புத்தம் புதிய டொயோட்டா செடான் கார் அறிமுகம் - விபரம்!

Written By:

புதிய டொயோட்டா யாரிஸ் ATIV செடான் கார் தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் படங்கள் மற்றும் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
புத்தம் புதிய டொயோட்டா செடான் கார் அறிமுகம் - விபரம்!

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் டொயோட்டா வயோஸ் காரைவிட இந்த கார் விலை குறைவானதாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. மேலும், வயோஸ் காரின் பல உட்புற டிசைன் தாத்பரியங்கள் இந்த காரில் இடம்பெற்றிருக்கின்றன.

புத்தம் புதிய டொயோட்டா செடான் கார் அறிமுகம் - விபரம்!

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவை வெளிப்புற கவர்ச்சிக்கு கூடுதல் வலு சேர்க்கும் அம்சங்களாக கூறலாம்.

புத்தம் புதிய டொயோட்டா செடான் கார் அறிமுகம் - விபரம்!

இந்த காரின் இன்டீரியர் மிகவும் சிறப்பாக இருக்கிறது. டேஷ்போர்டு, சென்டர் கன்சோல் ஆகியவை வெகு நேர்த்தியாக இருக்கின்றன. வயோஸ் காரைவிட விலை குறைவாக இருந்தாலும், பார்க்க பிரிமியம் கார் போல உட்புறத்தில் காட்சி தருகிறது.

புத்தம் புதிய டொயோட்டா செடான் கார் அறிமுகம் - விபரம்!

இந்த காரில் 7 இன்ச் தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. 6 ஸ்பீக்கர்களுடன் கூடிய மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.

Recommended Video
2017 Datsun redi-GO 1.0 Litre Review: Specs
புத்தம் புதிய டொயோட்டா செடான் கார் அறிமுகம் - விபரம்!

தாய்லாந்து நாட்டில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 86 பிஎஸ் பவரையும், 108 என்எம் டார்க் திறனையும் வழங்கும். சிவிடி- ஐ கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புத்தம் புதிய டொயோட்டா செடான் கார் அறிமுகம் - விபரம்!

இந்த காரில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், 7 ஏர்பேக்குகள் போன்ற முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாகவே இருக்கின்றன. தாய்லாந்து நாட்டில் ஹோண்டா சிட்டி உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Japanese automaker Toyota has revealed the new Yaris Ativ sedan. Initially, the sedan will be sold in the Thailand market.
Story first published: Thursday, August 17, 2017, 9:29 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos