டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

Written By:

ஹேட்ச்பேக் கார்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட க்ராஸ்ஓவர் கார்களில் விற்பனையில் ஓரளவு நல்ல நிலையை எட்டிய மாடல் டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ். டொயோட்டா லிவா காரின் அடிப்படையில் கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் சிறப்பம்சங்களுடன் க்ராஸ்ஓவர் ஸ்டைலுக்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

ஹோண்டா ஜாஸ் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஹோண்டா டபிள்யூஆர்வி காருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் விற்பனையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் முயற்சிகளில் டொயோட்டா ஈடுபட்டுள்ளது.

டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

மேலும், பண்டிகை காலத்தில் பலர் கார் வாங்க திட்டம் வைத்திருப்பதால், அவர்களை கவரும் விதத்தில், எட்டியோஸ் க்ராஸ் எக்ஸ் எடிசன் என்ற சிறப்பு பதிப்பு மாடலை டொயோட்டா வெளியிட்டு இருக்கிறது. இதன்மூலமாக, சந்தைப் போட்டி நெருக்குதலை ஓரளவு சமாளிக்க முடியும் என்று டொயோட்டா கருதுகிறது.

டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் எக்ஸ் எடிசன் மாடலானது, க்வார்ட்ஸ் பிரவுன் என்ற விசேஷ வண்ணத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. க்ரில் அமைப்புக்கு கருப்பு வண்ணம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பனி விளக்குகளில் அலங்கார வேலைப்பாடுகளுடன் கவர்ச்சி சேர்க்கிறது.

டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

கருப்பு வண்ண பிளாஸ்டிக் கிளாடிங் மற்றும் கருப்பு வண்ண ரூஃப் ரெயில்கள் இதற்கு க்ராஸ்ஓவர் ஸ்டைலுக்கு எடுத்துச் செல்கிறது. இந்த காரின் சி பில்லரின் பக்கவாட்டில் X எடிசன் பேட்ஜ் பதிக்கப்பட்டு இருக்கிறது.

டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

இந்த காரில் டைமண்ட் கட் அலாய் வீல்கள், பின்புறத்திற்கான ரியர் ரூஃப் ஸ்பாய்லர் அமைப்பு போன்றவை தோற்றத்திற்கு கூடுதல் வசீகரத்தை சேர்க்கின்றன.

டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

இந்த காரில் 6.8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா வசதியும் உண்டு.

டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

புதிய கார்பன் ஃபைபர் போன்ற ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. சாம்பல் வண்ண ஃபேப்ரிக் இருக்கைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

இந்த காரில் 80 பிஎஸ் பவரையும், 104 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், 68 பிஎஸ் பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. பெட்ரோல், டீசல் மாடல்கள் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் கிடைக்கும்.

டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

இந்த காரில் இரண்டு ஏர்பேக்குகள், சீட் பெல்ட் வார்னிங் சிஸ்டம், இபிடி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் ஆங்கர் பாயிண்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. எனவே, அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களில் நிறைவை தருகிறது.

டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

விலை விபரம் பற்றி இதுவரை தகவல் இல்லை. கூடுதல் விபரங்களுக்கு அருகிலுள்ள டொயோட்டா டீலரை அணுகி விபரங்களை பெறலாம்.

English summary
Toyota Kirloskar Motor (TKM) has launched a special edition of Etios Cross in India.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark