இந்தியாவில் ரெனால்ட் நிறுவனம் அடுத்தடுத்து களமிறக்கும் புதிய கார்கள்... முழு விவரங்கள்..!!

Written By:

பிரபல ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரென்லாட் கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்தியாவில் கணிசமான சந்தை மதிப்பு தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.

குறிப்பாக ரெனால்ட் வெளியிட்ட டஸ்டர், லாட்ஜி, கிவிட் ஹேட்ச்பேக் ஆகிய கார் மாடல்கள் சிறந்த விற்பனை திறனை பெற்றுள்ளது.

ரெனால்ட் நிறுவனம் அடுத்தடுத்து வெளியிடும் புதிய கார்கள்..!!

ஏற்கனவே இந்த நிறுவனம் தயாரித்த மூன்று மாடல் கார்கள், இந்தியாவில் பெரிய விற்பனை திறனை பெற்றுள்ள நிலையில். அதன் நான்காவது மாடலான கேப்டூர் எஸ்யூவி கார் விரைவில் களமிறங்குகிறது.

ரெனால்ட் நிறுவனம் அடுத்தடுத்து வெளியிடும் புதிய கார்கள்..!!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள இந்த காருக்கு பிறகு, ஒவ்வொரு ஆண்டும் புதிய மாடல்களை வெளியிட ரெனால்ட் தயாராகி வருகிறது.

Recommended Video - Watch Now!
Datsun rediGO Gold 1.0-Litre Launched In India | In Tamil- DriveSpark தமிழ்
ரெனால்ட் கேப்டூர்

ரெனால்ட் கேப்டூர்

சமீபத்தில் ரெனால்ட் அறிமுகப்படுத்தியுள்ள கேப்டூர் கார் தான், ரெனால்ட்டின் அடுத்தடுத்த செயல்பாடுகளுக்கு இந்தியாவில் அச்சராம் அமைக்கவுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 மற்றும் ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு போட்டியாக இந்த கார், இந்திய சந்தையில் அறிமுகமாகிறது.

ரெனால்ட் நிறுவனம் அடுத்தடுத்து வெளியிடும் புதிய கார்கள்..!!

டஸ்டர் காரை பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ள இந்த காருக்கான வடிவமைப்பு பணிகள் அனைத்தும் சென்னையில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரேடியோ, ப்ளூடூத் உடன் கூடிய 7 இஞ்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஐஓஎஸ் தளத்திற்கான குரல் கண்டறியும் தொழில்நுட்பம்,

ரெனால்ட் நிறுவனம் அடுத்தடுத்து வெளியிடும் புதிய கார்கள்..!!

தட்பவெட்ப நிலையுடன் கூடிய வரைப்படம் மற்றும் நேரம் காட்டும் டிஸ்பிளே போன்ற அம்சங்கள் இந்த காரில் உள்ளன.

ரெனால்ட் நிறுவனம் அடுத்தடுத்து வெளியிடும் புதிய கார்கள்..!!

டூயல் ஏர்பேகுகள், ஏபிஸ் உடன் கூடிய இபிடி, மின்னணு உறுதிப்பாடு கட்டுப்பாடு, மலை பயணங்களுக்கான உதவி அமைப்பு, பிரேக் அமைப்பு போன்ற பாதுகாப்பு அம்சங்களிலும் ரெனால்ட் கேப்டூர் கவனமீர்க்கிறது.

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: அக்டோபர் 2017

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம்

ரெனால்ட் ஆர்பிசி எம்.பி.வி

ரெனால்ட் ஆர்பிசி எம்.பி.வி

கேப்டூர் காருக்கு பிறகு ரெனால்ட் அடுத்ததாக இந்தியாவில் வெளியிடும் மாடல் 7 இருக்கைகள் கொண்ட ஆர்பிசி எம்.பி.வி கார்.

மாருதி எர்டிகா காருக்கு போட்டியாக ஆர்பிசி எம்.பி.வி மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெனால்ட் நிறுவனம் அடுத்தடுத்து வெளியிடும் புதிய கார்கள்..!!

லாட்ஜி மாடல் கார் ரெனால்டிற்கு இந்தியாவில் பெரிய விற்பனை திறனை பெற்று தரவில்லை. அதற்கு மாற்றாகத்தான் இந்த காரை அந்நிறுவனம் வெளியிடுகிறது.

மேலும் எம்விபி தளத்தில் ஏற்கனவே மாருதி எர்டிகா, டொயோட்டா இன்னோவோ கார்கள் பெரிய சாதனையை இந்தியாவில் பதிவு செய்து வருகின்றன.

ரெனால்ட் நிறுவனம் அடுத்தடுத்து வெளியிடும் புதிய கார்கள்..!!

தொடர்ந்து வாடிக்கையாளர்களிடம் எம்.வி.பி கார்களுக்கான தேவையும் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதை பயன்படுத்த ரெனால்ட் ஆர்பிசி எம்.வி.பி காரை விரைவில் வெளியிடுகிறது.

ரெனால்ட் நிறுவனம் அடுத்தடுத்து வெளியிடும் புதிய கார்கள்..!!

வளைவான சக்கரங்கள் மற்றும் கட்டமைப்பான ஸ்டைலிங் உடன் ஒரு கிராஸோவர் மாடலில் ஆர்பிசி எம்.வி.பி கார் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: 2018

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.8 லட்சம் முதல் ரூ.11 லட்சம் வரை

ரெனால்ட் டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்

ரெனால்ட் டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்

ஐரோப்பாவில் ரெனால்ட் டாசியா என்ற பெயரில் அறியப்படுகிறது. டாசியா, முற்றிலும் புதிய டஸ்டர் காரை சமீபத்தில் அங்கு வெளியிட்டது.

தற்போது இருக்கும் டஸ்டர் தோற்றத்தில் தான் இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடல் இருக்கும். ஆனால் கட்டமைப்பில் பல மாற்றங்களை பெற்றிருக்கும்.

ரெனால்ட் நிறுவனம் அடுத்தடுத்து வெளியிடும் புதிய கார்கள்..!!

குறிப்பாக டஸ்டர் ஃபேஸ்லிஃப்டில் கேபின் அமைப்பு புதிய வடிவமைப்பை பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த மாடலில் உள்ள வின்ட்ஷீல்டை தற்போதைய மாடலில் இருப்பதை விட 100மிமீ தொலைவு தாண்டி அமைக்கப்பட்டுள்ளது.

ரெனால்ட் நிறுவனம் அடுத்தடுத்து வெளியிடும் புதிய கார்கள்..!!

கேபினுக்குள் அதிக இடவசதி கொண்டு உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் முன்பக்க சக்கரங்கள் மற்றும் பின் சக்கரங்கள் என இரண்டு இயங்கும் திறன் மாடல்களிலும் புதிய ரெனால்ட் ஃபேஸ்லிஃப்ட் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

ரெனால்ட் நிறுவனம் அடுத்தடுத்து வெளியிடும் புதிய கார்கள்..!!

டிசைன் மட்டுமில்லாமல், புதிய ரெனால்ட் காரில் பல்வேறு மாற்றங்களும் உள்ளன. முக்கியமாக இதனுடைய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் 7-இஞ்ச் அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: 2019

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.9 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை.

ரெனால்ட் நிறுவனம் அடுத்தடுத்து வெளியிடும் புதிய கார்கள்..!!

ரெனால்ட் அடுத்தடுத்து வெளியிடும் இந்த மூன்று கார்களின் எஞ்சின்களுமே 1.5 லிட்டர் திறனில் பெட்ரோல் மற்றும் டீசல் என இருவேறு தேவைகளுடன் இருக்கும்.

ரெனால்ட் நிறுவனம் அடுத்தடுத்து வெளியிடும் புதிய கார்கள்..!!

சிஎம்எஃப்-ஏ பிளாட்ஃபாரமின் கீழ் தயாராகும் இந்த கார், தோற்றத்திலும் செயல்திறனிலும் மிரட்டும் வகையில் இருக்கும் என ரெனால்ட் நம்பிக்கை கூறுகிறது.

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Read in Tamil: Renault India's product lineup includes just three vehicles. Click for Details...
Story first published: Wednesday, September 27, 2017, 8:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark