டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா வென்ச்சரர் விரைவில் இந்தியா வருகை

Written By:

கடந்த ஆண்டு மே மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. முன்பதிவிலும் அசத்திய புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா கார் தொடர்ந்து சிறப்பான விற்பனையை பதிவு செய்து வருகிறது.

பழைய மாடலில் இருந்து வேறுபட்ட டிசைன், அதிக வசதிகள், சக்திவாய்ந்த எஞ்சின் ஆப்ஷன்கள் ஆகியவை டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு அதிக வலு சேர்த்தன. விலை அதிகம் நிர்ணயிக்கப்பட்டு வந்தபோதிலும், கொடுக்கும் பணத்திற்கு நிறைவான மாடலாக வருகை தந்ததே பெரும் வரவேற்புக்கு காரணமாக அமைந்தது.

எக்கச்சக்க வசதிகளுடன் வருகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மாடல்!

ஏற்கனவே, போதுமான வசதிகளுடன் வந்த டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் தற்போது இன்னும் கூடுதல் வசதிகளையும், ஆக்சஸெரீகளையும் கொடுத்து வாடிக்கையாளர்களை திக்குமுக்காடச் செய்ய டொயோட்டா முனைந்துள்ளது.

எக்கச்சக்க வசதிகளுடன் வருகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மாடல்!

ஆம், விரைவில் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய டொயோட்டா கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. டொயாட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா வென்ச்சரர் என்ற பெயரில் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

எக்கச்சக்க வசதிகளுடன் வருகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மாடல்!

விரைவில் இந்தோனேஷிய மார்க்கெட்டில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதைத்தொடர்ந்து, இந்தியாவிலும் இந்த புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இந்த புதிய மாடலின் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்களும், படங்களும் இணையதளங்களில் கசிந்துள்ளன.

எக்கச்சக்க வசதிகளுடன் வருகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மாடல்!

தோற்றத்திற்கு கூடுதல் கவர்ச்சி சேர்க்கும் விதத்தில் க்ரோம் அலங்கார உதிரிபாகங்கள் அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளன. பாடி கிளாடிங் எனப்படும் பிளாஸ்டிக் சட்டங்கள் காரை சுற்றிலும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. சைலென்சர் குழாய் க்ரோம் பூச்சு கொடுக்கப்பட்டு இருக்கிறது. கன் மெட்டல் ஃபினிஷ் செய்யப்பட்ட அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கும்.

எக்கச்சக்க வசதிகளுடன் வருகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மாடல்!

வெளிப்புறத் தோற்றத்தை மிகவும் வசீகரமாக காட்டுவதற்கு அதிக ஆக்சஸெரீகள் சேர்க்கப்பட்டிருப்பது போன்றே, உட்புறத்திலும் கூடுதல் சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பிரிமியம் லெதர் இருக்கைகள் இருக்கும். இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் மல்டி இன்ஃபர்மேஷன் திரையும் கொடுக்கப்பட்டு இருக்கும். ஆட்டோமேட்டிக் ஏசி, ஸ்மார்ட் என்ட்ரி கீ உள்ளிட்ட வசதிகளுடன் வருகிறது.

எக்கச்சக்க வசதிகளுடன் வருகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மாடல்!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா வென்ச்சரர் மாடலில் 7 ஏர்பேக்குகள், இபிடி., நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், குழந்தைகளுக்கான இருக்கையை பொருத்துவதற்கான ஐசோஃபிக்ஸ் ஆங்கர் அமைப்புடன் வருகிறது.

எக்கச்சக்க வசதிகளுடன் வருகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மாடல்!

எஞ்சின் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இருக்காது. தற்போது பயன்படுத்தப்படும் 2.4 லிட்டர் மற்றும் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் விற்பனைக்கு கிடைக்கும். முதலில் இந்தோனேஷியாவிலும், அடுத்து இந்தியா மற்றும் தாய்லாந்து மார்க்கெட்டுகளிலும் இந்த புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Toyota is expected to launch the top of the line variant of Innova Crysta called as the Venturer in Indonesia and the brochure has been leaked revealing the new MPV.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark