வால்வோ வி90 கிராஸ் கண்ட்ரி கார் இந்தியாவில் வெளியானது; விலை, சிறப்பம்சங்களுடன் கூடிய முழுத் தகவல்கள்

Written By:

வால்வோ நிறுவனம் கிராஸ் கண்ட்ரி முறையில் மூன்றாவதாக ஒரு காரை வெளியிட்டுள்ளது. வி40 கிராஸ் கண்ட்ரி, எஸ்60 கிராஸ் கண்ட்ரி மாடல்களை தொடர்ந்து வெளியாகியுள்ள இந்த புதிய மாடலுக்கு வால்வோ,  வி90 கிராஸ் கண்ட்ரி என்ற பெயரை வழங்கியுள்ளது.

கிராஸ் கண்ட்ரி முறையில் வால்வோ வெளியிட்ட வி90 எஸ்யூவி கார்!

எஸ்.90 செடான் மாடலை அடிப்படையாகக் கொண்டு புதிய வி90 கிராஸ் கண்ட்ரி காரை வால்வோ உருவாக்கியுள்ளது.

டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையில் ரூ.60 லட்சம் மதிப்பில் வெளிவந்துள்ள இந்த கார் இந்தியாவின் முதல் ஆடம்பர வேகான் மாடலாகும்.

கிராஸ் கண்ட்ரி முறையில் வால்வோ வெளியிட்ட வி90 எஸ்யூவி கார்!

முற்றிலும் எஸ்.90 செடான் போலில்லாமல், காரின் முன், பின் என இரண்டு பக்கங்களிலும் இருக்கும் பம்பர்கள், ரூஃப் ரெயில்ஸ் மற்றும் பாடி கிளாடிங் போன்றவற்றில் சில மாற்றியமைக்கப்பட்ட தோற்றங்களை நாம் பார்க்க முடிகிறது.

கிராஸ் கண்ட்ரி முறையில் வால்வோ வெளியிட்ட வி90 எஸ்யூவி கார்!

20 அங்குல அளவில் அலாய் வீல்கள் இந்த காரில் உள்ளதால், எஸ்90 செடான் மாடலைக்காட்டிலும் இதனுடைய கிரவுண்ட் கிளயரன்ஸ் 210மிமீ வரை உயர்ந்த நிலையில் உள்ளது.

கிராஸ் கண்ட்ரி முறையில் வால்வோ வெளியிட்ட வி90 எஸ்யூவி கார்!

வால்வோவின் மற்றொரு தயாரிப்பான எக்ஸ்.சி 90 எஸ்.யூ.வி காரில் உள்ள டி5 டீசன் எஞ்சின் தான் வி90 கிராஸ் கண்ட்ரி காரில் இடம்பெற்றுள்ளது. இது 235 பிஎச்பி பவர் மற்றும் 430 என்.எம் டார்க் திறனை அதிகபட்சமாக வழங்கும்.

எஞ்சினில் உள்ள திறனை சக்கரங்களுக்கு கடத்த இந்த காரில் 8-ஸ்பீடு தானாக இயக்கம் பெற்ற கியர்பாஸ் உள்ளது.

கிராஸ் கண்ட்ரி முறையில் வால்வோ வெளியிட்ட வி90 எஸ்யூவி கார்!
வால்வோ வி90 கிராஸ் கண்ட்ரி காரின் Specifications 2.0 டீசல்
எஞ்சின் 1,969சிசி
பவர் 235பி.எச்.பி
அதிகப்பட்ச டார்க் திறன் 430என்.எம்
கியர்பாக்ஸ் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக்
கிராஸ் கண்ட்ரி முறையில் வால்வோ வெளியிட்ட வி90 எஸ்யூவி கார்!

உட்கட்டமைப்பில் 12.3 அங்குல தொடுதிரை வசடி உடன் கூடிய டிரைவர் டிஸ்பிளே உள்ளது. இதனுடைய வடிவமைப்பு டாஷ்போர்ட்டின் கட்டமைப்பிற்கே ஒரு அழகு சேர்கிறது.

கிராஸ் கண்ட்ரி முறையில் வால்வோ வெளியிட்ட வி90 எஸ்யூவி கார்!

மேலும், 4 ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, பனரோமிக் சன்ரூஃப், சீட் மெமரி - எலெக்ட்ரிக்கல் அட்ஜஸ்ட் வசதியுடன் கூடிய முன்பக்க இருக்கைகள் என இதிலுள்ள மேலும் சிறப்பம்சங்களின் பட்டியல் நீள்கிறது

கிராஸ் கண்ட்ரி முறையில் வால்வோ வெளியிட்ட வி90 எஸ்யூவி கார்!

காரை பார்க்கிங் செய்வதற்கான எச்சரிக்கை, லேன் எச்சரிக்கை, பிளைண்ட் ஸ்பாட் தகவல் அமைப்பு, மலைபிரதேசங்களில் எளிதான பயணத்தை வழங்கும் தொழில்நுட்பம் மற்றும் எச்சரிக்கை போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் 7 ஏர் பேகுகள் போன்ற வசதிகள் வி90 கிராஸ் கண்ட்ரி காரில் உள்ளடக்கியுள்ளது.

கிராஸ் கண்ட்ரி முறையில் வால்வோ வெளியிட்ட வி90 எஸ்யூவி கார்!
வால்வோ வி90 கிராஸ் கண்ட்ரி கார் அளவு
நீளம் 4,938மிமீ
அகலம் 2,019மிமீ
உயரம் 1,542மிமீ
வீல் பேஸ் 2,941மிமீ
கிரவுண்ட் கிளயரென்ஸ் 210மிமீ
கிராஸ் கண்ட்ரி முறையில் வால்வோ வெளியிட்ட வி90 எஸ்யூவி கார்!

சாலைகளின் கட்டமைப்பு மற்றும் வேகத்திற்க்கு ஏற்றவாறு எவ்வாறு கார்களை இயக்கவேண்டும் என்பதற்கான அடேப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் தொழில்நுட்பம் இதில் உள்ளது.

கிராஸ் கண்ட்ரி முறையில் வால்வோ வெளியிட்ட வி90 எஸ்யூவி கார்!

இவை தானாக இயங்கும் திறன் பெற்றவை. ஓட்டுநர் காரை இயக்கும் விதத்தை வைத்து அடேப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் எச்சரிக்கைகளை வழங்கும் .

கிராஸ் கண்ட்ரி முறையில் வால்வோ வெளியிட்ட வி90 எஸ்யூவி கார்!

சந்தை நிலவரத்தை பொறுத்தவரை வி90 கிராஸ் கண்ட்ரி எஸ்.யூ.வி ரக கார், பிஎம்டபுள்யூ எக்ஸ்3, ஆடி கியூ 3 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ்- ஜிஎல்இ கார்களுக்கு போட்டியுடன் களமிறங்குகிறது.

மேலும்... #வால்வோ #volvo
English summary
Read in Tamil: V90 Cross Country is India's first luxury crossover station wagon launched wit high expectation. Click for Details...
Story first published: Thursday, July 13, 2017, 13:40 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos