புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் குறித்து 10 முக்கிய விஷயங்கள்!

Written By:

அடுத்த மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய கார் குறித்த 10 முக்கிய விஷயங்களை இந்த செய்தியில் காணலாம்.

01. தலைமுறை மாற்றம்

01. தலைமுறை மாற்றம்

கடந்த 2005ம் ஆண்டு மாருதி ஸ்விஃப்ட் கார் முதன்முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர், 2011ம் ஆண்டில் இரண்டாம் தலைமுறை மாடல் விற்பனைக்கு கொாண்டு வரப்பட்டது. தொடர்ந்து இப்போது மூன்றாம் தலைமுறை மாடலாக புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

02. புதிய பிளாட்ஃபார்ம்

02. புதிய பிளாட்ஃபார்ம்

மாருதி பலேனோ கார் போன்றே, புதிய மாருதி ஸ்விஃப்ட் காரும் 5வது தலைமுறை ஹார்டெக் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால், பழைய மாடலைவிட 40 கிலோ எடை குறைந்துள்ளது. அத்துடன், அதிக வீல்பேஸ் மற்றும் இடவசதியை பெற்றிருக்கிறது.

03. இடவசதி

03. இடவசதி

புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் நீளத்தில் 10 மிமீ குறைக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், வீல்பேஸ் 20 மிமீ அதிகரிக்கப்பட்டு இருப்பதும், அகலம் 40 மிமீ வரை கூடி இருப்பதும் உட்புறத்தில் அதிக இடவசதியை தருகிறது. அத்துடன், உடைமைகளை வைப்பதற்கான பூட்ரூம் இடவசதி 58 லிட்டர் அதிகரித்துள்ளது.

Recommended Video - Watch Now!
Andhra Pradesh State Transport Bus Crashes Into Bike Showroom - DriveSpark
04. பின் இருக்கை

04. பின் இருக்கை

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் பின்புற இருக்கையின் ஹெட்ரூம் பகுதி 24மிமீ அதிகரித்துள்ளது. மேலும், இருக்கை அமைப்பும் அமர்ந்து செல்வதற்கு சவுகரியமான உணர்வை வழங்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.

05. மிடுக்கான தோற்றம்

05. மிடுக்கான தோற்றம்

புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் தோற்றத்தில் மிக சிறப்பான மாற்றங்களுடன் வருகிறது. முகப்பு க்ரில், ஹெட்லைட், டெயில் லைட் ஆகியவை மிக சிறப்பான ஆளுமையை புதிய ஸ்விஃப்ட் காருக்கு வழங்குகின்றன. குறிப்பாக, கருப்பு வண்ண சி பில்லர் ஹூண்டாய் ஐ20 காரில் இருப்பது போன்று கவர்ச்சியை கூட்டுகிறது.

06. முக்கிய வசதிகள்

06. முக்கிய வசதிகள்

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் இசட் ப்ளஸ் என்ற விலை உயர்ந்த வேரியண்ட்டில் 15 அங்குலம் உடைய இரட்டை வண்ண அலாய் வீல்கள், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ரியர் கேமரா உள்ளிட்ட பல உயரிய வசதிகள் இடம்பெற்று இருக்கும்.

07. ஏஎம்டி கியர்பாக்ஸ்

07. ஏஎம்டி கியர்பாக்ஸ்

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரில் முதல்முறையாக ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. ஆனால், ஏஎம்டி என்ற இந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்கள் ஸ்விஃப்ட் காரின் வி மற்றும் இசட் வேரியண்ட்டுகளில் மட்டுமே கிடைக்கும். இசட் ப்ளஸ் வேரியண்ட்டுகளில் கிடைக்காது.

08. எஞ்சின் ஆப்ஷன்கள்

08. எஞ்சின் ஆப்ஷன்கள்

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரில் 83 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 74 பிஎச்பி பவரை அளிக்கும் 1.3 லிட்டர் டீசல்ல எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது. 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் தேர்வு செய்து கொள்ளலாம்.

09. வண்ணங்கள்

09. வண்ணங்கள்

புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் 6 வண்ணத் தேர்வுகளில் வருகிறது. உட்புறம் முற்றிலும் கருப்பு வண்ண பாகங்களை பெற்றிருக்கிறது. தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல் மற்றும் வட்ட வடிவிலான ஏசி கட்டுப்பாட்டு பட்டன்கள் போன்றவையும் முக்கிய அம்சங்கள்.

10. முன்பதிவு

10. முன்பதிவு

கடந்த 11ந் தேதி முதல் புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு முன்பதிவு நடந்து வருகிறது. ரூ.11,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். மாருதி அரேனா ஷோரூம்கள் வழியாக புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் விற்பனை செய்யப்படும்.

English summary
10 Important Things To Know About New Maruti Swift Car.
Story first published: Wednesday, January 24, 2018, 10:38 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark