ஆடம்பர வசதிகள் அட்டகாசமான தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் வெளிவரும் வோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி!

Written By:

வோக்ஸ்வேகன் தயாரிப்பில் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டிகுவான் எஸ்.யூ.வி கார் இம்மாதம் 24ம் தேதி வெளியிடப்படுகிறது.

கம்பர்ட்லைன் மற்றும் ஹைலைன் என இரண்டு வகைகளில் வோக்ஸ்வேன் டிகுவான் எஸ்.யூ.வி காரை தயாரித்துள்ளது வோக்ஸ்வேகன். 

இந்தியாவில் வெளியாகும் வோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்.யூ.வி

5 பேர் உட்காரக்கூடிய அளவில் டிகுவான் எஸ்.யூ.வி கார், முந்தைய மாடலை விட 50 கிலோ எடை குறைவாக தயாரிக்கப்பட்டுள்ளது.

வரும் 24ம் தேதி இந்தியாவில் டிகுவான் வெளியிடப்படவுள்ளதை அதிகாரப்பூர்வமாக தனது வலைதளத்தில் அறிவித்துள்ளது வோக்ஸ்வேகன்.

இந்தியாவில் வெளியாகும் வோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்.யூ.வி

இந்தியாவில் அவுரங்காராபத்தில் செயல்படும் வோக்ஸ்வேனுக்கு சொந்தமான தொழிற்சாலையில் இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியாவில் வெளியாகும் வோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்.யூ.வி

அவுரங்காபாத் மற்றும் மஹாராஷ்டிராவின் சில பகுதிகளிலும் டிகுவான் எஸ்.யூ.வி காரை வோஸ்க்வேகன் சோதனை செய்தது.

அப்போது வெளியாகி வைரலான புகைப்படங்களால் இந்திய வாடிக்கையாளர்களிடம் இந்த காரின் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவானது.

இந்தியாவில் வெளியாகும் வோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்.யூ.வி

அப்போது கிடைத்த படங்களை வைத்து வோஸ்வேகன் டிகுவான் எஸ்.யூ.வி காரின் சிறப்பம்சங்களை நமது ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் வெளியிட்டனர்.

எஸ்.இ.டி முகப்பு விளக்குகள், குராமில் தயாரான முன்பக்க கிரில் மற்றும் ஸ்டைலான பின் விளக்குகள் ஆகியவை இதனுடைய தோற்றத்தை இன்னும் மெருகேற்றுகின்றன.

இந்தியாவில் வெளியாகும் வோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்.யூ.வி

வோக்ஸ்வேகன் டிகுவானின் டேஸ்போர்டின் வடிவமைப்பு முற்றிலும் கருப்பு நிறம் கொண்டுள்ளது. இதனுடைய இன்ஃபோடெய்மெண்ட் சிஸ்டம், கன்சோல் மற்றும் தட்பவெட்ப நிலைக்கு ஏற்றவாறு மாறக்கூடிய கிளைமேட்டிக் கண்டோர்ல் எல்லாம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்தியாவில் வெளியாகும் வோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்.யூ.வி
  • 6 ஏர் பேகுகள்
  • தானியங்கி பிரேக் அமைப்பு (ABS)
  • மின்னணு உறுதிப்பாடு (ESC)
  • இழுவை கட்டுப்பாட்டு அமைப்பு (ASR)
  • இரண்டு முனைகளிலும் டிஸ்க் பிரேக்

என பாதுகாப்பு தொழில்நுட்பங்களிலும் வோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்.யூ.வி கார் மிகுந்த கவனம் ஈர்க்கிறது.

இந்தியாவில் வெளியாகும் வோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்.யூ.வி

புதிய டிகுவான் எஸ்.யூ.வி காரில் பரந்துவிரிந்த வெளிப்புற காட்சிகளை தரும் சன்ரூஃப், உயர் ரக லெதர்களை கொண்டு உருவாக்கப்பட்ட இருக்கைகள், நிறைவான ஏசி சேவை, சுற்றுப்புற பகுதிகளுக்கான லைட்டிங், வெப்பத்தை தணிக்கக்கூடிய வின்ஷீல்டு, மின்சார முறையால் இயங்கும் முன்பக்க இருக்கை என பல வரவேற்க தக்க வசதிகள் உள்ளன.

இந்தியாவில் வெளியாகும் வோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்.யூ.வி

4 சிலிண்டர் TDI டீசல் எஞ்சின் கொண்ட வோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்.யூ.வி கார் 147 பி.எச்.பி பவர் மற்றும் 330 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

இதில் 7-ஸ்பீடு டி.எஸ்.ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் காரின் நான்கு சக்கரங்களையும் ஓட்டுநர் கட்டுப்படுத்தலாம்.

இந்தியாவில் வெளியாகும் வோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்.யூ.வி

ஆடம்பர, தோற்றம், சிறப்பம்சம், வடிவமைப்பு, தேவை என அனைத்திலும் கவனம் பெறும் டிகுவான் எஸ்.யூ.வி காரை வோக்ஸ்வேகன், ஹீண்டாய் டஸ்கான் மற்றும் ஜீப் காம்பஸ் மாடல்களுக்கு போட்டியாக வெளியிடுகிறது.

இந்தியாவில் வெளியாகும் வோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்.யூ.வி

இந்திய வாடிக்கையாளர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கார் ரூ. 20 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மாதம் 24ம் தேதி வெளியாகும் வோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்.யூ.வி காரை குறித்த மேலும் பல தகவல்களை அறிய தொடர்ந்து டிரைவ்ஸ்பார்க் வலைதளத்துடன் இணைந்திருங்கள்.

English summary
The new Volkswagen Tiguan SUV will be launched on May 24, 2017, in India; to be offered in two variants.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark