முதல் லம்போர்கினி சென்டினாரியோ சூப்பர் கார் டெலிவிரி

Written By:

முதல் லம்போர்கினி சென்டினாரியோ சூப்பர் கார் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த வாடிக்கையாளருக்கு டெலிவிரி கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

முதல் லம்போ சென்டினாரியோ சூப்பர் கார் டெலிவிரி!

லம்போர்கினி நிறுவனத்தின் ஸ்தாபகர் ஃபெருஷியோ லம்போர்கினியின் நூறாவது பிறந்தநாளை கொண்டாடும் விதத்தில் பிரத்யேக சூப்பர் கார் மாடலை லம்போர்கினி அறிவித்தது. லம்போர்கினி அவேன்டேடார் அடிப்படையில் கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்த கார் தயாரிக்கப்பட்டது.

முதல் லம்போ சென்டினாரியோ சூப்பர் கார் டெலிவிரி!

கடந்த ஆண்டு ஜெனிவா மோட்டார் ஷோவில் லம்போர்கினி சென்டினாரியோ என்ற பெயரில் இந்த ஸ்பெஷல் கார் அறிமுகம் செய்யப்பட்டது. மொத்தமாக 40 லம்போர்கினி சென்டினாரியோ கார்கள் மட்டுமே உலக அளவில் விற்பனை செய்யப்படும் என்ற தகவலையும் வெளியிட்டது லம்போர்கினி கார் நிறுவனம்.

முதல் லம்போ சென்டினாரியோ சூப்பர் கார் டெலிவிரி!

இதில், 20 கார்கள் கூபே ரகத்திலும், 20 கார்கள் திறந்த மூடும் கூரை அமைப்புடைய ரோட்ஸ்டெர் மாடல்களாகவும் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது. இதில், ரோட்ஸ்டெர் மாடல் கடந்த ஆண்டு பெபுள் பீச் கன்கர்ஸ் டிஎலிகன்ஸ் கார் திருவிழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

முதல் லம்போ சென்டினாரியோ சூப்பர் கார் டெலிவிரி!

இந்த நிலையில், மிகவும் பிரத்யேகமான முதல் லம்போ சென்டினாரியோ காரை ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு டெலிவிரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆரஞ்ச் மற்றும் கருப்பு வண்ண பெயின்டிங்குடன் அசத்துகிறது அந்த லம்போர்கினி கார்.

முதல் லம்போ சென்டினாரியோ சூப்பர் கார் டெலிவிரி!

கூரை, சைடு மிரர்கள் உள்ளிட்ட பாகங்கள் கருப்பு வண்ணம் கொடுக்கப்பட்டு மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது. இந்த காரில் இருக்கும் 6.5 லிட்டர் வி12 எஞ்சின் அதிகபட்சமாக 770 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக உள்ளது. 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

முதல் லம்போ சென்டினாரியோ சூப்பர் கார் டெலிவிரி!

0-100 கிமீ வேகத்தை வெறும் 2.8 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 350 கிமீ வேகம் வரை தொட்டுவிடும் வல்லமை கொண்டது லம்போர்கினி சென்டினாரியோ கார்.

முதல் லம்போ சென்டினாரியோ சூப்பர் கார் டெலிவிரி!

இந்த காரை 10 மில்லியன் திராம் விலையில்[இந்திய மதிப்பில் ரூ.18 கோடி] ஐக்கிய அரபு அமீரக வாடிக்கையாளர் வாங்கி இருக்கிறாராம். மீதமுள்ள அனைத்து சென்டினாரியோ கார்களுக்கும் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்கள்!

புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
Read in Tamil: The world's first Lamborghini Centenario has been delivered to a customer in UAE. Only 40 units of the limited edition model will be manufactured.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark