2017ல் அறிமுகமாக இருக்கும் புதிய ஃபோக்ஸ்வேகன் கார்கள்!

Written By:

பிரபல ஜெர்மன் கார் தயாரிப்பு தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், இந்த ஆண்டில் அறிமுகப்படுத்த உள்ள புதிய கார்கள் என்னென்ன என்பது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில் அதன் ப்ரீமியம் மாடலான 'பசாட்' மாடலை மீண்டும் இந்தியாவில் சந்தைப்படுத்த உள்ளது, மற்றும் எஸ்யுவியான 'டிகுஆன்', 'போலோ ஜிடிஐ' ஆகிய மாடல்களையும் அறிமுகப்படுத்த உள்ளது ஃபோக்ஸ்வேகன்.

2017ல் ஃபோக்ஸ்வேகன் அறிமுகப்படுத்தும் புதிய கார்கள்!

2017ஆம் ஆண்டை பொறுத்த வரையில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய கார் சந்தையில் செயல்படத் துவங்கிய 10வது ஆண்டாகும். இதனை முன்னிட்டு சில முக்கிய கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

2017ல் ஃபோக்ஸ்வேகன் அறிமுகப்படுத்தும் புதிய கார்கள்!

முதலில் ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஃபோக்ஸ்வேகனின் ப்ரீமியம் எஸ்யுவி ‘டிகுவான்', இந்த ஆண்டில் இந்தியாவில் களம் இறக்கப்படுகிறது. இந்த மாடல் டொயோடா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டேவர் கார்களுக்கு போட்டியாக கருதப்படுகிறது.

2017ல் ஃபோக்ஸ்வேகன் அறிமுகப்படுத்தும் புதிய கார்கள்!

இந்தியாவில் அறிமுகமாக உள்ள ‘டிகுவான்' கார், 2.0 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சின் கொண்டதாக இருக்கும். இதில் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிஎஸ்ஜி கியர் பாக்ஸ் இருக்கும், மற்றும் ஐரோப்பிய சந்தையில் கிடைக்கக்கூடிய ‘டிகுஆன்'ல் உள்ள அனைத்து பாதுகாப்பு மற்றும் சிறப்பம்சங்களும் இந்திய மாடலிலும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

2017ல் ஃபோக்ஸ்வேகன் அறிமுகப்படுத்தும் புதிய கார்கள்!

கடந்த 2013ஆம் ஆண்டு ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவிலிருந்து திரும்பப்பெற்ற செடன் மாடலான பஸாத் தற்போது பல்வேறு மாறுதல்களுடன் மீண்டும் களமிறக்குகிறது.

2017ல் ஃபோக்ஸ்வேகன் அறிமுகப்படுத்தும் புதிய கார்கள்!

பல்வேறு சிறப்புகள் பொருந்திய புதிய பசாட்டில், டிகுவானில் உள்ளதைப் போன்றே 2.0 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சின் இருக்கும். இதில் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிஎஸ்ஜி கியர் பாக்ஸ் இருக்கும். இவை ‘டொயோடா கேம்ரி' மற்றும் ‘ஹோண்டா அகார்டு' மாடல்களுக்கு போட்டியாக கருதப்படுகிறது.

2017ல் ஃபோக்ஸ்வேகன் அறிமுகப்படுத்தும் புதிய கார்கள்!

இந்த மாடல்கல் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்று ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்ற போதிலும், டிகுவான் அடுத்த மாதத்திலும், பஸாத் கார் ஜீன் அல்லது ஜூலை மாதவாக்கில் அறிமுகப்படுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

2017ல் ஃபோக்ஸ்வேகன் அறிமுகப்படுத்தும் புதிய கார்கள்!

இந்த இரண்டு மாடல்கள் மட்டுமல்லாமல், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அதன் ‘போலோ ஜிடிஐ' மாடலையும் இந்த ஆண்டில் அறிமுகப்படுத்த உள்ளது. இதில் அதிகபட்சமாக 189 பிஹச்பி ஆற்றாலை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 1.8 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின் இருக்கும்.

ஃபோக்ஸ்வேகன் அறிமுகப்படுத்த உள்ள புதிய 'போலோ ஜிடிஐ' காரின் படங்கள்: 

English summary
The 2017 Volkswagen lineup for India is out and promises, even more, fun for fans of the German automotive giant in India.
Story first published: Friday, February 24, 2017, 10:46 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos