அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த டொயோட்டா இன்னோவா கிரெஸ்டா டூரிங் ஸ்போர்ட் கார் அறிமுகமானது..!

Written By:

இந்தியாவின் சிறந்த பிரீமியம் எஸ்யூவீக்களில் ஒன்றாக விளங்கும் இன்னோவா காரின் புதிய வேரியண்டான கிரெஸ்டா டூரிங் ஸ்போர்ட் கார் அறிமுகமாகி இருக்கிறது.

புதிய டொயோட்டா இன்னோவா கிரெஸ்டா டூரிங் ஸ்போர்ட் கார் அறிமுகம்..!

ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா கார் சிறந்த மல்டி யுடிலிட்டி வெஹிகிள் அல்லது மல்டி பர்பஸ் வெஹிகிளாக விளங்கி வருகிறது.

புதிய டொயோட்டா இன்னோவா கிரெஸ்டா டூரிங் ஸ்போர்ட் கார் அறிமுகம்..!

2004 முதலாக தயாரிப்பில் உள்ள இன்னோவா காருக்கு பதிலாக கடந்த ஆண்டு இன்னோவா காரின் இரண்டாம் தலைமுறையான கிரெஸ்டா என்ற புதிய மாடல் அறிமுகம் ஆனது.

புதிய டொயோட்டா இன்னோவா கிரெஸ்டா டூரிங் ஸ்போர்ட் கார் அறிமுகம்..!

தற்போது, இந்தியாவில் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா கார் அறிமுகமாகி ஒராண்டு நிறைவடைகிறது. இதனையொட்டி இந்த புதிய மாடலை டொயோட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

புதிய டொயோட்டா இன்னோவா கிரெஸ்டா டூரிங் ஸ்போர்ட் கார் அறிமுகம்..!

இது ஸ்போர்ட் வேரியண்ட் என்பதால் முற்றிலும் புதிய தோற்றத்தில், கவர்ச்சியான கருப்பு நிற தீமில் இந்த கார் வெளிவந்துள்ளது.

புதிய டொயோட்டா இன்னோவா கிரெஸ்டா டூரிங் ஸ்போர்ட் கார் அறிமுகம்..!

டிசைனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய கிரிஸ்டா டூரிங் ஸ்போர்ட் மாடலில் பல்வேறு அம்சங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

புதிய டொயோட்டா இன்னோவா கிரெஸ்டா டூரிங் ஸ்போர்ட் கார் அறிமுகம்..!

புதிய கிரெஸ்டா டூரிங் காரில் பகல் நேரத்தில் எரியும் வகையிலான எல்ஈடி விளக்குகளுடன் கூடிய ஃரொஜெக்டர் முகப்பு விளக்குகள் இதில் இடம்பெற்றுள்ளன.

புதிய டொயோட்டா இன்னோவா கிரெஸ்டா டூரிங் ஸ்போர்ட் கார் அறிமுகம்..!

முகப்பு கிரில், ரியர் கேட் உள்ளிட்டவை கருப்பு தீமில் இடம்பெற்றுள்ளன.

புதிய டொயோட்டா இன்னோவா கிரெஸ்டா டூரிங் ஸ்போர்ட் கார் அறிமுகம்..!

காரின் கீழ் பாகம் முழுவதும் பிளாஸ்டிக் கிளாடிங் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகப்படியான கிரோம் வேலைப்பாடுகள் இதில் கவர்ச்சிகரமாக செய்யப்பட்டுள்ளது.

புதிய டொயோட்டா இன்னோவா கிரெஸ்டா டூரிங் ஸ்போர்ட் கார் அறிமுகம்..!

முந்தைய க்ரெஸ்டா காரில் 17 இஞ்ச் வீல்கள் இடம்பெற்றிருந்த நிலையில் புதிய இன்னோவா கிரெஸ்டா டூரிங் ஸ்போர்ட் காரில் 16 இஞ்ச் க்கருப்பு நிற அலாய் வீல்கள் இடம்பெற்றுள்ளது.

புதிய டொயோட்டா இன்னோவா கிரெஸ்டா டூரிங் ஸ்போர்ட் கார் அறிமுகம்..!

17 இஞ்ச் வீல்களில் ஏற்படும் கோலாறுகள் குறித்து தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் எழுந்ததால் புதிய காரில் 16 இஞ்ச் வீல் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய டொயோட்டா இன்னோவா கிரெஸ்டா டூரிங் ஸ்போர்ட் கார் அறிமுகம்..!

இதன் பி மற்றும் சி பில்லர்கள் கருப்பு வண்ணத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது, இண்டிகேட்டர்களுடன் கூடிய கருப்பு வண்ண வெளிப்புற ரியர் வியூ கண்ணாடிகள் இடம்பெற்றுள்ளது

புதிய டொயோட்டா இன்னோவா கிரெஸ்டா டூரிங் ஸ்போர்ட் கார் அறிமுகம்..!

உட்புறத்தில் குறிப்பிடும்படியான மாற்றங்கள் இல்லாமல் முழுவதும் கருப்பு நிற வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

புதிய டொயோட்டா இன்னோவா கிரெஸ்டா டூரிங் ஸ்போர்ட் கார் அறிமுகம்..!

சிறப்பு அம்சங்கள் புதிய டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா டூரிங் ஸ்போர்ட் காரில் உள்ள சிறப்பு அம்சங்களை கீழே காணலாம்.

 • தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்
 • ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல்
 • எலக்ட்ரானிக் முறையில் மாற்றியமைத்துக்கொள்ளும் ஓட்டுநர் இருக்கை
புதிய டொயோட்டா இன்னோவா கிரெஸ்டா டூரிங் ஸ்போர்ட் கார் அறிமுகம்..!
 • ரியர் பார்கிங் கேமரா
 • இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை சீட்களுக்கும் ரியர் ஏசி வசதி
 • 6 ஏர்பேக்குகள்
புதிய டொயோட்டா இன்னோவா கிரெஸ்டா டூரிங் ஸ்போர்ட் கார் அறிமுகம்..!
 • ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி
 • ட்ரேக்‌ஷன் கண்ட்ரோல்
 • ஹில் அஸிஸ்ட் வசதி
 • எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோக்கிராம்
 • எஞ்சின் ஸ்டார்/ஸ்டாப் வசதியுடன் கூடிய கீலெஸ் எண்ட்ரீ
புதிய டொயோட்டா இன்னோவா கிரெஸ்டா டூரிங் ஸ்போர்ட் கார் அறிமுகம்..!

புதிய இன்னோவா கிரெஸ்டா டூரிங் ஸ்போர்ட் கார் அதிகப்படியான பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக உள்ளது.

புதிய டொயோட்டா இன்னோவா கிரெஸ்டா டூரிங் ஸ்போர்ட் கார் அறிமுகம்..!

முன்பக்கம் டூயல் ஏர்பேக்குகள், பக்கவாட்டில் கர்டெயின் ஏர்பேக்குகள் மற்றும் ஓட்டுநருக்காக கால் முட்டிக்கென பிரத்யேக ஏர் பேக் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய டொயோட்டா இன்னோவா கிரெஸ்டா டூரிங் ஸ்போர்ட் கார் அறிமுகம்..!

இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ள டச் ஸ்கிரீன் கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது.

புதிய டொயோட்டா இன்னோவா கிரெஸ்டா டூரிங் ஸ்போர்ட் கார் அறிமுகம்..!

மேலும் இந்த காரின் ஸ்டீரிங் வீலில் ஆடியோ, ஃபோன் மற்றும் கிரூஸ் கண்ட்ரோல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய டொயோட்டா இன்னோவா கிரெஸ்டா டூரிங் ஸ்போர்ட் கார் அறிமுகம்..!

இந்த காரில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும்இளைஞர்களை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய டொயோட்டா இன்னோவா கிரெஸ்டா டூரிங் ஸ்போர்ட் கார் அறிமுகம்..!

2017 டொயோட்டா இன்னோவா கிரெஸ்டா டூரிங் ஸ்போர்ட் கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு மாடல்களிலும் கிடைக்கிறது.

புதிய டொயோட்டா இன்னோவா கிரெஸ்டா டூரிங் ஸ்போர்ட் கார் அறிமுகம்..!

இந்த காரில் உள்ள 2.7 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் அதிகபட்சமாக 164 பிஹச்பி ஆற்றலையும், 248 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தவல்லது.

புதிய டொயோட்டா இன்னோவா கிரெஸ்டா டூரிங் ஸ்போர்ட் கார் அறிமுகம்..!

5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் என இரண்டு கியர் பாக்ஸ் ஆப்ஷன்களில் இந்த பெட்ரோல் இஞ்சின் மாடல் கிடைக்கிறது.

புதிய டொயோட்டா இன்னோவா கிரெஸ்டா டூரிங் ஸ்போர்ட் கார் அறிமுகம்..!

புதிய இன்னோவா கிரெஸ்டா டூரிங் ஸ்போர்ட் காரின் டீசல் இஞ்சின் மேனுவல் டீசல் மற்றும் ஆட்டோமேடிக் டீசல் என இரு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

புதிய டொயோட்டா இன்னோவா கிரெஸ்டா டூரிங் ஸ்போர்ட் கார் அறிமுகம்..!

மேனுவல் டீசல் வேரியண்டில் 2.4 லிட்டர் இஞ்சின் கொடுக்கப்படுகிறது. இது அதிகபட்சமாக 148 பிஹச்பி ஆற்றலையும், 343 என்எம் டார்க்கையும் வழங்கவல்லது.

புதிய டொயோட்டா இன்னோவா கிரெஸ்டா டூரிங் ஸ்போர்ட் கார் அறிமுகம்..!

இதேபோல, ஆட்டோமேடிக் டீசல் வேரியண்டில் 2.8 லிட்டர் இஞ்சின் கொடுக்கப்படுகிறது. இது அதிகபட்சமாக 172 பிஹச்பி ஆற்றலையும், 360 என்எம் டார்க்கையும் வழங்கவல்லது.

புதிய டொயோட்டா இன்னோவா கிரெஸ்டா டூரிங் ஸ்போர்ட் கார் அறிமுகம்..!

புதிய கிரெஸ்டா டூரிங் ஸ்போர்ட்ஸ் கார் வைடு ஃபயர் ரெட்( Wildfire red) மற்றும் ஒயிட் பேர்ல் கிரிஸ்டல் ஷைன் (White Pearl Crystal Shine) என்ற இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.

புதிய டொயோட்டா இன்னோவா கிரெஸ்டா டூரிங் ஸ்போர்ட் கார் அறிமுகம்..!

2017 இன்னோவா கிரெஸ்டா டூரிங் ஸ்போர்ட் கார் ரூ.17.79 லட்சம் முதல் ரூ.22.15 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது.

புதிய டொயோட்டா இன்னோவா கிரெஸ்டா டூரிங் ஸ்போர்ட் கார் அறிமுகம்..!

இந்த காரின் வேரியண்ட் வாரியான விலை விபரம் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

 • பெட்ரோல் மேனுவல் - ரூ. 17.79 லட்சம்
 • பெட்ரோல் ஆட்டோமேடிக் - ரூ. 20.84 லட்சம்
 • டீசல் மேனுவல் - ரூ. 18.91 லட்சம்
 • டீசல் ஆட்டோமேடிக் - ரூ. 22.15 லட்சம்
English summary
Read in Tamil about toyota launches new innova crysta touring sport car in india. price, mileage, specs and more.
Story first published: Thursday, May 4, 2017, 16:39 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark