ஃபோக்ஸ்வேகனின் புதிய வெண்டோ ஹைலைன் பிளஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

Written By:

ஜென்மனியைச் சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டோ கண்காட்சியில் 'வெண்டோ ஹைலைன் பிளஸ்' காரை முதல்முறையாக காட்சிப்படுத்தியது. இது வெண்டோ காரின் உயர் ரக வேரியண்டாகும். தற்போது இக்காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்.

ஃபோக்ஸ்வேகனின் புதிய வெண்டோ ஹைலைன் பிளஸ் கார் அறிமுகம்!

இது வரையிலும் வெண்டோ காரின் உயர் ரக வேரியண்டாக, ‘வெண்டோ ஹைலைன்' இருந்து வந்தது. தற்போது வெண்டோ ஹைலைன் பிளஸ் கார் அந்த இடத்தை பிடித்துள்ளது. புதிய ஹைலைன் பிளஸ் காரில் வெண்டோ ஹைலைன் வேரியண்டில் இருந்த அனைத்து அம்சங்களுடன், கூடுதலாக பல புதிய அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

வெளிப்புற சிறப்பம்சங்கள்

வெளிப்புற சிறப்பம்சங்கள்

புதிய ஹைலைன் பிளஸ் வேரியண்டில் பகல் நேரத்தில் எரியும் எல்ஈடி விளக்குகளுடன் கூடிய முழுமையான எல்ஈடி முகப்பு விளக்கு, ஸிர்கோனியா அலாய் வீல்கள், 3டி வகை எல்ஈடி பின்புற விளக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

உட்புற சிறப்பம்சங்கள்

உட்புற சிறப்பம்சங்கள்

மேலும் ரியர் வியூ பார்க்கிங் கேமரா, இண்டிகேட்டர்களுடன் கூடிய வெளிப்புற ரியர் வியூ கண்ணாடிகள், தானியங்கி மழை உணர்வு வைப்பர்கள், ஒளியை தானியங்கி முறையில் கட்டுப்படுத்தும் உட்புற ரியர் வியூ கண்ணாடி, குளிரூட்டப்பட்ட யுடிலிட்டி பாக்ஸ், ரியர் ஏசி வசதி மற்றும் மல்டி ஃபங்ஷனல் ஸ்டீரிங் வீல் ஆகியவை உள்ளன.

ஃபோக்ஸ்வேகனின் புதிய வெண்டோ ஹைலைன் பிளஸ் கார் அறிமுகம்!

தற்போது கிடைத்து வரும் வெண்டோ கார் 3 இஞ்சின் ஆஃப்ஷன்களில் கிடைத்து வருகிறது. புதிய வெண்டோ ஹைலைன் பிளஸ் வேரியண்ட் காரும் இந்த 3 வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும்.

இஞ்சின்

இஞ்சின்

வெண்டோ ஹைலைன் பிளஸ் கார், 4 சிலிண்டர்கள் கொண்ட 1.6 லிட்டர் எம்பிஐ , 4 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் டிஎஸ்ஐ டர்போசார்ஜூடு ஆகிய இரண்டு பெட்ரோல் இஞ்சின் வேரியண்ட்களிலும், 4 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் டர்போசார்ஜூடு என்ற டீசல் இஞ்சின் வேரியண்டிலும் கிடைக்கிறது.

ஃபோக்ஸ்வேகனின் புதிய வெண்டோ ஹைலைன் பிளஸ் கார் அறிமுகம்!

இதில் டீசல் வேரியண்ட் கார்களில் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் ஆஃப்ஷன் கிடைக்கிறது. 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் வேரியண்டில் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் மட்டுமே கிடைக்கிறது. இதேபோல 1.6 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் வேரியண்ட்டில் மேனுவல் கியர் பாக்ஸ் மட்டுமே கிடைக்கிறது.

விலை விவரம்

விலை விவரம்

புதிய வெண்டோ ஹைலைன் பிளஸ் காரின் விலைப்பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

பெட்ரோல் 1.6 லிட்டர் ( மேனுவல்) - ரூ.10.84 லட்சம்

பெட்ரோல் 1.2 லிட்டர் ( ஆட்டோமேடிக்) - ரூ.12.06 லட்சம்

டீசல் 1.5 லிட்டர் ( மேனுவல்) - ரூ.12.20 லட்சம்

டீசல் 1.5 லிட்டர் ( ஆட்டோமேடிக்) - ரூ.13.43 லட்சம்

அனைத்தும் மும்பை எக்ஸ் ஷோரூம் விலை அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகனின் புதிய வெண்டோ ஹைலைன் பிளஸ் கார் அறிமுகம்!

சி-செக்மெண்ட் செடன் என்ற செக்மெண்டில் உள்ள வெண்டோ கார், மாருதிசுசுகி சியாஸ், ஹோண்டா சிட்டி மற்றும் ஹூண்டாய் வெர்னா ஆகிய மாடல்களுடன் போட்டியில் உள்ளது.

ஃபோக்ஸ்வேகனின் புதிய வெண்டோ ஹைலைன் பிளஸ் கார் அறிமுகம்!

கடந்த பிப்ரவரி மாதம் ஹோண்டா சிட்டியின் மேம்படுத்தப்பட்ட மாடல் அறிமுகமானது. இதே போல வரும் ஆகஸ்ட் மாதத்தில் அடுத்த தலைமுறை வெர்னா மாடலை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள நிலையில் மாருதியும் அதன் மேம்படுத்தப்பட்ட சியாஸ் காரை ஆண்டின் இறுதிக்குள் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Volkswagen Vento Highline Plus Launched in india, new volkswagen car launch in india

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark