புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

Written By:

வடிவமைப்பு மற்றும் வசதிகளில் மேம்படுத்தப்பட்டு இருக்கும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி வரும் 18ந் தேதி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், இந்த புதிய மாடலில் இடம்பெற்றிருக்கும் 10 முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி 4 வேரியண்ட்டுகளில் வர இருக்கிறது. வசதிகள், கியர்பாக்ஸ் மற்றும் தொழில்நுட்பங்களை பொறுத்து, W5, W7, W9 மற்றும் W11 ஆகிய வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதில், டாப் வேரியண்ட்டான W11 வேரியண்ட்டில் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட W11 Plus மாடலும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவியின் முக்கிய மாற்றமாக, இதில் இருக்கும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் இரண்டு விதமான ட்யூனிங்கில் வர இருக்கிறது. ஏற்கனவே இருந்த 140 பிஎச்பி பவரையும், 330 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல ஒரு மாடலும், புதிதாக 157 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல மற்றொரு மாடலிலும் வர இருக்கிறது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

இதில், 157 பிஎச்பி பவரை அளிக்க வல்ல எஞ்சின் மாடல் W11 வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும். அதேபோன்று, இந்த மாடலில் மட்டுமே ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் தொழில்நுட்ப வசதியும் இடம்பெற்றிருக்கும்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து, 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலிலும் வர இருக்கிறது. பெட்ரோல் மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் நிரந்தர அம்சமாகவும், டீசல் மாடலில் ஆப்ஷனலாகவும் கிடைக்கும்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் புதிய க்ரில் அமைப்பு மற்றும் பெரிய அளவிலான புரொஜெக்டர் ஹெட்லைட், புதிய எல்இடி பகல்நேர விளக்குகள் இடம்பெற்றிருக்கும். L- வடிவிலான அலங்கார ஆக்சஸெரீயுடன் கூடிய பனி விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. புதிய ஏர்டேம் அமைப்பும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

எல்இடி டர்ன் இன்டிகேட்டர் பொருத்தப்பட்ட ரியர் வியூ மிரர்கள், புதிய அலாய் வீல்கள், புதிய எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவையும் முக்கிய அம்சங்கள். டெயில் லைட் க்ளஸ்ட்டரின் டிசைன் முக்கோண வடிவில் மாறி இருக்கிறது. நம்பர் பிளேட் பகுதியும் பெரிதாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் இன்டீரியரிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. சென்டர் கன்சோல் பியானோ பிளாக் என்ற விசேஷ கருப்பு வண்ணத்தில் தனித்துவம் பெற்றிருப்பதுடன் ஃபாக்ஸ் அலுமினிய அலங்கார பீடிங்குகளும் கொடுக்கப்பட்டு இருப்பது பிரிமியம் மாடலாக தோற்றமளிக்கும்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் அலுமினியம் பெடல்கள், புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெற இருக்கிறது. மிரர் லிங்க் மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய சாப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும் இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

கேபினில் கூடுதல் ஸ்டோரேஜ் வசதிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. புஷ் பட்டன் ஸ்டார்ட், புதிய ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, சன்ரூஃப் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களுடன் வருகிறது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் பேஸ் வேரியண்ட்டுகளில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தகர பாதுகாப்பு அம்சங்களாக இருக்கும், டாப் வேரியண்ட்டுகளில் கூடுதல் ஏர்பேக்குகள் வசதி இருக்கும். கீ லெஸ் என்ட்ரி, ஹில் ஹோல்டு அசிஸ்ட், டிசென்ட் அசிஸ்ட், ரியர் வியூ கேமரா மற்றும் பார்க்கிங் சென்சார்களுடன் வருகிறது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி ரூ.13 லட்சம் முதல் ரூ.18 லட்சம் இடையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
10 Things You Need To know About Mahindra XUV500 Facelift.
Story first published: Friday, April 13, 2018, 19:07 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark