கூடுதல் அம்சங்களுடன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனர் அறிமுகம்!

Written By:

டொயோட்டா இன்னோவா மற்றும் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவிகளில் கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கூடுதல் சிறப்பம்சத்துடன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனர்!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் வாடிக்கையாளர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற மாடல். இந்த மாடலில் 17 அங்குல அலாய் வீல்களுடன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், வாடிக்கையாளர்கள் கொடுத்த பின்னூட்டங்களின் அடிப்படையில், இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் 16 அங்குல அலாய் வீல்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

கூடுதல் சிறப்பம்சத்துடன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனர்!

இந்த நிலையில், 16 அங்குல அலாய் வீல்களுடன் வந்த இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் டயர்களில் சைடு வால் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது. மோசமான சாலைகளிலும், அதிக பாரத்துடன் செல்லும்போது இந்த பிரச்னை ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

கூடுதல் சிறப்பம்சத்துடன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனர்!

இதையடுத்து, தற்போது இன்னோவா க்ரிஸ்ட்டா கார் மீண்டும் 17 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. வலுவான சைடு வால் பகுதியுடன் மேம்படுத்தப்பட்ட டயர்களுடன் இந்த 17 அங்குல அலாய் வீல்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

கூடுதல் சிறப்பம்சத்துடன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனர்!

அதேநேரத்தில், இந்த 17 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்ட மாடல் இசட் என்ற டாப் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும். இந்த அலாய் வீல்கள் டூரிங் ஸ்போர்ட் வேரியண்ட்டில் மட்டும் நிரந்தர அம்சமாக கொடுக்கப்படுகிறது.

கூடுதல் சிறப்பம்சத்துடன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனர்!

இதுதவிர, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் புதிய ஃபார்ச்சூனர் கார்களின் ஆட்டோமேட்டிக் மாடல்களில் எஞ்சின் ஸ்டார்ட் ஸ்டாப் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, சிக்னல்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் கார் நிற்கும்போது எஞ்சின் தானாக அணைந்து விடும். க்ளட்ச் பெடலை இயக்கும்போது எஞ்சின் உயிர் பெற்றுவிடும்.

கூடுதல் சிறப்பம்சத்துடன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனர்!

இந்த புதிய தொழில்நுட்ப வசதி மூலமாக எரிபொருள் விரயம் தவிர்க்கப்பட்டு, இரு கார்களின் மைலேஜ் சற்று அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. மஹிந்திரா நிறுவனத்தின் மைக்ரோ- ஹைப்ரிட் தொழில்நுட்பம் போன்றே இந்த வசதியை டொயோட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயமாகவே இருக்கும்.

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota India has updated its best-selling Innova Crysta and Fortuner SUV with new features and additional equipment ahead of the festive season.
Story first published: Wednesday, September 13, 2017, 15:14 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark