புதிய டொயோட்டா வியோஸ் செடான் கார் இந்திய வருகை விபரம்!

Written By:

மிட்சைஸ் செடான் கார் ரகத்தில் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, மாருதி சியாஸ் கார்கள் சிறப்பான வரவேற்பை பெற்றிருப்பதுடன், விற்பனையிலும் நல்ல எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றன. மேலும், ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ, ஸ்கோடா ரேபிட் உள்ளிட்ட போட்டி மாடல்களும் இருக்கின்றன.

 புதிய டொயோட்டா வியோஸ் செடான் கார் இந்திய வருகை விபரம்!

இந்த ரகத்தில் டொயோட்டா கார் நிறுவனத்திற்கு சரியான மாடல் இல்லாத நிலை இருக்கிறது. டொயோட்டா எட்டியோஸ் கார் டாக்சி மார்க்கெட்டில்தான் ஓடுகிறது. தனி நபர் மார்க்கெட்டில் அவ்வளவாக எடுபடவில்லை. எனவே, ஹோண்டா சிட்டிக்கு நிகரான அம்சங்கள் கொண்ட தனது வியோஸ் கார் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது டொயோட்டா.

 புதிய டொயோட்டா வியோஸ் செடான் கார் இந்திய வருகை விபரம்!

நம்பகத்தன்மை, நீடித்த உழைப்புக்கு பெயர் போன டொயோட்டா நிறுவனத்திடமிருந்து வரும் புதிய மிட்சைஸ் செடான் கார் என்பதால் இந்தியர்கள் மத்தியில் அதிக ஆவல் இருந்து வருகிறது.

 புதிய டொயோட்டா வியோஸ் செடான் கார் இந்திய வருகை விபரம்!

இந்த நிலையில், இந்த புதிய கார் மாடலை அடுத்த ஆண்டு பண்டிகை காலத்தில் களமிறக்க டொயோட்டா முடிவு செய்துள்ளதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

 புதிய டொயோட்டா வியோஸ் செடான் கார் இந்திய வருகை விபரம்!

வடிவமைப்பில் மிக நேர்த்தியாகவும், அசத்தலாகவும் இருக்கும் புதிய டொயோட்டா வியோஸ் கார் ஹோண்டா சிட்டி காருடன் நேருக்கு நேர் மோதும் அனைத்து அம்சங்களையும் பெற்றிருக்கிறது. இந்த டிசைன் நிச்சயம் இந்தியர்களை வெகுவாக கவரும்.

 புதிய டொயோட்டா வியோஸ் செடான் கார் இந்திய வருகை விபரம்!

புதிய டொயோட்டா வியோஸ் கார் 4,420மிமீ நீளம் கொண்டிருப்பதுடன், ஹோண்டா சிட்டி காரைவிட அகலம் அதிகம் இருப்பதால், டொயோட்டா எட்டியோஸ் காரைப் போலவே சிறந்த இடவசதியை அளிக்கும். தரத்திலும் டொயோட்டா பெயர் சொல்லும் பிள்ளையாக இருக்கும்.

Recommended Video - Watch Now!
[Tamil] 2018 Hyundai Verna Indian Model Unveiled - DriveSpark
 புதிய டொயோட்டா வியோஸ் செடான் கார் இந்திய வருகை விபரம்!

மலேசியாவில் விற்பனையில் இருக்கும் டொயோட்டா வியோஸ் கார் மாடலில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 7 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா போன்றவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

 புதிய டொயோட்டா வியோஸ் செடான் கார் இந்திய வருகை விபரம்!

புதிய டொயோட்டா வியோஸ் கார் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலில் வர இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 107 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கும் என்பதுடன், சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

 புதிய டொயோட்டா வியோஸ் செடான் கார் இந்திய வருகை விபரம்!

டீசல் மாடலில் 87 பிஎச்பி பவரை வழங்க வல்ல 1.4 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

 புதிய டொயோட்டா வியோஸ் செடான் கார் இந்திய வருகை விபரம்!

புதிய டொயோட்டா வியோஸ் கார் ரூ.7 லட்சம் முதல் ரூ.11 லட்சம் வரையிலான விலையில் நிலைநிறுத்தப்படும். ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, மாருதி சியாஸ் கார்களுக்கு கடும் நெருக்கடியை புதிய டொயோட்டா வியோஸ் கார் தரும் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Autocar India reveals that the Toyota is working hard to launch the sedan by Diwali 2018.
Story first published: Tuesday, November 28, 2017, 14:32 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark