டொயோட்டா சிஎச் ஆர் எஸ்யூவி இந்தியா வருகிறது!

Written By:

டொயோட்டா நிறுவனத்தின் மிக அசத்தலான சிஎச் ஆர் எஸ்யூவி மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. மிடுக்கான முகப்பு, கவர்ச்சியான பிட்டத்துடன் இந்தியர்களை வசீகரிக்க வரும் இந்த புதிய எஸ்யூவியின் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

டொயோட்டா சிஎச் ஆர் எஸ்யூவி இந்தியா வருகிறது!

கடந்த டிசம்பர் மாதம் ஜப்பானில் இந்த புதிய எஸ்யூவி மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், சர்வதேச அளவில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு செல்லும் முயற்சிகளை டொயோட்டா கார் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

டொயோட்டா சிஎச் ஆர் எஸ்யூவி இந்தியா வருகிறது!

அதன்படி, அடுத்த ஆண்டு இந்த புதிய எஸ்யூவி மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹூண்டாய் க்ரெட்டாவின் டாப் வேரியண்ட் மாடல் மற்றும் ஹூண்டாய் டூஸான் மாடல்களுடன் இந்த புதிய எஸ்யூவி மாடல் போட்டி போடும்.

டொயோட்டா சிஎச் ஆர் எஸ்யூவி இந்தியா வருகிறது!

புதிய தலைமுறை பிரையஸ் கார் உருவாக்கப்பட்ட டொயோட்டா நிறுவனத்தின் புதிய கட்டுமான தாத்பரியத்தில் இந்த புதிய எஸ்யூவி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நவீன கட்டுமான நுட்பத்தில் உருவாக்கப்பட்டு இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட இருக்கும் முதல் இந்திய மாடலும் டொயோட்டா சிஎச் ஆர் மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டொயோட்டா சிஎச் ஆர் எஸ்யூவி இந்தியா வருகிறது!

புதிய டொயோட்டா சிஎச் ஆர் காரில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர், 1.8 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் இந்த கார் வெளியிடப்பட்டது.

டொயோட்டா சிஎச் ஆர் எஸ்யூவி இந்தியா வருகிறது!

இதில், 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் இணைந்து செயலாற்றக்கூடிய ஹைப்ரிட் மாடலும் உண்டு. இந்த கார் 6 ஸ்பீடு சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக விற்பனை செய்யப்படுகிறது.

டொயோட்டா சிஎச் ஆர் எஸ்யூவி இந்தியா வருகிறது!

ஜப்பானில் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டாலும், இந்தியாவில் நிச்சயமாக டீசல் மாடலிலும் எதிர்பார்க்கலாம். இந்த காரின் டிசைன் தாத்பரியம் மிக வித்தியாசமாகவும், பிரிமியம் கார் போலவும் இருப்பதால் இந்தியர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் வாய்ப்புள்ளது.

டொயோட்டா சிஎச் ஆர் எஸ்யூவி இந்தியா வருகிறது!

இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் என்பதாலும், விலையை மிக சவாலாக நிர்ணயிக்க முடியும். இன்டீரியரும் மிக நவீனமாகவும், அதிக வசதிகள் நிறைந்ததாகவும் இருக்கும். ரூ.15 லட்சம் ஆரம்ப விலையில் இந்த புதிய எஸ்யூவி எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா சிஎச்-ஆர் எஸ்யூவியின் படங்கள்!

டொயோட்டா சிஎச்-ஆர் எஸ்யூவி இந்தியா வருகிறது என்ற தகவலை கேட்டவுடன், அதனை முழுமையாக பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் பிறக்கிறதல்லவா? அதனை தீர்ப்பதற்காக 35 படங்கள் அடங்கிய கேலரியை உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.

English summary
The Toyota C-HR SUV is set to enter India and its pricing is expected to mirror its aggressive styling.
Story first published: Thursday, February 2, 2017, 16:18 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos