராகவும், வியாபாரிகளுக்கு பன்முக பயன்பாட்டு வாகனமாகவும் விளங்குகிறது. அத்துடன் மிக குறைவான விலையில் கிடைப்பதும் இதன் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது.

10. மாருதி செலிரியோ

10. மாருதி செலிரியோ

கடந்த மாதம் 10வது இடத்தில் மாருதி செலிரியோ கார் உள்ளது கடந்த மாதத்தில் 8,325 மாருதி செலிரியோ கார்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த மாதத்தில் விற்பனை மிகச்சிறப்பாக உயர்ந்தது. பட்ஜெட் கார் விரும்புவோருக்கு மிகச் சிறப்பான சாய்ஸ். அத்துடன், ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனும் இந்த காரை சிறந்த தேர்வாக மாற்றுகிறது.

09. ஹூண்டாய் க்ரெட்டா

09. ஹூண்டாய் க்ரெட்டா

கடந்த மாதத்தில் ஹூண்டாய் க்ரெட்டா கார் 9வது இடத்தை பிடித்தது. கடந்த மாதத்தில் 9,002 ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் விற்பனையாகி உள்ளன. டிசைனில் மிக அசத்தலாக இருப்பது இதன் வெற்றிக்கு மிக முக்கிய காரணம். அத்துடன் நிறைவான வசதிகள், சிறந்த எஞ்சின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.

 08. ரெனோ க்விட்

08. ரெனோ க்விட்

கடந்த மாதத்தில் ரெனோ க்விட் கார் 8வது இடத்தை பிடித்தது. கடந்த பிப்ரவரியில் 9,648 க்விட் கார்கள் விற்பனையாகி உள்ளன. எஸ்யூவி போன்ற தோற்றமும், நவீன தொழில்நுட்ப அம்சங்களும் வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. பக்காவான பட்ஜெட் கார் என்று தன்னை பரைசாற்றி வருகிறது.

07. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

07. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி 8வது இடத்தை பிடித்தது. கடந்த மாத்ததில் 10,046 விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிகள் விற்பனையாகி உள்ளன. மாருதி பிராண்டில் மிகச் சரியான விலையில் கிடைக்கும் எஸ்யூவி ரக கார் என்பதுதான் இதன் மிகப்பெரிய ப்ளஸ்.

06. ஹூண்டாய் எலைட் ஐ20

06. ஹூண்டாய் எலைட் ஐ20

கடந்த மாதத்தில் 10,414 ஹூண்டாய் எலைட் ஐ20 கார்கள் விற்பனையாகி உள்ளன. பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக இருக்கிறது. இதன் டிசைன் வாடிக்கையாளர்களின் அந்தஸ்தை உயர்த்தும் விஷயமாக இருக்கிறது. வசதிகளிலும் குறைவில்லாத மாடலாக வலம் வருகிறது.

 05. மாருதி ஸ்விஃப்ட்

05. மாருதி ஸ்விஃப்ட்

இந்தியாவின் டாப்-3 கார் மாடல்களில் ஒன்றாக இருந்து வந்த மாருதி ஸ்விஃப்ட் காரின் விற்பனை தொடர்ந்து இறங்கு முகத்தில் இருக்கிறது. கடந்த மாதம் விற்பனையின்படி, 5வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது மாருதி ஸ்விஃப்ட் கார். பிப்ரவரியில் 12,328 மாருதி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகி உள்ளன. துள்ளலான டிசைன், நம்பகமான எஞ்சின் ஆப்ஷன்கள், சரியான விலை போன்றவை இதனை சிறந்த தேர்வாக வைத்திருக்கிறது.

04. ஹூண்டாய் க்ராண்ட் ஐ10

04. ஹூண்டாய் க்ராண்ட் ஐ10

கடந்த மாதம் மாருதி ஸ்விஃப்ட் காரை ஒருபடி இறக்கி 4வது இடத்துக்கு முன்னேறி உள்ளது ஹூண்டாய் க்ராண்ட் கார். கடந்த மாதத்தில் 12,862 கிராண்ட் ஐ10 கார்கள் விற்பனையாகி உள்ளன. பட்ஜெட் விலை கார்களில் பிரிமியம் மாடலாக இருப்பது இதன் பலம்.

 03. மாருதி வேகன் ஆர்

03. மாருதி வேகன் ஆர்

கடந்த மாதத்தில் 13,555 மாருதி வேகன் ஆர் கார்கள் விற்பனையாகி உள்ளன. 4 பேர் செல்வதற்கு போதிய இடவசதி, தினசரி பயன்பாட்டுக்கு ஏற்றதாகவும், குறைவான பராமரிப்பு செலவுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது மாருதி வேகன் ஆர் கார்.

 02. மாருதி டிசையர்

02. மாருதி டிசையர்

4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் மாருதி டிசையர் கார் மிகச் சிறந்த தேர்வாக இருக்கிறது. பல புதிய மாடல்கள் வந்துவிட்டாலும், அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறது. கடந்த மாதத்தில் 16,613 மாருதி டிசையர் கார்கள் விற்பனையாகி உள்ளன. குறைவான பராமரிப்பு செலவு கொண்ட செடான் ரக கார் என்பது இதன் பலம்.

01. மாருதி ஆல்ட்டோ

01. மாருதி ஆல்ட்டோ

எத்துனை போட்டி வந்தாலும் அசங்காமல் முதலிடத்தை தக்க வைத்து வருகிறது மாருதி ஆல்ட்டோ கார். கடந்த மாதத்தில் 19,524 கார்கள் விற்பனையாகி உள்ளன. க்விட் வந்த பின்னர் நெருக்கடியில் சிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த கணிப்புகளை பொய்த்துவிட்டு சிறப்பான விற்பனையை பதிவு செய்து வருகிறது. மாருதியின் பரந்து விரிந்த சர்வீஸ் நெட்வொர்க் இந்த காருக்கு மிகப்பெரிய பலம்.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் படங்கள்!

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் படங்களின் தொகுப்பை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
Read in Tamil: Top 20 Best Selling Cars In India In February 2017.
Story first published: Saturday, March 11, 2017, 12:23 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark