இந்தியாவில் திரும்பப்பெறப்படும் டொயோட்டா கொரோலா ஆல்டிஸ் கார்கள்!

Written By:

உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஜப்பானின் டொயோட்டா, அதன் கொரோலா ஆல்டிஸ் மாடல் கார்களை திரும்பப்பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி இந்தியா உட்பட உலகம் முழுவதும் 2.9 மில்லியன் ஆல்டிஸ் கார்களை திரும்பப்பெற உள்ளது டொயோட்டா நிறுவனம்.

கொரோலா ஆல்டிஸ் கார்களை திரும்பப்பெறுகிறது டொயோட்டா!

கொரோலா ஆல்டிஸ் கார்களில் உள்ள ஏர்பேக்குகளில் பாதுகாப்பு குறைபாடு கண்டறியப்பட்டுள்ளதால் இந்த திரும்பப்பெரும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார் உதிரி பாகங்களை தயாரிக்கும் டகாடா நிறுவனத்தால் இந்த ஏர் பேக்குகள் தயாரிக்கப்பட்டவை ஆகும்.

கொரோலா ஆல்டிஸ் கார்களை திரும்பப்பெறுகிறது டொயோட்டா!

இந்தியா, ஜப்பான், சீனா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளை உள்ளடக்கிய ஓசியானா பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட 2.9 மில்லியன் கார்கள் திரும்பப்பெறப்படுகின்றன.

கொரோலா ஆல்டிஸ் கார்களை திரும்பப்பெறுகிறது டொயோட்டா!

2010 - 2012 ஆண்டுகள் காலகட்டத்தில் இந்த ஆல்டிஸ் கார்கள் தயாரிக்கப்பவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகபட்சமாக ஓசியானா பகுதிகளில் 1.16 லட்சம், ஜப்பானில் 7.5 லட்சம், இந்தியாவில் 23,000 ஆல்டிஸ் கார்கள் திரும்பப்பெறப்படும் என டொயோட்டா அறிவித்துள்ளது.

கொரோலா ஆல்டிஸ் கார்களை திரும்பப்பெறுகிறது டொயோட்டா!

டகாடா நிறுவனம் தயாரித்த ஏர் பேக்குகளில் பயன்படுத்தப்படும் உலர்த்தும் கலவை இல்லாத அம்மோனியா நைட்ரேட் ஆபத்தானது என கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்நிறுவனம் தயாரித்து அளித்த சந்தையில் இருந்த 100 மில்லியன் ஏர்பேக்குகளும் திரும்பப்பெறப்பட்டுள்ளது.

கொரோலா ஆல்டிஸ் கார்களை திரும்பப்பெறுகிறது டொயோட்டா!

முன்னதாக 2013ஆம் ஆண்டில் இதேபோல டகாடா நிறுவன ஏர்பேக்குகளால் தொடர்ச்சியான உயிரிழப்புகள் ஏற்பட்டதை அடுத்து அமெரிக்க ஆட்டொமொபைல் வரலாற்றில் அதிகபட்சமாக 42 மில்லியன் கார்கள் திரும்பப்பெறப்பட்டது நினைவுகூறத்தக்கது.

கொரோலா ஆல்டிஸ் கார்களை திரும்பப்பெறுகிறது டொயோட்டா!

டொயோட்டாவின் இந்திய வர்த்தக நிறுவனமான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு இது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு, டீலர்கள் மூலமாக இலவசமாக இப்பிரச்சனை சரிச்செய்துதரப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

கொரோலா ஆல்டிஸ் கார்களை திரும்பப்பெறுகிறது டொயோட்டா!

டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் தான் மேம்படுத்தப்பட்ட புதிய 2017 கொரோலா ஆல்டிஸ் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் புதிய இண்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் உள்ளது.

கொரோலா ஆல்டிஸ் கார்களை திரும்பப்பெறுகிறது டொயோட்டா!

மேம்படுத்தப்பட்ட புதிய கொரோலா ஆல்டிஸ் கார், 1.8 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் இஞ்சின் என இரண்டு வேரியண்டுகளில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 15.87 லட்சம் முதல் ரூ.19.91 லட்சம் வரையில் கிடைக்கிறது. (எக்ஸ் - ஷோரூம், டெல்லி)

English summary
toyota recalls corolla altis due to faulty airbag issue
Story first published: Friday, March 31, 2017, 12:43 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark