டொயோட்டா எட்டியோஸ் கார்களின் பாதுகாப்பை உணர்த்திய சிறப்பு நிகழ்ச்சி!

டொயோட்டா எட்டியோஸ் கார்களின் பாதுகாப்பு அம்சங்களை நேரில் சோதித்து பார்ப்பதற்கான சிறப்பு நிகழ்ச்சி பெங்களூரில் நடந்தது. இதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

அனைத்து கார் நிறுவனங்களும் தற்போது பாதுகாப்பு அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க துவங்கி இருக்கின்றன. அந்த வகையில், கார்களின் பாதுகாப்பு அம்சங்களை உயர்த்துவதில் டொயோட்டா கார் நிறுவனம் முன்னோடியாக விளங்குகிறது.

டொயோட்டா எட்டியோஸ் கார்களின் பாதுகாப்பை உணர்த்திய சிறப்பு நிகழ்ச்சி!

சிறந்த கட்டுமானத்திற்கு பெயர் பெற்ற டொயோட்டா கார்களில் இப்போது பாதுகாப்பு அம்சங்கள் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளன. அந்த வகையில், கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டா எட்டியோஸ் கார் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கும் மாடலாக விளங்குகிறது.

டொயோட்டா எட்டியோஸ் கார்களின் பாதுகாப்பை உணர்த்திய சிறப்பு நிகழ்ச்சி!

தற்போது டொயோட்டா எட்டியோஸ் மற்றும் லிவா கார்கள் எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டியூவல் எஸ்ஆர்எஸ் ஏர்பேக்குகள், ப்ரீ டென்ஷனருடன் கூடிய 3 பாயிண்ட் சீட் பெல்ட்டுகள், ஐசோஃபிக்ஸ் சைல்டு மவுண்ட் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் நிரந்தரமாக வழங்கப்படுகின்றன.

டொயோட்டா எட்டியோஸ் கார்களின் பாதுகாப்பை உணர்த்திய சிறப்பு நிகழ்ச்சி!

இந்த நிலையில், எட்டியோஸ் காரில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்கள் ஆபத்து காலத்தில் எவ்வாறு பயணிகளை காக்க உதவுகிறது என்பதை நேரில் கண்டுணர்ந்து கொள்வதற்காக சிறப்பு எக்ஸ்பரிமென்ட்டல் டிரைவ் என்ற பெயரிலான நிகழ்ச்சியை பெங்களூரில் நடத்தியது டொயோட்டா கார் நிறுவனம். இந்த நிகழ்ச்சியில் டொயோட்டா அழைப்பின் பேரில் டிரைவ்ஸ்பார்க் தளமும் பங்கு கொண்டது.

Recommended Video

Tata Tiago XTA AMT Variant Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
டொயோட்டா எட்டியோஸ் கார்களின் பாதுகாப்பை உணர்த்திய சிறப்பு நிகழ்ச்சி!

இந்த நிகழ்ச்சியில், டொயோட்டா எட்டியோஸ் கார்களின் பாதுகாப்பு அம்சங்களை பல்வேறு நிலைகளில் விளக்கும் விதத்தில் அமைந்தது. முதலில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஓட்டுபவர்களுக்கு விளக்கும் நிகழ்ச்சி நடந்தது. அடுத்ததாக, பாதுகாப்பு அம்சங்களை விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் தெரிந்து கொள்வதற்கான நிகழ்வு நடந்தது.

டொயோட்டா எட்டியோஸ் கார்களின் பாதுகாப்பை உணர்த்திய சிறப்பு நிகழ்ச்சி!

இதைத்தொடர்ந்து, கடைசியில் டொயோட்டா எட்டியோஸ் மற்றும் லிவா கார்களின் பாதுகாப்பு அம்சங்களை களத்தில் சோதிக்கும் விதத்தில், பல்வேறு தடை அமைப்புகளுடன் கூடிய களத்தில் செயல்விளக்கம் நிகழ்ச்சி நடந்தது. இதில், சிறப்பு பயிற்றுனர்களின் வழிகாட்டுதல்களின் பேரில் மீடியாவை சேர்ந்தவர்களும், வாடிக்கையாளர்களும் டொயோட்டா கார்களின் பாதுகாப்பு அம்சங்களை சோதித்தனர்.

டொயோட்டா எட்டியோஸ் கார்களின் பாதுகாப்பை உணர்த்திய சிறப்பு நிகழ்ச்சி!

வழுக்குத் தரையில் ஆன்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டத்தின் பயனையும், மணல் சார்ந்த தரையில் எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் வசதியின் பயனையும் நேரில் உணர முடிந்தது.

டொயோட்டா எட்டியோஸ் கார்களின் பாதுகாப்பை உணர்த்திய சிறப்பு நிகழ்ச்சி!

மேடு பள்ளமான பகுதிகளில் குழந்தைகளுக்கான ஐசோஃபிக்ஸ் மவுண்ட்டுகளால் கிடைக்கும் பாதுகாப்பையும் தெரிந்து கொள்ள முடிந்தது. எஸ்ஆர்எஸ் ஏர்பேக்குகளின் பயன் குறித்தும் காட்சிபடுத்தப்பட்டு இருந்தது.

டொயோட்டா எட்டியோஸ் கார்களின் பாதுகாப்பை உணர்த்திய சிறப்பு நிகழ்ச்சி!

இந்த நிகழ்ச்சியில் குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில் பயன்படுத்தப்பட்ட டொயோட்டா எட்டியோஸ் கார் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இந்த சோதனையில் டொயோட்டா எட்டியோஸ் கார் 5க்கு 4 என்ற சிறப்பான நட்சத்திர மதிப்பீட்டை பெற்றிருந்தது.

டொயோட்டா எட்டியோஸ் கார்களின் பாதுகாப்பை உணர்த்திய சிறப்பு நிகழ்ச்சி!

பழைய எட்டியோஸ் கார்களுக்கும், அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் வந்த புதிய டொயோட்டா எட்டியோஸ் கார்களுக்கும் இடையிலான வேறுபாட்டை உணர்ந்து கொள்ளும் வகையில், இரண்டு மாடல்களையும் ஓட்டி பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது.

டொயோட்டா எட்டியோஸ் கார்களின் பாதுகாப்பை உணர்த்திய சிறப்பு நிகழ்ச்சி!

இவை தவிர்த்து, குடும்பத்தினருடன் வந்திருந்த வாடிக்கையாளர்களின் குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கமும் அமைக்கப்பட்டு இருந்தது கூடுதல் சிறப்பு. இந்த நிகழ்ச்சியின் மூலமாக தகுதிவாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு டொயோட்டா எட்டியோஸ் கார்களின் பாதுகாப்பு அம்சங்களை வெகுவாக உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பாக அமைந்தது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota organised the Etios Experiential Drive to showcase the safety features in the Toyota Etios series.
Story first published: Friday, August 25, 2017, 12:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X