புதிய ஃபோக்ஸ்வேகன் டி-ராக் காம்பேக்ட் எஸ்யூவி வெளியீடு- படங்களுடன் தகவல்கள்!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் புத்தம் புதிய எஸ்யூவி மாடலை வெளியிட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

காம்பேக்ட் ரக எஸ்யூவி கார்களுக்கு இருக்கும் வரவேற்பால் தொடர்ந்து பல புதிய மாடல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், தற்போது ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திடமிருந்து ஒரு புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

T- Roc என்ற பெயரில் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. வழக்கம் போல் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டிசைன் தாத்பரியங்களுடன் மிக கம்பீரமான எஸ்யூவி மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி-ராக் காம்பேக்ட் எஸ்யூவி வெளியீடு- படங்களுடன் தகவல்கள்!

ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் கார் பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் டி- ராக் எஸ்யூவியூம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், ஸ்கஃப் பிளேட், பாடி கிளாடிங் சட்டங்கள், வலிமையான பாடி லைனல்கள், வீல் ஆர்ச்சுகள் போன்றவை இதனை ஒரு வலிமையான எஸ்யூவி மாடலாக காட்டுகிறது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி-ராக் காம்பேக்ட் எஸ்யூவி வெளியீடு- படங்களுடன் தகவல்கள்!

புதிய ஃபோக்ஸ்வேகன் டி-ராக் எஸ்யூவியானது மூன்று பெட்ரோல் எஞ்சின்கள் மற்றும் மூன்று டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. பெட்ரோல் மாடலில் 113 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.0 லிட்டர் எஞ்சின் ஆப்ஷனும், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸிலும் கிடைக்கும்.

Recommended Video

Tata Tiago XTA AMT Variant Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
புதிய ஃபோக்ஸ்வேகன் டி-ராக் காம்பேக்ட் எஸ்யூவி வெளியீடு- படங்களுடன் தகவல்கள்!

அடுத்து 148 பிஎச்பி பவரை வழக்க வல்ல 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும். இந்த மாடல் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தையும் பெற்றிருக்கும்.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி-ராக் காம்பேக்ட் எஸ்யூவி வெளியீடு- படங்களுடன் தகவல்கள்!

மூன்றாவதாக 187 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட சக்திவாய்ந்த 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனிலும் கிடைக்கும். டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் நிரந்தர அம்சங்களாக இருக்கும்.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி-ராக் காம்பேக்ட் எஸ்யூவி வெளியீடு- படங்களுடன் தகவல்கள்!

டீசல் மாாடலில் 113 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.6 லிட்டர் எஞ்சின் முதல் ஆப்ஷன். இதில், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அடுத்து 148 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் வருகிறது. இந்த எஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் விருப்பத்தேர்வாக இருக்கும்.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி-ராக் காம்பேக்ட் எஸ்யூவி வெளியீடு- படங்களுடன் தகவல்கள்!

மூன்றாவதாக, 187 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனிலும் வருகிறது. இந்த மாடலில் டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் நிரந்தர அம்சமாக இடம்பெற்றிருக்கும்.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி-ராக் காம்பேக்ட் எஸ்யூவி வெளியீடு- படங்களுடன் தகவல்கள்!

இந்த காருக்கு விசேஷ ஆக்சஸெரீகளை ஃபோக்ஸ்வேகன் வழங்க இருக்கிறது. இந்த ஆக்சஸெரீகளை கொண்டு காரை அலங்கரித்து கொள்ளலாம். வெளிப்புறத்திற்கு இரட்டை வண்ண தேர்விலும் வாடிக்கையாளர்கள் வாங்க முடியும். அதற்கு தக்கவாறு இன்டீரியர் வண்ணத்தையும் தேர்வு செய்து கொள்ள முடியும்.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி-ராக் காம்பேக்ட் எஸ்யூவி வெளியீடு- படங்களுடன் தகவல்கள்!

புதிய ஃபோக்ஸ்வேகன் டி-ராக் எஸ்யூவியில் 6.5 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கும். 8.0 அங்கு தொடுதிரையையும் விருப்பத்தின்பேரில் வாங்கிக் கொள்ளலாம்.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி-ராக் காம்பேக்ட் எஸ்யூவி வெளியீடு- படங்களுடன் தகவல்கள்!

இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும். 11.7 அங்குலை திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி-ராக் காம்பேக்ட் எஸ்யூவி வெளியீடு- படங்களுடன் தகவல்கள்!

அடுத்த மாதம் முதல் இங்கிலாந்தில் இந்த புதிய எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்குகிறது. வரும் டிசம்பரில் இந்த எஸ்யூவியின் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்க இருக்கிறது. விலை விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

Most Read Articles
English summary
Volkswagen has revealed the much-talked about T-Roc compact SUV.
Story first published: Friday, August 25, 2017, 13:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X