இந்தியராக இருந்தால் இந்த கார்கள் மீது ஆசைப்பட கூடாது.. இல்லாவிட்டால் பாகிஸ்தான் போக ரெடியா இருங்க..

இந்தியாவை காட்டிலும் வளர்ச்சியில் பின்தங்கிய நாடு பாகிஸ்தான். நமது கார் இன்டஸ்ட்ரியை போல் பாகிஸ்தானின் கார் இன்ட்ஸ்ட்ரி இன்னும் வளர்ச்சியடையவில்லை.

By Arun

இந்தியாவை காட்டிலும் வளர்ச்சியில் பின்தங்கிய நாடு பாகிஸ்தான். நமது கார் இன்டஸ்ட்ரியை போல் பாகிஸ்தானின் கார் இன்ட்ஸ்ட்ரி இன்னும் வளர்ச்சி அடையவில்லை. எனினும் பாகிஸ்தானின் கார் மார்க்கெட், ஆச்சரியம் அளிக்கும் வகையில் சில அற்புதமான கார்களை பெற்றுள்ளது. நமது நாட்டில் கூட அந்த கார்கள் கிடைப்பதில்லை. அப்படி பாகிஸ்தானுக்கு கிடைத்து, இந்தியாவுக்கு கிடைக்காத சில நல்ல கார்கள் பற்றிய ருசிகரமான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

இந்தியராக இருந்தால் இந்த கார்கள் மீது ஆசைப்பட கூடாது.. இல்லாவிட்டால் பாகிஸ்தான் போக ரெடியா இருங்க..

டொயோட்டா ஹுலக்ஸ்

டொயோட்டா ஹுலக்ஸ் போன்ற பிக் அப் டிரக்குகள் இந்தியாவில் எப்போதுமே பிரபலம் அடைந்தது கிடையாது. இசூசு (Isuzu) வி-க்ராஸ் பிக் அப் டிரக் கூட இந்தியாவில் சொற்ப எண்ணிக்கையில்தான் விற்பனையானது. இதனால் டொயோட்டா ஹுலக்ஸ் இந்தியாவில் கிடைக்காமல் போனதில் பெரிய ஆச்சரியமில்லை.

இந்தியராக இருந்தால் இந்த கார்கள் மீது ஆசைப்பட கூடாது.. இல்லாவிட்டால் பாகிஸ்தான் போக ரெடியா இருங்க..

டொயோட்டா ஹுலக்ஸ் ஒரு பிக் அப் டிரக்தான். பாகிஸ்தானில் விற்பனையாகும் டொயோட்டா ஹுலக்ஸில், 2755 சிசி, 4 சிலிண்டர், டார்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின், 130 பிஎஸ் பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

இந்தியராக இருந்தால் இந்த கார்கள் மீது ஆசைப்பட கூடாது.. இல்லாவிட்டால் பாகிஸ்தான் போக ரெடியா இருங்க..

டொயோட்டா அவென்ஜா

இன்னோவா கிரிஸ்டா எம்பிவி காரை காட்டிலும், டொயோட்டா அவென்ஜா கார் சிறியது. இந்த கார் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவது இல்லை. ஆனால் பாகிஸ்தானில் கிடைக்கிறது. டொயோட்டா அவென்ஜா கார் ஏறக்குறைய மாருதி எர்டிகா காரின் அளவில் இருக்கும்.

இந்தியராக இருந்தால் இந்த கார்கள் மீது ஆசைப்பட கூடாது.. இல்லாவிட்டால் பாகிஸ்தான் போக ரெடியா இருங்க..

டொயோட்டா அவென்ஜா காரில் பொருத்தப்பட்டுள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 103 பிஎச்பி பவரை உருவாக்கும் திறனுடையது. தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மிகவும் புகழ்பெற்ற எம்பிவி காராக விளங்கும் டொயோட்டா அவென்ஜாவில், 7 பேர் சௌகரியமாக அமர்ந்து பயணிக்கலாம்.

இந்தியராக இருந்தால் இந்த கார்கள் மீது ஆசைப்பட கூடாது.. இல்லாவிட்டால் பாகிஸ்தான் போக ரெடியா இருங்க..

பிஎம்டபிள்யூ எம்2

பிஎம்டபிள்யூ 2-சீரிஸ் இந்தியாவில் இன்னும் அறிமுகமாகவில்லை. ஆனால் பாகிஸ்தான் கார் மார்க்கெட் பிஎம்டபிள்யூ எம்2 உள்பட ஒட்டுமொத்த 2-சீரிஸ் ரேஞ்ச் கார்களையும் பெற்றுவிட்டது. 1 சீரிஸ் எம் கூப் காரின் வாரிசுதான் எம்2.

இந்தியராக இருந்தால் இந்த கார்கள் மீது ஆசைப்பட கூடாது.. இல்லாவிட்டால் பாகிஸ்தான் போக ரெடியா இருங்க..

பிஎம்டபிள்யூ எம்2 காரில் பொருத்தப்பட்டுள்ள 3.0 லிட்டர் ஸ்ட்ரெய்ட் 6 இன்ஜின் 370 பிஎச்பி பவரையும், 465 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். பிஎம்டபிள்யூ எம்2 விரைவில் இந்தியாவில் லான்ச் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பிஎம்டபிள்யூ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எதையும் கூறவில்லை.

இந்தியராக இருந்தால் இந்த கார்கள் மீது ஆசைப்பட கூடாது.. இல்லாவிட்டால் பாகிஸ்தான் போக ரெடியா இருங்க..

ஹோண்டா சிவிக்

தற்போதைய தலைமுறை ஹோண்டா சிவிக் பேஸ்லிப்ட் அடுத்த ஆண்டுதான் இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் லேட்டஸ்ட் சிவிக், பாகிஸ்தானில் தற்போதே கிடைக்கிறது. நடப்பாண்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அதே கார்தான் இது.

