டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவிக்கு அமோக வரவேற்பு

Written By:

பிரிமியம் எஸ்யூவி ரக மார்க்கெட்டில் டொயோட்டா ஃபார்ச்சூனர்தான் இந்தியர்களின் நம்பர்-1 சாய்ஸ். இந்த நிலையில், கடந்த ஆண்டு துவக்கத்தில் புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி வந்த பின்னர், டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு நெருக்கடி முற்றியது.

இதனை உணர்ந்து கொண்டு கடந்த நவம்பர் மாதத்தில் புதிய தலைமுறை ஃபார்ச்சூனர் எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கியது டொயோட்டா. எதிர்பார்த்தபடியே, புதிய டொயோட்டா ஃபார்ச்சூனக்கு சிறப்பான வரவேற்பை வாடிக்கையாளர்கள் வழங்கியுள்ளனர்.

புக்கிங்கில் அசத்தும் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர்!

ஆம், அறிமுகம் செய்யப்பட்டு இரண்டு மாதங்களில் 10,000க்கும் அதிகமான புக்கிங்குகளை புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி பெற்றிருக்கிறது. மேலும், இதுவரை 5,000க்கும் மேற்பட்ட புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவிகளும் டெலிவிரி கொடுக்கப்பட்டுள்ளது.

புக்கிங்கில் அசத்தும் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர்!

முன்பதிவு தொடர்ந்து சிறப்பாக இருப்பதால், தற்போது புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவிக்கு இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நீடிக்கிறது. அதேநேரத்தில், முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு விரைந்து டெலிவிரி கொடுக்கும் முயற்சிகளை எடுத்து வருவதாக டொயோட்டா கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புக்கிங்கில் அசத்தும் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர்!

பழைய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியிலிருந்து பல்வேறு டிசைன் மாற்றங்களுடன் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி மார்க்கெட்டுக்கு வந்தது. முன்புறத்தில் ஹெட்லைட், க்ரில் அமைப்பு, பனி விளக்குகள் அறை ஆகியவை முற்றிலும் வேறுபட்ட டிசைனில் நவீன கால காராக மாறிவிட்டது. பின்புறத்திலும் டெயில் லைட் க்ளஸ்ட்டர் டிசைனும் மாற்றங்கள் செய்யபப்பட்டுள்ளது.

புக்கிங்கில் அசத்தும் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர்!

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி பெட்ரோல், டீசல் மாடல்களில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் இருக்கும் 2.7 லிட்டர் எஞ்சின் அLிகபட்சமாக 164 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் தேர்வு செய்து கொள்ளளாம்.

புக்கிங்கில் அசத்தும் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர்!

டீசல் மாடலில் இருக்கும் 2.8 லிட்டர் எஞ்சின் 174 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் மாடல் 4 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலிலும் தேர்வு செய்யும் வாய்ப்புள்ளது.

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி கிளேசியர் ஒயிட், சில்வர் ஸ்கை, எக்லிப்ஸ் பிளாக், கிறிஸ்டல் பியர்ல், கிராஃபைட், ஃபான்டம் பிரவுன் மற்றும் நெபுலா புளூ ஆகிய 7 விதமான வண்ணங்களில் வந்துள்ளது.

புக்கிங்கில் அசத்தும் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர்!

இந்த காரில் 7 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், ட்ரெயிலர் ஸ்வே கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரிவர்ஸ் கேமரா மற்றும் பார்க்கிங் சென்சார், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளுடன் வந்துள்ளது.

புக்கிங்கில் அசத்தும் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர்!

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் ரூ.25.92 லட்சம் முதல் ரூ.27.61 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடல் ரூ.27.52 லட்சம் முதல் ரூ.31.12 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் பிரத்யேக படங்கள்!

எமது டெஸ்ட் டிரைவின்போது எடுக்கப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் பிரத்யேக படங்களை இந்த செய்தியில் காணலாம்.

English summary
The new Toyota Fortuner has received over 10,000 bookings and the carmaker is busy ensuring deliveries are made on time.
Story first published: Saturday, January 21, 2017, 10:14 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark