ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ காரை ஓட்டி பார்த்து வியந்த வாடிக்கையாளர்கள்!

Written By:

மிகவும் சக்திவாய்ந்த எஞ்சின் பொருத்தப்பட்ட ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ ஹேட்ச்பேக் காரை வாடிக்கையாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஓட்டி பார்ப்பதற்கான சிறப்பு நிகழ்ச்சி இன்று பெங்களூரில் நடந்தது. இதில், 150க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

 ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ காரை ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பு!

தற்போது இந்தியாவில் விற்பனையாகும் மிகவும் சக்திவாய்ந்த ஹேட்ச்பேக் கார்களில் ஒன்று ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ கார். இந்த காரின் எஞ்சின் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை வாடிக்கையாளர்கள் நேரடியாக தெரிந்து கொள்ளும் விதத்தில், ஹெண்ணூர் - பாகலூர் சாலையில் அமைந்துள்ள மேக்கோ கார்டோபியா வளாகத்தில் அமைத்துள்ள பந்தய களத்தில் நடந்தது.

 ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ காரை ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பு!

ஏராளமான வாடிக்கையாளர்கள் ஆர்முடன் வந்து கலந்து கொண்டனர். மூன்று ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ கார்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள் ஓட்டி பார்க்க வழங்கப்பட்டன. இந்த காரில் 189 பிஎச்பி பவரை அளிக்க வல்ல, 1.8 லிட்டர் டிஎஸ்ஐ 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின், 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸுடன் இணைந்து காட்டிய அபரிதமான செயல்திறனை ஓட்டி பார்த்தவர்கள் வியந்து போற்றினர்.

 ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ காரை ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பு!

அதிவேக கார் என்பதால் அதிக பாதுகாப்பு வசதிகளும் உள்ளன. இந்த காரில் இருக்கும் 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. தவிரவும், காரை நிலைத்தன்மையுடன் செலுத்தும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், அதிக தரைப்பிடிப்பை வழங்கும் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

 ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ காரை ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பு!

இந்த காரின் சக்திவாய்ந்த எஞ்சின் மூலமாக, அதிகபட்சமாக மணிக்கு 233கிமீ வேகம் வரை இந்த கார் தொட்டுவிடும் வல்லமையை கொண்டுள்ளது. 0-100 கிமீ வேகத்தை வெறும் 7.2 வினாடிகளில் எட்டிவிடும் திறனை பெற்றிருக்கிறது.

 ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ காரை ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பு!

எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், க்ரோம் பூச்சுடன் கூடிய இரட்டைக் குழல் சைலென்சர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை பெற்றிருக்கிறது இந்த கார். பிற போலோ கார் மாடல்களிலிருந்து வேறுபடுத்துவதற்காக இது 3 கதவுகள் கொண்ட மாடலாக இருக்கிறது.

 ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ காரை ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பு!

இதன் உறுதியான கட்டமைப்பு, பாதுகாப்பு வசதிகள், செயல்திறன் மிக்க எஞ்சின் போன்ற அனைத்தும் சேர்த்து புதுவித அனுபவத்தை தந்ததாக இந்த காரை ஓட்டி பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்த பவர்ஃபுல் ஹேட்ச்பேக் காரை மேக்கோ கார்டோப்பியா ரேஸ் டிராக்கில் ஓட்டி பரிசோதித்தோம். இதுபற்றிய சிறப்பு செய்தித் தொகுப்பை விரைவில் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படிக்கலாம்.

புதிய மாருதி இக்னிஸ் காரின் படங்கள்!

இளைஞர்களை வெகுவாக கவர்ந்து இழுத்து வரும், புதிய மாருதி இக்னிஸ் காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
Volkswagen, Europe’s leading manufacturer organized the GTI experiential drive in Bengaluru for its customers. The drive over the weekend will witness participation from over 150 customers across the city giving them a unique opportunity to experience the Hottest Hatch on Indian roads– The GTI.
Story first published: Saturday, February 4, 2017, 17:48 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark