ரோபோ கைகளில் மாட்டி சிக்கித்தவித்த சிரோன் காரின் வைரல் வீடியோ

புகாட்டி நிறுவனம் தன்னுடைய சிரோன் காரின் திறனை அறிந்துகொள்வதற்காக நடத்திய சோதனை பற்றி இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

By Azhagar

புகாட்டி நிறுவனம் தனது கார்களை எவ்வளவு திறன் கொண்டு உருவாக்கிறதோ, அதற்கு ஏற்றவாறான சோதனைகளையும் மேற்கொள்ளும்.

இதுதான் லிமிட் என்றால், அதை தனது கார்கள் தாக்குபிடிக்கிறதா என்பதை அறிய புகாட்டி தீவிர சோதனைகளை செய்யும் . சோதனையின் போது பணியாளர்களுடன் ரோப்போக்களும் களத்தில் இறங்கும்.

சமீபத்தில் தனது புதிய தயாரிப்பு கார் ஒன்றை புகாட்டி சோதனையிட்ட போது வெளியான காட்சிப் பதிவை பாருங்கள், பிறகு உங்களுக்கே புகாட்டி மீதான் நம்பகத்தன்மை உருவாகும்.

சிரோன் காரை சகட்டுமேனிக்கு சோதனை செய்த புகாட்டி

வீடியோவை பார்த்த உங்களுக்கு நம்பகத்தன்மை வந்ததா! கண்டிப்பாக வந்திருக்கும். புகாட்டியின் சமீபத்திய தயாரிப்பான சிரோன் கார் இந்த விடியோவில் சோதனை செய்யப்பட்டுள்ளது.

சிரோன் கார் ஹைப்பர் மாடல் என்பதால், இது ஒரு அதீத சோதனை என்றே சொல்லலாம்.

சிரோன் காரை சகட்டுமேனிக்கு சோதனை செய்த புகாட்டி

1500 பி.எச்.பி பவரைக் கொண்ட சிரோன் கார் மீது நடத்தப்பட்ட சோதனை, வீடியோவாக எடுக்கப்பட்டு, அது ட்விட்டரிலும் டிரெண்டாகி உள்ளன. இதனால் தற்போது பல வலைதள வாசிகளிடையே, இந்த சோதனை எப்படி நடத்தப்பட்டது, எதற்காக நடத்தபப்ட்டது என்பன போன்ற விவாதங்களும் உருவாகியுள்ளன.

சிரோன் காரை சகட்டுமேனிக்கு சோதனை செய்த புகாட்டி

விவாதங்களில் நமக்கு கிடைத்த தகவலின் படி, சிரோன் காரின் இருவேறு தொழில்நுட்ப திறன்களை கணக்கிட ஊழியர்கள் சோதனை செய்துள்ளனர். ஒன்று, சஸ்பென்ஷனுக்காவும் மற்றொன்று எஞ்சின் திறனுக்காகவும்.

சஸ்பென்ஷன் அமைப்பு முற்றிலும் ரோபோக்களை கொண்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. சிரோன் காரின் முன்பாகத்தை இழுத்தும், வலிந்து இழுத்தும் சஸ்பென்ஷனின் திறன் முழுவதுமாக கணக்கிடப்பட்டுள்ளது.

சிரோன் காரை சகட்டுமேனிக்கு சோதனை செய்த புகாட்டி

சோதனையின் போது சஸ்பென்ஷன் தேறிவிட்டால், எஞ்சினுக்கான சோதனை இன்னும் வெறியை கிளப்பும். ரிக் என குறிப்பிடப்படும் அமைப்பைக்கொண்டு தான் புகாட்டி காருக்கான சோதனைகள் செய்யப்பட்டும்.. டம்மியாக இருக்கும் கார்களுக்கு உயிராக இருந்தும் உயிராக மாறியும் ரிக் அமைப்பு இயங்கும்.

சிரோன் காரை சகட்டுமேனிக்கு சோதனை செய்த புகாட்டி

ரிக் என்ற அமைப்பு காரின் பின்பகுதி, முன்பகுதி, முனைகள் என எல்லா இடத்திலும் சரிபார்க்கும். காரின் கட்டமைப்புகளை வலைத்தும், இழுத்தும் பார்க்கும். ரிக் அமைப்பு கையில் கார் கிடைத்தால் அது என்ன வேண்டுமாலும் செய்யும்.

சிரோன் காரை சகட்டுமேனிக்கு சோதனை செய்த புகாட்டி

புகாட்டி நிறுவனத்தின் ரிக் அமைப்பு, மேற்கூறிய எல்லா செயல்களுக்கு பின் ஒருமுறை காரை முழுவதுமாக தூக்கி கீழே போடும். இந்த செயல் மூலம், எஞ்சினில் ஆயில் கசிவு உள்ளதா? தட்பவெட்ப நிலைக்கு ஏற்றவாறு ஆயிலை எஞ்சின் பாதுகாக்குமா போன்ற விஷயங்களும் கவனிக்கப்படும்.

Most Read Articles
English summary
Bugatti tests its cars to its limits to make sure the hypercars can handle the big power and tough race tracks. Watch the video of intense test rigs in the Bugatti factory.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X