போலோ, ஏமியோ உள்ளிட்ட கார்களில் விழாக்கால சிறப்பு பதிப்புகளை வெளியிட்டது வோக்ஸ்வேகன்..!!

Written By:

இந்தியாவில் கால்பதித்து 10 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக வோக்ஸ்வேகன் நிறுவனம் புதிய லிமிடெட் எடிசன் மாடல் கார்களை வெளியிடுகிறது.

விழாக்காலத்தை முன்னிட்டு வோக்ஸ்வேன் வெளியிடும் புதிய கார்கள்

வோக்ஸ்ஃபெஸ்ட் 2017 என்ற பிரச்சாரத்தின் கீழ் வென்டோ ஆல்ஸ்டார், போலா ஜிடி ஸ்போர்ட், ஏமியோ மற்றும் போலோ ஏனிவெர்ஸரி எடிசன் என நான்கு கார்களை வோக்ஸ்வேகன் வெளியிட்டுள்ளது.

விழாக்காலத்தை முன்னிட்டு வோக்ஸ்வேன் வெளியிடும் புதிய கார்கள்

வோக்ஸ்ஃபெஸ்ட்டின் போது, வாடிக்கையாளர்கள் கவர்ச்சிகரமான சலுகைகள், உற்சாகமான சேவை நலன்கள் மற்றும் நாட்டில் உள்ள அனைத்து டீலர்களிடமிருந்து உத்தரவாதமான சலுகைகளையும் பெற முடியும்.

விழாக்காலத்தை முன்னிட்டு வோக்ஸ்வேன் வெளியிடும் புதிய கார்கள்

போலோ ஜிடி ஸ்போர்ட் மாடல் கார், ஜிடி டிஎஸ்ஐ மற்றும் ஜிடி டிடிஐ வேரியண்டுகளின் கீழ் தயாராகியுள்ளது. மேலும் இந்த காருக்கு 16-இஞ்ச் போர்டோகோ அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

விழாக்காலத்தை முன்னிட்டு வோக்ஸ்வேன் வெளியிடும் புதிய கார்கள்

போலோவின் ஏனிவெர்ஸரி எடிசன் காரில் 15- இஞ்ச் டூயல் ரேஸர் அலாய் சக்கரங்கள், டைமண்டு பிளாக் கவர்களாலான இருக்கைகள்.

விழாக்காலத்தை முன்னிட்டு வோக்ஸ்வேன் வெளியிடும் புதிய கார்கள்

இவற்றுடன் கிளாஸி பிளாக் ரூஃப் விராப், சைடு கிராபிக்ஸ் மற்றும்புதிய ஸ்பாய்லர் ஆகியவையும் கூடுதலாக போலோ ஏனிவெர்ஸரி எடிசனில் உள்ளன.

விழாக்காலத்தை முன்னிட்டு வோக்ஸ்வேன் வெளியிடும் புதிய கார்கள்

ஏமியோ ஏனிவர்ஸரி எடிசன் மாடலில் 15-இஞ்ச் டோஸா அலாய் சக்கரங்கள் மற்றும் ஹனிகோம்ப் இருக்கைகள் கவர்கள் போன்ற அம்சங்கள் உள்ளன.

விழாக்காலத்தை முன்னிட்டு வோக்ஸ்வேன் வெளியிடும் புதிய கார்கள்

வென்டோ ஆல்ஸ்டார் காரின் புதிய லின்ஸா அலாய் சக்கரங்கள், அலுமினியம் பெடல்ஸ், சுவாவ் பிளேக் மற்றும்

கிரே நிறங்களாலான உள்கட்டமைப்புகள் மற்றும் கோவெட்டட் ஆல்ஸ்டார் பேட்ஜ் போன்ற அம்சங்கள் உள்ளன.

விழாக்காலத்தை முன்னிட்டு வோக்ஸ்வேன் வெளியிடும் புதிய கார்கள்

வோக்ஸ்வேகனின் பயணங்கள் ரக வாகன பிரிவில் நிர்வாக இயக்குநரான ஸ்டெஃபென் கினாப் இதுப்பற்றி கூறும்போது,

"போலா மற்றும் ஏமியோ, வென்டோ ஆல்ஸ்டார் மற்றும் போலோ ஜிடி ஸ்போர்ட் போன்ற கார்கள் அறிமுகமாகவது இந்தாண்டு விழாக்காலத்தை மேலும் சிறப்பாக்கும்" என்று கூறினார்.

விழாக்காலத்தை முன்னிட்டு வோக்ஸ்வேன் வெளியிடும் புதிய கார்கள்

வோக்ஃபெஸ்ட் மூலம் மேலும் பல வாடிக்கையாளர்களுக்கான சலுகை வழங்கப்படவுள்ளது. பரிசுப் பொருட்கள், டெஸ்ட் டிரைவ் வசதி மற்றும் பல தேவைகள் பெற்ற புக்கிங் வசதி,

விழாக்காலத்தை முன்னிட்டு வோக்ஸ்வேன் வெளியிடும் புதிய கார்கள்

என பல்வேறு சலுகைகளுடன் துணைப் பொருட்கள் வாங்குவதற்கான வசதியும் ஏற்படுத்தி தரவுள்ளது.

மேலும் வாடிக்கையாளர்கள் சில காம்பிளிமென்ட்ரி சர்வீஸ் மற்றும் கூடுதலாக சில சிறப்பு சலுகைகளும் வோக்ஸ்வேகன் டீலர்களிடம் இருந்து பெறலாம்.

விழாக்காலத்தை முன்னிட்டு வோக்ஸ்வேன் வெளியிடும் புதிய கார்கள்

இந்தியாவில் பத்தாவது ஆண்டை நிறைவு செய்யும் தருணத்தில் வோக்ஸ்வேகன் சில புதிய தயாரிப்புகளை வெளியிட்டு இருப்பது பாராட்டத்தக்கது.

விழாக்காலத்தை முன்னிட்டு வோக்ஸ்வேன் வெளியிடும் புதிய கார்கள்

வோக்ஸ்ஃபெஸ்ட் என்பதை நடத்தி வாடிக்கையாளர்களுக்கான தேவைகளையும் வோஸ்வேகன் பூர்த்தி செய்கிறது.

வோக்ஸ்வேகனின் புதிய தயாரிப்புகளை நீங்கள் அறிய விரும்பினால், வோக்ஸ்ஃபெஸ்ட்டை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

English summary
Read in Tamil: Volkswagen Special Edition Polo, Vento, Amep, Launched Volksfest India. Click for Details...
Story first published: Friday, September 8, 2017, 17:05 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark