உலக நாடுகளில் பிரபலமான ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம்: முழு தகவல்கள்..!

Written By:

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 100 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கியுள்ள புதிய எம்க்யூபி (MQB) பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்ட இரண்டாம் தலைமுறை டிகுவான் கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் ஆகியுள்ளது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் கார் இந்தியாவில் அறிமுகம்..!

இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் செயல்படத்துவங்கியதன் 10வது ஆண்டை முன்னிட்டு சில புதிய மாடல்களை இந்தாண்டில் அறிமுகப்படுத்த உள்ளதாக ஏற்கெனவே தெரிவித்திருந்தது ஃபோக்ஸ்வேகன். இதனையொட்டி புதிய டிகுவான் எஸ்யூவி காரை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது அந்நிறுவனம்.

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் கார் இந்தியாவில் அறிமுகம்..!

எம்க்யூபி பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் அறிமுகமாகும் முதல் கார் டிகுவான் எஸ்யூவி என்பதால் இதன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்த கார் அமைந்துள்ளது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் கார் இந்தியாவில் அறிமுகம்..!

ஃபோக்ஸ்வேகனின் துணை பிராண்டுகளான ஆடியின் ஏ3, க்யூ2, ஸ்கோடாவின் சூப்பர்ப், கோடியாக் உள்ளிட்ட கார்கள் இந்த புதிய எம்க்யூபி பிளாட்ஃபார்மில் தான் தயாரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் கார் இந்தியாவில் அறிமுகம்..!

புதிய டிகுவான் கார் 5 சீட்டர்கள் கொண்டதாகவும் அதிக உட்புற இடவசதி கொண்ட காராகவும் உள்ளது. கடந்த ஆண்டு டெட்ராய்ட் மோட்டார் கண்காட்சியில் இந்தக் கார் முதன் முறையாக அறிமுகம் ஆன போதே அதன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் கார் இந்தியாவில் அறிமுகம்..!

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி காரில் பகல்நேரத்தில் எரியும் வகையிலான எல்ஈடி விளக்குகளுடன் கூடிய எல்ஈடி முகப்பு விளக்குகள், அகலமான கிரில் அமைப்பு கொண்ட முகப்பு, செஃல்ப் சீலிங் டயர்களுடன் கூடிய 17 இஞ்ச் அலாய் வீல்கள் உள்ளது.

ஸ்போர்ட்ஸ் வடிவ ரூஃப் மவுண்டட் ரியர் ஸ்பாய்லர், எல்ஈடி டெயில் லைட்டுகள் உள்ளது. இதன் டெயில் கேட்டை பவர் பட்டன் மூலமாக மூடிக்கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்

சிறப்பு அம்சங்கள்

டிகுவான் எஸ்யூவி காரின் உட்புற அம்சங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

 • டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் (ஆண்ட்ராய்ட்/ஆப்பிள் கார் பிளே சப்போர்ட்டட்)
 • எலக்ட்ரானிக் அட்ஜஸபிள் முன்புற சீட்கள்
 • ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல்
 • பனோரமிக் சன் ரூஃப்

5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பு கொண்ட டிகுவான் காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் கீழ்கண்டவாறு..

 • 6 ஏர்பேக்குகள்
 • ஈபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்
 • ஹில் டிசெண்ட் கண்ட்ரோல்
 • ஹில் ஹோல்ட்
 • பார்க் டிஸ்டன்ஸ் கண்ட்ரோல்
 • ரிவர்ஸ் கேமராக்கள்
இஞ்சின்

இஞ்சின்

2017 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் கார் டீசல் எஞ்சினில் மட்டுமே கிடைக்கிறது. இதில் 2.0 லிட்டர் டர்போசார்ஜூடு டீசல் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 148 பிஹச்பி ஆற்றலையும், 340 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இதில் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பிரத்யேக 4 மோஷன் ஃபோர் வீல் டிரைவ் சிஸ்டம் இஞ்சினின் ஆற்றலை 4 வீல்களுக்கும் பகிர்ந்து அளிக்கிறது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் கார் இந்தியாவில் அறிமுகம்..!

டிகுவான் கார் கம்ஃபர்ட்லைன் (Comfortline) மற்றும் ஹைலைன் (Highline) என்ற இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

டிகுவான் கார் 4 வண்ணங்களில் கிடைக்கிறது.

 • டங்ஸ்டன் சில்வர் (Tungsten Silver)
 • அட்லாண்டிக் புளூ (Atlantic Blue)
 • இண்டியம் கிரே (Indium Grey)
 • டீப் பிளாக் (Deep Black)
புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் கார் இந்தியாவில் அறிமுகம்..!
 • புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி கார் 0-100 கிமீ வேகத்தை வெறும் 9.3 வினாடிகளில் எட்டிப்பிடித்துவிடும்.
 • இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 200 கிமீ ஆகும்.
 • டிகுவான் கார் லிட்டருக்கு 17.06 கிமீ மைலேஜ் தர வல்லது.
விலை விபரம்

விலை விபரம்

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியான விலை விபரம்.

 • கம்ஃபர்ட்லைன் (Comfortline) - ரூ.27.68 லட்சம்
 • ஹைலைன் (Highline) - ரூ.31.04 லட்சம்
English summary
Read in Tamil about Volkswagen launches new tiguan suv car in india. price, specs and more
Story first published: Thursday, May 25, 2017, 7:20 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark