ஹோண்டா நிறுவனம் நடப்பாண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கும் கார்கள்!

ஹோண்டா கார்ஸ் நிறுவனம் 2017ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த இருக்கும் மாடல்கள் என்ன, அதன் சிறப்பம்சங்கள் என்ன என்பது குறித்த தகவல்களை காண்போம்..

By Super Admin

இந்திய கார் சந்தையில் ஏற்பட்ட கடும் போட்டி காரணமாக தான் இழந்த இடத்தை மீண்டும் கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது ஹோண்டா நிறுவனம்.

ஹோண்டாவின் மிகவும் வெற்றிகரமான மாடலான 'சிட்டி' செடன் கார், 1997ல் அறிமுகமானதில் இருந்து உயர்ரக அம்சங்களுடன் கூடிய பிரிமியம் செக்மெண்டுக்கு வழிகோலியது என்று கூட சொல்லலாம்.

இதைப்போல் பல சிறப்பான கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்திய ஹோண்டா அதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் பல புதிய கார்களை அறிமுகப்படுத்த உள்ளது, அதன் விவரங்களை தற்போது காணலாம்.

ஹோண்டா டபிள்யூஆர்வி:

ஹோண்டா டபிள்யூஆர்வி:

காம்பாக்ட் எஸ்யுவி செக்மெண்ட்டில் அறிமுகமாகும் டபிள்யூஆர்வி, ஜாஸ் ஹேட்ச்பேக் கார் மாடலின் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் சில மாற்றங்களுடன், முன் மற்றும் பின்புற பம்பர்களில் ஸ்கிட் பிளேட்டுகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளன.வெளிப் புறத்தில் பல புதுமைகள் புகுத்தப்பட்டு எஸ்யுவி சாராம்சத்துடன் உள்ளது. முன்புற கிரில் அமைப்பில் ஹோண்டா லோகோவுடன் இணைந்த பகுதியில் முகப்பு விளக்குகள் நேர்கோட்டில், ஜாஸ் மாடலை காட்டிலும் பார்ப்பதற்கு நேர்த்தியாக உள்ளது.

2017ல் இந்தியாவில் அறிமுகமாகும் ஹோண்டா கார்கள்!

டபிள்யூஆர்வியின் டேஷ்போர்ட் ஜாஸ் மாடலை போன்றது, மேலும் இதில் கீலெஸ் என்ட்ரி, ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் இயங்குதளங்களை சப்போர்ட் செய்யும் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், மேஜிக் சீட்ஸ் என உட்புறத்தில் பல சிறம்பம்சங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

2017ல் இந்தியாவில் அறிமுகமாகும் ஹோண்டா கார்கள்!

பின்புற இருக்கையில் அகலமான இடவசதி மேம்படுத்தப்பட்டு உள்ளது. ஹோண்டா தனது டபிள்யூஆர்வி கிராஸ் ஓவர் மாடலை, 1.2லிட்டர் ஐவி டெக் பெட்ரோல் இஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் ஐடிடெக் டீசல் எஞ்சின் கொண்டும் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • எதிர்பார்க்கப்படும் வெளியீட்டு தேதி: மார்ச் 2017
  • எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.7 முதல் ரூ.10 லட்சம் வரை
  • ஹோண்டா சிஆர்வி:

    ஹோண்டா சிஆர்வி:

    ஹோண்டா சிட்டி மாடலின் புகழுக்கு ஒப்பாக, சற்றும் குறைவில்லாத நன்மதிப்பை பெற்றது ஹோண்டா சிஆர்வி மாடல். பெட்ரோல் மாடல் மட்டுமே வெளிவந்த நிலையில் தற்போது அதன் டீசல் வேரியண்டும் வெளியாகிறது.

    2017ல் இந்தியாவில் அறிமுகமாகும் ஹோண்டா கார்கள்!

    அடுத்த தலைமுறை சிஆர்வி மாடல்களை மற்ற நாடுகளில் வெளியிட்டது போல இந்தியாவிலும் விரைவில் வெளியாக உள்ளது. இதில் 134 ஹச்பி பவரை வெளிப்படுத்தும் 2200சிசி சிஆர்டிஐ, 4 சிலிண்டர் இஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. புதிய ஸ்டைலிஷ் முகப்பு விளக்குகளும், எல்ஈடி பின்புற விளக்குகளும் உள்ளன.

    2017ல் இந்தியாவில் அறிமுகமாகும் ஹோண்டா கார்கள்!

    வெஹிகிள் ஸ்டெபிளிட்டி அஸிஸ்ட், ஏபிஸ், ட்ரேக்‌ஷன் கண்ட்ரோல் என எண்ணற்ற சிறப்பம்சங்களுடன் இதன் உட்புறமும், மிகுந்த சிரத்தையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி ஆட்டொமேடிக் ஆகிய இருவகை கியர் ஆப்சன்களுடன் 1.6 லிட்டர் டர்போசார்ஜ் எஞ்சினுடன் வெளியாகும் சிஆர்வி இதன் வகையில் நல்ல மைலேஜ் தரும் என கூறப்படுகிறது.

    • எதிர்பார்க்கப்படும் வெளியீட்டு தேதி: அக்டோபர் 2017
    • எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.20 முதல் ரூ.25 லட்சம் வரை
    • ஹோண்டா சிவிக்:

      ஹோண்டா சிவிக்:

      இந்திய கார் பிரியர்களின் பிரீமியம் பிராண்டாக விளங்கிய சிவிக் தற்போது மீண்டும் பல்வேறு சிறம்பம்சங்களுடனும், ஸ்போர்டி தோற்றத்துடனும் டீசல் எஞ்சினுடன் வர உள்ளது. இது 10ஆம் தலைமுறை சிவிக் ஆகும். பார்வைக்கு ஸ்போட்ஸ் கார் லுக்குடன் கவர்ச்சிகரமான வெளிப்புற வடிவமைப்பை பெற்றுள்ளது புதிய சிவிக்.

      2017ல் இந்தியாவில் அறிமுகமாகும் ஹோண்டா கார்கள்!

      முழுமையான எல்ஈடி முகப்பு விளக்குகள், பூமராங் போன்ற வடிவமைப்பில் பின்புற எல்ஈடி விளக்குகள், அலாய் வீல்ஸ் என அட்டகாசம் காட்டும் சிவிக், இதன் போட்டியாளர்களுக்கு நிச்சயம் அச்சுறுத்தல் தரும் வகையில் வடிவமைப்பு பெற்றுள்ளது. மேலும், இந்தியாவில் முதன் முறையாக பேடில் கியர் ஷிஃப்ட் சிஸ்டம் சிவிக்கில் தான் புகுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

      2017ல் இந்தியாவில் அறிமுகமாகும் ஹோண்டா கார்கள்!

      1.5 லிட்டர் டர்போ சார்ஜ் கொண்ட பெட்ரோல் இஞ்சின் 145 பிஹச்பி திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. 1.6 லிட்டர் டீசல் இஞ்சின் 125 பிஹச்பி திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாகும். இதில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டொமேடிக் கியர் பாக்ஸ் என இரண்டு ஆஃப்சன்கள் உள்ளது.

      • எதிர்பார்க்கப்படும் வெளியீட்டு தேதி: 2017 மத்தியில்
      • எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.15 முதல் ரூ.22 லட்சம் வரை

புதிய ஹோண்டா சிட்டி காரின் படங்கள்:

Most Read Articles
English summary
Honda has lined up new cars for the year 2017 in India, here are the upcoming Honda cars in India with specs, features and expected launch date and price.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X