டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா விலை ரூ.1 லட்சம் உயர்கிறது: இப்போதைய ஆஃபர் விபரம்!

வரும் ஜனவரி 1 முதல் டொயோட்டா கார் விலை உயர்த்தப்பட இருக்கிறது. அதன் விபரங்களையும், தற்போது டொயோட்டா கார்களுக்கு கிடைக்கும் சேமிப்புச் சலுகைகள் குறித்த விபரங்களையும் இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

ஜனவரி முதல் கார் விலையை உயர்த்துவதற்கு டொயோட்டா திட்டமிட்டுள்ளது. அதன் விபரங்களையும், டொயோட்டா கார்களுக்கான டிசம்பர் ஆஃபர் விபரங்களையும் பார்க்கலாம்.

டொயோட்டா கார் விலை ரூ.1 லட்சம் உயர்கிறது

தனது அனைத்து கார்களின் விலையையும் அதிகபட்சமாக 3 சதவீதம் வரை உயர்த்துவதற்கு டொயோட்டா கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு விலை உயர்வு என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

Recommended Video

Bangalore City Police Use A Road Roller To Crush Loud Exhausts
டொயோட்டா கார் விலை ரூ.1 லட்சம் உயர்கிறது

டொயோட்டா லிவா காரின் விலை ரூ.16,000 வரை உயர்த்தப்பட இருக்கிறது. டொயோட்டா எட்டியோஸ் செடான் காரின் விலையும் இதே அளவுக்கு உயர்வதற்கான வாய்ப்புள்ளது.

டொயோட்டா கார் விலை ரூ.1 லட்சம் உயர்கிறது

டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் விலை 2 சதவீதம் உயர்த்தப்பட இருக்கிறது. ரூ.25.92 லட்சம் முதல் ரூ.31.12 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படும் டொயோட்டா ஃபார்ச்சூனர் விலை ரூ.85,000 முதல் ரூ.90,000 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

டொயோட்டா கார் விலை ரூ.1 லட்சம் உயர்கிறது

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விலையும் 2 சதவீதம் அதிகரிக்கப்பட இருக்கிறது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் ரூ.13.73 லட்சம் முதல் ரூ.20.95 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

டொயோட்டா கார் விலை ரூ.1 லட்சம் உயர்கிறது

அதன்படி, இன்னோவா காரின் விலை ரூ.66,000 முதல் ரூ.90,000 வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே, இன்னோவா க்ரிஸ்ட்டா காரை வாங்க விரும்புவோர் டிசம்பருக்குள் முன்பதிவு செய்து கொள்வது நல்லது.

டொயோட்டா கார் விலை ரூ.1 லட்சம் உயர்கிறது

மேலும், முன்பதிவு செய்யும்போதே, கார் டெலிவிரி கொடுக்கப்படும்போது தற்போதைய விலையிலேயே கொடுக்கப்படுமா அல்லது புதிய விலையில் கொடுக்கப்படுமா என்பதையும் கேட்டு தெரிந்து கொண்டு முன்பதிவு செய்யவும்.

டொயோட்டா கார் விலை ரூ.1 லட்சம் உயர்கிறது

இந்த திட்டத்தின்படி, டொயோட்டா ஆல்டிஸ் காருக்கு முதல் ஆண்டுக்கான இன்ஸ்யூரன்ஸ் அன்பளிப்பாக வழங்கப்படுகிறது.

டொயோட்டா கார் விலை ரூ.1 லட்சம் உயர்கிறது

டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் காருக்கு டொயோட்டா ஃபைனான்ஸ் மூலமாக கடன் வாங்குவோருக்கு ரூ.50,000 மதிப்புடைய சேமிப்பை பெற முடியும். மிக குறைவான வட்டி வீதத்தில் இந்த சேமிப்பை பெற முடியும். பணம் செலுத்தி எட்டியோஸ் காரை வாங்குவோர் ரூ.30,000 முதல் ரூ.35,000 வரை நேரடி தள்ளுபடியை பெறலாம்.

டொயோட்டா கார் விலை ரூ.1 லட்சம் உயர்கிறது

எட்டியோஸ் லிவா மற்றும் எட்டியோஸ் க்ராஸ் ஆகிய கார்களுக்கு ரூ.30,000 முதல் ரூ.40,000 வரையிலான சேமிப்புச் சலுகையை பெற முடியும்.

டொயோட்டா கார் விலை ரூ.1 லட்சம் உயர்கிறது

டொயோட்டா இன்னோவா காருக்கு 8.5 சதவீத வட்டி வீதத்தில் சிறப்பு கடன் திட்டத்தை பெற முடியும். டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு 8.25 சதவீத வட்டி வீதத்தில் கடன் திட்டத்தை பெற முடியும்.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Indian wing of the Japanese automaker, Toyota Kirloskar Motor has announced that it will increase the price of its entire product portfolio, starting from January 2018.
Story first published: Wednesday, December 13, 2017, 14:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X