இந்தியராக இருந்தால் இந்த கார்கள் மீது ஆசைப்பட கூடாது.. இல்லாவிட்டால் பாகிஸ்தான் போக ரெடியா இருங்க..

10ம் தலைமுறை ஹோண்டா சிவிக் காரான இதில், 1.8 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் 8ம் தலைமுறை ஹோண்டா சிவிக் காரில் இடம்பெற்றிருக்கும் அதே இன்ஜின்தான் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியராக இருந்தால் இந்த கார்கள் மீது ஆசைப்பட கூடாது.. இல்லாவிட்டால் பாகிஸ்தான் போக ரெடியா இருங்க..

ஹோண்டா எச்ஆர்-வி

உலகம் முழுவதும் வெற்றிகரமாக விற்பனையாகும் கார்களில் ஒன்று ஹோண்டா எச்ஆர்-வி. எஸ்யூவி வகை காரான இது, இந்தியாவில் கிடைக்காது. ஆனால் பாகிஸ்தானில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள 1.5 லிட்டர் iVTEC பெட்ரோல் இன்ஜின், 118 பிஎச்பி பவரையும், 145 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

இந்தியராக இருந்தால் இந்த கார்கள் மீது ஆசைப்பட கூடாது.. இல்லாவிட்டால் பாகிஸ்தான் போக ரெடியா இருங்க..

சுசூகி விட்டாரா

இந்தியாவில் அறிமுகமாகாமல், பாகிஸ்தானில் கிடைக்கும் மற்றொரு எஸ்யூவி கார் சுசூகி விட்டாரா. ஹுண்டாய் கிரெட்டா காருடன் ஒப்பிடுகையில், சுசூகி விட்டாரா சற்றே சிறிய கார்.

இந்தியராக இருந்தால் இந்த கார்கள் மீது ஆசைப்பட கூடாது.. இல்லாவிட்டால் பாகிஸ்தான் போக ரெடியா இருங்க..

பாகிஸ்தானில் விற்பனையாகும் சுசூகி விட்டாரா காரில், 1.6 லிட்டர், 4 சிலிண்டர், பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 115 பிஎச்பி பவரை உருவாக்கும். இந்த எஸ்யூவி காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 185 எம்எம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியராக இருந்தால் இந்த கார்கள் மீது ஆசைப்பட கூடாது.. இல்லாவிட்டால் பாகிஸ்தான் போக ரெடியா இருங்க..

கியா ஸ்போர்ட்டேஜ்

புகழ்பெற்ற கொரியன் ஆட்டோமொபைல் நிறுவனமான கியா, இந்தியாவில் இன்னும் எந்தவிதமான கார் விற்பனையையும் தொடங்கவில்லை. ஆனால் பாகிஸ்தானில் ஏற்கனவே கியா மோட்டார்ஸ் நிறுவனம், கார் விற்பனையை தொடங்கிவிட்டது.

இந்தியராக இருந்தால் இந்த கார்கள் மீது ஆசைப்பட கூடாது.. இல்லாவிட்டால் பாகிஸ்தான் போக ரெடியா இருங்க..

பல நாடுகளில் பாராட்டப்பட்ட கியா ஸ்போர்ட்டேஜ் கார், பாகிஸ்தானில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த காரில் 2.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 182 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் உடையது.

இந்தியராக இருந்தால் இந்த கார்கள் மீது ஆசைப்பட கூடாது.. இல்லாவிட்டால் பாகிஸ்தான் போக ரெடியா இருங்க..

இதுதவிர கியா ரியோ காரும், பாகிஸ்தானில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1.2 லிட்டர் மற்றும் 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் கியா ரியோ கார் விற்பனைக்கு வருகிறது. இதில், 1.2 லிட்டர் மோட்டார் 83 பிஎச்பி பவரையும், 1.4 லிட்டர் இன்ஜின் 99 பிஎச்பி பவரையும் உருவாக்கும்.

இந்தியராக இருந்தால் இந்த கார்கள் மீது ஆசைப்பட கூடாது.. இல்லாவிட்டால் பாகிஸ்தான் போக ரெடியா இருங்க..

டொயோட்டா ஹியாஸ்

பாகிஸ்தான் கார் மார்க்கெட்டில் சிறப்பாக விற்பனையாகி கொண்டிருக்கும் பெரிய சைஸ் வேன் டொயோட்டா ஹியாஸ். 13 பேர் சௌகரியமாக பயணிக்கலாம் என்பதால், வணிக பயன்பாட்டு செக்மெண்டில் டொயோட்டா ஹியாஸ் சக்கை போடு போடுகிறது. பாகிஸ்தானில், 2.5 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 2.7 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் டொயோட்டா ஹியாஸ் கிடைக்கிறது.

இந்தியராக இருந்தால் இந்த கார்கள் மீது ஆசைப்பட கூடாது.. இல்லாவிட்டால் பாகிஸ்தான் போக ரெடியா இருங்க..

சுசூகி ஜிம்னி

லேட்டஸ்ட் ஜிம்னி, இந்தியாவிற்கு இன்னும் வரவில்லை. ஆனால் பாகிஸ்தானில் தற்போதே கிடைக்கிறது. ஜிப்ஸியில் உள்ள அதே G13 1.3 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான் இதிலும் பொருத்தப்பட்டுள்ளது. ஜிம்னியின் மோட்டார் 80 பிஎச்பி பவரையும், 110 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

Most Read Articles
English summary
10 INTERESTING cars Pakistan gets but India doesn’t: Suzuki Jimny to Honda Civic. Read in tamil.
Story first published: Thursday, June 14, 2018, 19:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X