புதிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ கார் பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம்!

Written By:

மேம்படுத்தப்பட்டு அம்சங்களுடன் புதிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ கார் பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கார் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ கார்!

வடிவமைப்பு மற்றும் வசதிகளில் புதிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ கார் சிறப்பாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. பல நவீன பாதுகாப்பு அம்சஙகளும் கொடுக்கப்பட்டுள்ளன.முன்பைவிடவும் இன்னமும் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறது புதிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ எஸ்யூவி. குறிப்பாக, முகப்பு மிக சிறப்பாக மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ கார்!

புதிய பானட் அமைப்பு ஓட்டுனருக்கு சாலை தெளிவாக பார்ப்பதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது. ஆஃப்ரோடு சாகசங்களின்போது முன்புறம் தரையில் இடிக்காதவாறு இருப்பதற்காக பம்பர் அமைப்பு உயர்த்தப்பட்டு இருக்கிறது.

புதிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ கார்!

புதிய ஹெட்லைட் அமைப்பு, புதிய க்ரில், எல்இடி பகல்நேர விளக்குகள் என நவீன யுக முகப்பு அம்சங்கள் சிறப்பு சேர்க்கின்றன. 12 ஸ்போக்குகள் கொண்ட 19 அங்குல அலாய் சக்கரங்களும் பிரம்மாண்டத்திற்கு வலு சேர்க்கின்றன.

புதிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ கார்!

புதிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ காரின் உட்புறத்திலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. டேஷ்போர்டு அமைப்பு பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதால், ஓட்டுனருக்கான பார்வை திறன் சிறப்பாக இருக்கிறது. அதேபோன்று, சென்டர் கன்சோல், சுவிட்ச் கியர் போன்ற அமைப்புகளும் புதிதாக இருக்கின்றன.

புதிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ கார்!

புதிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ எஸ்யூவியில் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆம்பியன் லைட் சிஸ்டமும் சிறப்பு.

புதிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ கார்!

புதிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ எஸ்யூவியில் 174.5 பிஎச்பி பவரையும்,450 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்த 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மாடலில் 159 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 2.7 லிட்டர் எஞ்சின் உள்ளது.

புதிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ கார்!

மேலும், 249 பிஎச்பி பவரையும், 380 என்எம் டார்க்கையும் வழங்கும் 4.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனும் உள்ளது. இந்த பிரம்மாண்ட எஸ்யூவி 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

புதிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ கார்!

இந்த பிரிமியம் எஸ்யூவியில் மோதல் தவிர்ப்பு தொழில்நுட்பம், தடம் மாறுதல் குறித்து எச்சரிக்கும் நுட்பம், ஆட்டோமேட்டிக் ஹை பீம் சிஸ்டம், டைனமிக் ரேடார் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட பல நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது.

புதிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ கார்!

இந்த புதிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ எஸ்யூவி பிரம்மாண்டத்திலும், வசதிகளிலும் கவர்கிறது. விரைவில் இந்த புதிய மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கம்போல் இந்த பிரம்மாண்ட எஸ்யூவி இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும்.

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
2018 Toyota Land Cruiser Prado Facelift Revealed.
Story first published: Friday, September 15, 2017, 10:50 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos