வோக்ஸ்வேகன் பொறியாளருக்கு 40 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு..!!

Written By:

வோக்ஸ்வேகன் நிறுவனத்தை சேர்ந்த பொறியாளர் ஒருவருக்கு அமெரிக்காவின் டெட்ராய்டு மாகண நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டை விதித்து தீர்பளித்துள்ளது.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
வோக்ஸ்வேகன் பொறியாளருக்கு சிறை... தொடரும் மாசு உமிழ்வு மோசடி

அமெரிக்காவின் சுற்றுப்புற விதிகளுக்கு புறம்பாக வோக்ஸ்வேகன் அதிக மாசு உமிழ்வு செய்யும் டீசல் கார்கள் உருவாக்கி பல ஆண்டுகளாக விற்பனை செய்து வந்தது.

வோக்ஸ்வேகன் பொறியாளருக்கு சிறை... தொடரும் மாசு உமிழ்வு மோசடி

இது குறித்த வழக்கு 2015ம் ஆண்டில் பதியப்பட்ட போது, இந்த செய்தி அமெரிக்காவை மட்டுமல்லாமல், உலகளவில் பல நாடுகளிடமும் வாடிக்கையாளர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வோக்ஸ்வேகன் பொறியாளருக்கு சிறை... தொடரும் மாசு உமிழ்வு மோசடி

இதற்காக வோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு அபாரதம் விதித்ததுடன், அது தயாரித்த கார்களை திரும்பப் பெறவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறி இருந்தது.

வோக்ஸ்வேகன் பொறியாளருக்கு சிறை... தொடரும் மாசு உமிழ்வு மோசடி

எனினும் இதுதொடர்பான விசாரணை ஒன்று அமெரிக்காவின் டெட்ராய்டு மாகாணத்தின் நீதிமன்றம் ஒன்றில் நடைபெற்று வந்தது.

Recommended Video
Tata Tiago XTA AMT Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
வோக்ஸ்வேகன் பொறியாளருக்கு சிறை... தொடரும் மாசு உமிழ்வு மோசடி

இதுதொடர்பான தீர்ப்பை கடந்த வெள்ளிக்கிழமை வழங்கிய நீதிபதி ஷான் காக்ஸ், வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிலை பொறியாளர் ஜேம்ஸ் லியாங்கிற்கு 3 ஆண்டுகள் மற்றும் 4 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்பளித்தார்.

வோக்ஸ்வேகன் பொறியாளருக்கு சிறை... தொடரும் மாசு உமிழ்வு மோசடி

பரப்பான தீர்ப்பு குறித்து விவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், ஜேம்ஸ் லியாங்க் வோக்ஸ்வேகனில் பணிபுரிந்த சமயத்தில்

வோக்ஸ்வேகன் பொறியாளருக்கு சிறை... தொடரும் மாசு உமிழ்வு மோசடி

அமெரிக்க சுற்றுப்புற சூழல் விதிகளுக்கு பொருந்தாத கட்டமைப்புகளை கொண்டு கார்களை தயாரிக்கும் பணியை செய்துள்ளார்.

வோக்ஸ்வேகன் பொறியாளருக்கு சிறை... தொடரும் மாசு உமிழ்வு மோசடி

மேலும் சுற்றுப்புற சூழலை பாழ் படுத்தும் கருவிகளை பொருத்தி ஸ்போர்ட்ஸ் மற்றும் டீசல் தர வாகனங்களின் விற்பனைக்கு ஜேம்ஸ் லியாங்க் அனுமதி அளித்துள்ளார்.

வோக்ஸ்வேகன் பொறியாளருக்கு சிறை... தொடரும் மாசு உமிழ்வு மோசடி

அமெரிக்காவின் சட்டவிதிகளுக்கு பொருந்தாத கார்களை வடிவமைத்ததில் அவருக்கு பெரும் பங்கு இருந்ததாகவும் அரசின் தரப்பு வழக்கறிஞர் மார் சட்கவ் தனது வாதத்தில் குறிப்பிட்டார்.

வோக்ஸ்வேகன் பொறியாளருக்கு சிறை... தொடரும் மாசு உமிழ்வு மோசடி

இதன்மூலம் வோக்ஸ்வேகன் தயாரித்த டீசல் கார்கள் சட்டவிதிகளுக்குள் குறிப்பிட்டுள்ள விதிகளை விட சுமார் 40 சதவீதம் வரை மாசு உமிழ்வு செய்ததாக அவர் தெரிவிக்கிறார்.

வோக்ஸ்வேகன் பொறியாளருக்கு சிறை... தொடரும் மாசு உமிழ்வு மோசடி

இவை அனைத்தும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வோக்ஸ்வேகனின் முன்னாள் பொறியாளர் ஜேம்ஸ் லியாங்கிற்கு 3 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் சிறை தண்டை விதிக்கப்பட்டது.

வோக்ஸ்வேகன் பொறியாளருக்கு சிறை... தொடரும் மாசு உமிழ்வு மோசடி

மேலும் 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் அபாரதமும் விதிக்கப்பட்டது. ஜேம்ஸ் லியாங் உடன் மேலும் 8 வோக்ஸ்வேகனின் அதிகாரிகளுக்கும் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

English summary
Read in Tamil: Volkswagen Former Engineer Sentenced to 40 Months Prison in term in diesel gate case. Click for Details...
Story first published: Saturday, August 26, 2017, 13:10 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos