முரட்டு வேகம்... அசுர பாய்ச்சல்.... வோக்ஸ்வேகன் டிரக்கில் பொருத்தப்பட்ட ரோல்ஸ்-ராய்ஸ் ஜெட் எஞ்சின்

Written By:

உருக்குலைந்து குப்பையில் தூக்கிபோட்டக்கூடிய நிலையில் இருந்த வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டிரக்கிற்கு, பிரபல கஸ்டமைஸ் நிறுவனம் ஒன்று ரோல்ஸ்-ராய்ஸ் ஜெட் எஞ்சின் பொருத்தி புத்துயிர் அளித்துள்ளது.

வோக்ஸ்வேகன் டிரக்கில் ஒரு அசுரத்தனமான கஸ்டமைசேஷன்!

1950களில் வோக்ஸ்வேகன் நிறுவனம் விவசாய நில பயன்பாட்டிற்கான டிரக் வாகனங்களை தயாரித்தது.

அந்தக்காலட்டத்தில் இந்த மாடல் டிரக்குகள் உலகளவில் பெரிய வரவேற்பை பெற்றன.

வோக்ஸ்வேகன் டிரக்கில் ஒரு அசுரத்தனமான கஸ்டமைசேஷன்!

தற்போது பெரியளவில் பயன்பாட்டில் இல்லாத இந்த டிரக்கை இங்கிலாந்தை சேர்ந்த பிரபல பெர்ரி வாட்கின்ஸ் கஸ்டமைஸ் நிறுவனம் மாற்றியமைத்து இன்று ஆட்டோமொபைல் உலகையே திரும்பி பார்க்கவைத்துள்ளது.

வோக்ஸ்வேகன் டிரக்கில் ஒரு அசுரத்தனமான கஸ்டமைசேஷன்!

1958ம் ஆண்டு வோக்ஸ்வேகன் தயாரித்த இந்த டிரக்கை பெற்ற பெர்ரி வாட்கின்ஸ் நிறுவனம், அதில் தீ கக்கும் ரோல்ஸ்-ராய்ஸின் ஜெட் விமான எஞ்சினை பொருத்தியுள்ளது.

வோக்ஸ்வேகன் டிரக்கில் ஒரு அசுரத்தனமான கஸ்டமைசேஷன்!

இதனால் புத்துயிரும், புத்துணர்ச்சியும் அடைந்துள்ள டிரக், அசுர பலம் கொண்டு சீறிப் பாயும் வேகத்தை பெற்றுள்ளது.

இதனுடைய செயல்திறன் இன்று ஆட்டோமொபைல் உலகின் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது.

வோக்ஸ்வேகன் டிரக்கில் ஒரு அசுரத்தனமான கஸ்டமைசேஷன்!

வாகனங்களை கஸ்டமைஸ் செய்வதில் இங்கிலாந்து நிறுவனமான பெர்ரி வாட்கின்ஸ் உலகளவில் புகழ் பெற்றது. நாம் நினைத்து பார்த்திடாத வகையில்வாகனங்களை புதிய திறன் கொண்டு இந்நிறுவனம் கஸ்டமைஸ் செய்யும்.

வோக்ஸ்வேகன் டிரக்கில் ஒரு அசுரத்தனமான கஸ்டமைசேஷன்!

அப்படி ஒரு முரட்டுத்தனமான ஆக்கத்திறனில் அந்நிறுவனம் இறங்கிய போது உருவானது தான் வோக்ஸ்வேகன், ரோஸ்ல்-ராய்ஸ் கூட்டுக்கலவை அசுரவேக டிரக்.

சாதரண செயல்திறனுடன் காணப்பட்ட இந்த டிரக் தற்போது ஒரு மணி நேரத்தில் 480 கிலோ மீட்டரை எஞ்சினில் தீ கக்கும் வேகத்தில் பறக்க விடும்.

அசுரத்தனமான பாய்ச்சலை பெற்றுள்ள இந்த டிரக்கிற்கு பெர்ரி வாட்கின்ஸ் நிறுவனம் ’ஒக்லஹோமா வில்லி’ என்று பெயரிட்டுள்ளது.

வோக்ஸ்வேகன் டிரக்கில் ஒரு அசுரத்தனமான கஸ்டமைசேஷன்!

விவசாய நில பயன்பாட்டிற்காக 1958ல் தன் வாழ்வை தொடங்கிய இந்த டிரக், இன்று ஆட்டோமொபைல் உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

எடைக்கு போட அல்லது தூக்கி போடக்கூடிய நிலையில் தான் வோக்ஸ்வேகன் டிரக்கின் நிலைப்பாடு இருந்தது.

வோக்ஸ்வேகன் டிரக்கில் ஒரு அசுரத்தனமான கஸ்டமைசேஷன்!

புதிய கஸ்டமைஸ் வடிவமைப்பிற்கான பணிகளை எதிர்பார்த்து காத்திருந்த பெர்ரி வாட்கின்ஸிடம் டிரக் ஒப்படைக்கப்பட்ட போது, அனைத்தும் மாறிவிட்டது.

சிதைந்து போய், குப்பை நிலையில் இருந்த இந்த டிரக்கின் 68 பேனல்கள் மீது சீரமைப்பு பணிகளை பெர்ரி வாட்கின்ஸ் மேற்கொண்டுள்ளது.

வோக்ஸ்வேகன் டிரக்கில் ஒரு அசுரத்தனமான கஸ்டமைசேஷன்!

டிரக்கின் முன்பாகத்தை முற்றிலுமாக மாற்றி, அதனுடைய முழு தோற்றத்தையே மாற்றக்கூடிய அளவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அனைத்து மீள் உருவாக்க பணிகளுக்கு பிறகு 5000 பி.எச்.பி பவர் வழஙக்கூடிய ரோல்ஸ்-ராயிஸ் ஜெட் எஞ்சின் பொருத்தப்பட்டது.

இதற்கான கட்டமைப்புகள் அனைத்தும் முடிய பெர்ரி வாட்கின்ஸிற்கு கிட்டத்தட்ட 5 வருடம் ஆனது என்பது மலைக்கவைக்கும் உண்மை.

அசுரவேகத்தில் சட்டென செல்லும் 'ஒக்லஹோமா வில்லி' டிரக்கின் மின்னல் வேகத்தை பாருங்கள்.

English summary
A 1958 Volkswagen farm truck has been transformed into a jet engine flame throwing monster. The truck is powered by a Rolls-Royce jet engine.
Story first published: Monday, May 22, 2017, 13:38 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark