ஃபோக்ஸ்வேகனின் பஸாத் கார் ரூ. 29.99 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம்..!!

Written By:

ஃபோக்ஸ்வேகன் இந்தியா ரூ.29.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) தொடக்க விலையில் புதிய பஸாட் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

இந்தாண்டில் டிகுவான் எஸ்யூவி காருக்கு பிறகு இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் களமிறக்கும் அடுத்த கார் தான் இந்த செடான் மாடல் பஸாத்.

வேரியன்டுகள் & விலை பட்டியல்

வேரியன்டுகள் & விலை பட்டியல்

வேரியன்டுகள் விலை பட்டியல்
கம்போர்ட்லைன் ரூ.29.99 லட்சம்
ஹைலைன் ரூ.32.99 லட்சம்
Recommended Video - Watch Now!
2018 Hyundai Verna Indian Model Unveiled | In Tamil - DriveSpark தமிழ்
சிறப்பம்சங்கள் & மைலேஜ்

சிறப்பம்சங்கள் & மைலேஜ்

2017 ஃபோக்ஸ்வேகன் பஸாத் காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜிடு டீசல் எஞ்சின் உள்ளது. இதன்மூலம் 174.5 பிஎச்பி பவர் மற்றும் 350 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

6 ஸ்பீடு டிஎஸ்ஜி டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ள இந்த கார், லிட்டருக்கு 17.42 கி.மீ மைலேஜ் கிடைக்கும்.

4,767 மிமீ நீளம், 1,832 மிமீ அகலம் மற்றும் 1,456 மிமீ உயரம் கொண்ட இந்த காரின் வீல்பேஸ் 2,786 மிமீ நீளம் கொண்டது.

ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

மின்சாரத்தால் இயங்கும் திறன் பெற்ற இந்த காரின் பூட் 586 லிட்டர் கொள்ளவு கொண்டது. இதை நாம் 1,152 லிட்டர் வரை நீடித்துக்கொள்ளலாம்.

டிசைன் & அம்சங்கள்

டிசைன் & அம்சங்கள்

இந்த காரின் தோற்றம் மிகவும் கூர்மையாகவும், மிரட்டு தனை கொண்டதாகவும் இருக்கும். ஸ்டைலான எல்.இ.டி முகப்பு விளக்குகள்,

ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

ஒருங்கிணைந்த டிஆர்எல் மற்றும் கார்னரிங் விளக்குகள் போன்றவை காரின் முன்பக்கத்தில் உள்ள மூன்று அடுக்கு கிரில்லுடன் மிகவும் பொருந்து போகிறது.

ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

காரின் முன்பக்க பம்பர்களில் பனி படர்ந்த விளக்குகள் கிரோம் சுற்றுப்புறத்துடன் காரின் இரண்டு பக்கங்களிலும் இடம்பெற்றுள்ளன.

16 இஞ்ச் அல்லது 17 இஞ்ச் அலாய் சக்கரங்கள் கொண்டுள்ள இந்த கார், சி-ஷேப்டு பேட்டர்ன் பெற்ற எல்.இ.டி டெயில் விளக்குகள் மற்றும் ரியர் ஃபாக் விளக்குகளை பெற்றுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

கருப்பு நிற தோற்றத்தை பெற்றுள்ள இந்த காரின் உள்கட்டமைப்பில் உயர்ரக லெதர் வேலைபாடுகள் கொண்ட இருக்கைகள்.

சென்டர் கன்சோல் மற்றும் க்ரோம் டிரிம் கொண்ட ஏசி வெண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் ஆகிய வசதிகள் உள்ளன.

ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

மேலும் 12.3 இஞ்ச் டிஎஃப்டி டிஜிட்டல் இன்ட்ஸ்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் தொடுதிரை கொண்ட இன்ஃபொடெய்ன்மென்ட் சிஸ்டம் உள்ளது.

ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

அவற்றில் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே மற்றும் ப்ளூடூத், பார்கிங் சென்சாருக்கான டிஸ்பிளே போன்ற கட்டமைப்புகள் உள்ளன.

ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

என்ன என்றால், ஹேண்ட்ஸ்-ஃப்ரீ பார்க்கிங், பனோரோமிக் சன்ரூஃப், 3-சோன் கிளேமேட்டிக் கண்ட்ரோல், முன்பக்க இருக்கையின் மெமரி செயல்பாடு,

ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

மின்சார மாற்றியமைப்புகள் மற்றும் ஓட்டுநர் இருக்கையுடன் அமைக்கப்பட்டுள்ள லம்பார் சபோர்ட் போன்றவை பஸாத் காரில் உள்ள மிகப்பெரிய வசதிகள்.

ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

9 ஏர்பேகுகள், ஏபிஎஸ், ஏஎஸ்ஆர் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்குடன் ஆகியவற்றுடன் கூடிய இடிஎல் என இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களும் கவனமீர்க்கின்றன.

ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

புதிய ஃபோக்ஸ்வேகன் பஸாத் காரில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் அனைத்தும் இந்திய ஆட்டோதுறையை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார் இந்தியாவில் ஹோண்டா அக்கார்டு, டொயோட்டா கேம்ரி மற்றும் ஸ்கோடா சூப்பர்ப் போன்ற கார்களுக்கு போட்டியாக அமையும்.

ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

இருந்தாலும் பஸாத் காரின் ஹைஃபிரிட் கார் தொழில்நுட்பம் இல்லாதது வாடிக்கையாளர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Read in Tamil: Volkswagen Passat Launched In India after the Tiguan SUV Prices Start At Rs 29.99 Lakh. Click for Details...
Story first published: Tuesday, October 10, 2017, 16:55 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark